Tanakkaran Review: டாணாக்காரன் ரிவ்யூ... அசத்தலா? சொதப்பலா?... படம் எப்படி இருக்கு ?

Rating:
3.5/5

நடிகர்கள் : விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், எம்.எஸ்.பாஸ்கர், மதுசூதனன் ராவ்

இசை : ஜிப்ரான்

எழுத்து, இயக்கம் : தமிழ்

சென்னை : போலீஸ் படங்கள், விளையாட்டை மையமாகக் கொண்ட படங்களின் வரிசையில் புதிதாக வந்துள்ள படம் டாணாக்காரன். 1997 ம் ஆண்டு போலீஸ் டிரெயினிங்கின் போது நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம்.

படத்தை பார்க்கிறவர்களுக்கு வெற்றிமாறன் படத்தை பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளது. வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்த தமிழ் தான் இந்த படத்தை எழுதி, இயக்கி உள்ளார். Potential Studios தயாரித்துள்ள இந்த படம் நேரடியாக ஓடிடி.,யில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

படத்தில் என்ன சொல்கிறார்கள்

படத்தில் என்ன சொல்கிறார்கள்

போலீஸ் பயிற்சி, அங்கு நடக்கும் பாரைடு (Parade) நடக்கும் நிகழ்வுகள், பல வித பிரச்சனைகள், இடைஞ்சல்கள், போராட்டங்களைத் தாண்டு ஒரு இளைஞன் எப்படி போலீஸ் ஆகிறான் என்பது தான் படத்தில் கதை. போலீஸ் பயிற்சி மையத்தில் ஒரு டீமின் தலைவராக ஈஸ்வர மூர்த்தி என்ற கேரக்டரில் லால் அசல் போலீசாகவே மாறி உள்ளார். மற்றொரு டீமுக்கு தலைவராக எம்.எஸ்.பாஸ்கரும் நடித்துள்ளார். இத்தனை போராட்டங்களையும் தாண்டி ஹீரோவான விக்ரம் பிரபு கடைசியில் போலீஸ் ஆகிறாரா இல்லையா என்பது தான் டாணாக்காரன் படத்தின் கதை. இரண்டு போலீஸ் அணிகள் இடையேயான பாரைடில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது தான் படத்தின் கதை.

சோகமான இன்டர்வல்

சோகமான இன்டர்வல்

போலீஸ் பயிற்சி மையத்தில் என்னவெல்லாம் நடக்கிறது, எப்படி எல்லாம் கடுமையான பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது என்பதை அக்குவேரு ஆணி வேராக எடுத்து சொல்லி இருக்கிறார் டைரக்டர். போலீஸ் தொடர்பான சின்ன விஷயங்களை கூட மிக அழகாக, தெளிவாக தொட்டு சென்றுள்ளார் டைரக்டர். போலீஸ் பயிற்சியின் கடுமையின் உச்சத்தை காட்டுவதாக, வயதில் மூத்தவரான ஒருவர் எப்படியும் போலீஸ் ஆக வேண்டும் என்ற வெறியுடன் பயிற்சிக்கு வருகிறார். ஆனால் கடுமையான பயிற்சிகள் காரணமாக அவர் உயிரிழக்கிறார். ஒரு மெல்லிய சோகம், ட்விஸ்ட் ஆகியவற்றுடன் இன்டர்வெல் விடுகிறார்கள்.

படம் எப்படி இருக்கு

படம் எப்படி இருக்கு

ஃபர்ஸ்ட் ஆஃப் எந்த அளவிற்கு விறுவிறுப்பாகவும், ஆச்சரியங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறதோ அதற்கு நேர் மாறாக செகண்ட் ஆஃப்பில் அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்கக் கூடியதாக இருக்கிறது. அடுத்து வரும் சீன், பாடல் உள்ளிட்டவைகளை முன்பே ஈசியாக கணிக்க முடிகிறது என்பதால் படத்தில் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைவதாக உள்ளது. ஃபர்ஸ்ட் ஆஃப் அசுத்தலாகவும், செகண்ட் ஆஃப் சுமாராகவும் உள்ளது.

அழுத்திச் சொல்லப்பட்ட விஷயம்

அழுத்திச் சொல்லப்பட்ட விஷயம்

இதற்கிடையில் இத்தனை கஷ்டங்களையும் தாண்டி போலீசாக வேண்டும் என விக்ரம் பிரபு ஏன் விடாபிடியாக இருக்கிறார் என்பதற்கு ஒரு குட்டி ஃபிளாஷ்பேக் காட்டப்படுகிறது. லிவிங்ஸ்டன் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் மிக அழுத்தமான நடிப்பை வெளியிப்படுத்தி உள்ளார். அஞ்சலி நாயரும் காக்கிச் சட்டையில் தனக்கு கீழ் உள்ளவர்களை உருட்டி மிரட்டும் சீன்களில் க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட படமாக இருந்தாலும் ED (EXTRA DRILL) என்ற விஷயத்தை மிக அழுத்தமாக