For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இன்னும் வராத ரஜினியின் 2.0-வைக்கூட விட்டு வைக்காத தமிழ்படம் 2... ஒன்இந்தியா விமர்சனம்!

  |

  Rating:
  3.0/5
  சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகள் என ஒருவர் பாக்கி இல்லை. அனைவரையும் வச்சு செய்து விட்டது சி.எஸ்.அமுதனின் தமிழ்படம் 2.

  தமிழ்ப் படம் முதல் வெர்ஷனில் நடந்த கலாய் கலவரங்களைப் பார்த்து மிரண்டு போயிருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை 2வது பதிப்பு பூர்த்தி செய்திருக்கிறதா என்பதை அறிவதற்கு முன்பு கதைச் சுருக்கத்தைப் பாரப்போம்.

  கதை சுருக்கம்

  மதுரைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் சாதிக் கலவரம் வெடிக்கிறது. போலீஸ், ராணுவம் என யாராலும் கட்டுப்படுத்த முடியாத அந்த கலவரத்தை அடக்க முன்னாள் போலீஸ் அதிகாரியான சிவா, பயங்கர பில்டப்புடன் களமிறங்குகிறார். மொக்கையாக பேசியே கலவரத்தை அடக்கும் சிவாவை, மீண்டும் போலீசில் சேரும்படி வற்புறுத்துகிறார் உயரதிகாரி சேத்தன். ஆனால் அதை சிவா மறுத்துவிடவே, கடுப்பாகும் வில்லன் 'பி', சிவாவின் மனைவி திஷா பாண்டேவை கொலை செய்து லட்சியத்தை சாதிக்கிறார்.

  Tamilpadam 2 review

  மீண்டும் போலீசில் இணையும் சிவா, வில்லன் பி-யை பழிவாங்க துடிக்கிறார். ஆனால் சாகாவரம் பெற்ற வில்லன் பி அதை முறியடிக்க பறக்கிறார். கடைசியில் என்ன ஆகிறது.. எல்லோரும் எப்படி கண்டம் ஆனார்கள் என்பது மீதிக் கதை (அதை போய் தியேட்டரில் பார்த்து தெரிஞ்சிக்குங்க பாஸ்!).

  காட்சிகள்

  மேல சொன்ன விஷயங்கள் அனைத்தும் படத்தின் காட்சிகளை இணைப்பதற்காக இயக்குனர் பயன்படுத்தியிருக்கும் உத்தி மட்டுமே. காட்சிக்கு காட்சி உள்ளூர் சினிமா முதல் ஹாலிவுட் சினிமா வரை நையாண்டி செய்திருக்கிறார்கள். பழைய தேவர் மகன், லேட்டஸ்ட் கபாலி, அதுக்கு சீனியரான மெட்ராஸ், வேதாளம், வீரம், விவேகம், துப்பாக்கி, வேட்டையாடு விளையாடு, விஸ்வரூபம், வேலையில்லா பட்டதாரி, பாகுபலி, வால்டர் வெற்றிவேல் என 30க்கும் அதிகமான படங்களின் காட்சிகளை கேலி செய்திருக்கிறார் இயக்குனர் அமுதன். இதுகூட பரவாயில்லை... இன்னும் திரைக்கே வராத ரஜினியின் 2.0 படத்தையும் விட்டு வைக்கவில்லை தமிழ்படம் 2.

  ரஜினி, கமல், அஜீத், விஜய், விஷால், தனுஷ், சூர்யா, ஸ்ருதிஹாசன், ஜெனிலியா, ரித்விகா எம்.ஜி.ஆர்., டி.ராஜேந்தர் வரை வகை தொகை இல்லாமல் கலாய்த்திருக்கிறார்கள். சினிமா நடிகர்கள் மட்டுமல்ல நரேந்திர மோடி, ஓ.பன்னீர்செல்வம், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை இயக்குனர். வச்சு செய்து விட்டார்கள்.

  Tamilpadam 2 review

  முதல் பாதியில் ஓரளவுக்கு விறுவிறுப்பாக நகரும் காட்சிகள், இடைவேளைக்கு பிறகு கடுப்பேற்ற தொடங்குகிறது. பின்பாதியின் நீளத்தை குறைத்திருக்கலாம். ஆனால் ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ் நடிகர்களுக்கு கேட்டிருக்கும் போல. அவர்களே அதை திரையில் சொல்லுகிறார்கள்.

  முதல் பாகத்தை போலவே இதிலும் சிவாவின் நண்பர்களாக வயதான யூத்துகள் ஆர்.சுந்தர்ராஜன், சந்தானபாரதி, மனோபாலா. ஆனால் முதல் பாகம் அளவுக்கு இதில் காமெடி இல்லை. ஜீவா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி ஆகியோர் திடீரென திரையில் தோன்றி சர்ப்ரைஸ் தருகிறார்கள்.

  Tamilpadam 2 review

  இந்த கலாய் போதுமா...

  ரஜினியின் டைட்டில் கார்டு போலவே அகில உலக சூப்பர் ஸ்டார் பட்டத்தோடு என்ட்ரியாகிறார் சிவா. முதல் காட்சியில் இருந்து கடைசி வரை தனது கவுண்டர் பன்ச் டயலாக்குகளால் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். விழுந்து விழுந்து சிரிக்காவிட்டாலும், பெரும்பகுதி படத்தை என்ஜாய் செய்யும் அளவுக்கு என்டர்டெயின் செய்கிறார் சிவா. விஷாலில் ஆரம்பித்து, ரஜின், கமல், அஜித், விஜய், தனுஷ் என அனைவரையும் நையாண்டி செய்திருக்கிறார். 'உனக்கு நடிக்க வராது... எனக்கு நடிப்புன்னா என்னான்னே தெரியாது' வசனம் குபீர் சிரிப்பை வரவைக்கிறது.

  Tamilpadam 2 review

  சர்ப்ரைஸ் வில்லன் சதீஷ்

  நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு இதில் காமெடி வில்லன் ப்ரொமோஷன். மொத்தம் 15 கெட்டப்புகள். தேவர் மகன் நாசர், 16 வயதினிலே பரட்டையில் இருந்து 2.0 வில்லன் அக்ஷய் குமார் வரை அனைத்து வில்லன் கெட்டப்புகளையும் போட்டு லைக்ஸ்களை அள்ளுகிறார். சாகாவரம் பெற்ற வில்லன் பீயாராக அசத்தியிருக்கிறார். ஆனால் சிரிப்பு மூட்ட தவறிவட்டார்.

  Tamilpadam 2 review

  முதல் பாகத்தை போலவே இதிலும் ஒரு பாட்டி. பறவை முனியம்மாவுக்கு பதிலாக கல்யாணி. ஆனால் அவருக்கு பெரிய வேலை ஏதும் இல்லை. அதேபோல கஸ்தூரிக்கு இந்த படத்திலும் ஒரு ஐடம் சாங். அந்த பாடல் வரும் சூழ்நிலையும், இடம்பெறும் இடமும் செம கலாய். சிவாவின் ரசிக்கும்படியான நடிப்பிற்காக படத்தை பார்க்கலாம்.

  Tamilpadam 2 review

  பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஓபிஎஸ்சின் தர்மயுத்தம், சசிகலாவின் சாமாதி சத்தியம் என பல சுவாரஸ்ய கலாய்கள் இருந்தாலும், ஒரு சில சிறுபிள்ளை தனமான காட்சிகள் வெறுப்பேற்றுகிறது. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்திருக்கிறதா.. அதை ரசிகர்களே சொல்ல வேண்டும்!.

  அப்பறம்பாஸ்.. இந்த விமர்சனத்தையும் நீங்க தாராளமாக டிரோல் செய்யலாம்.. வி ஆர் ஆல்சோ வெய்ட்டிங்!

  English summary
  The tamil movie Tamilpadam 2, which is a spoof comedy movie is a real entertainer for comedy lovers. This movie decently trolls many tamil movies and political incidents.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X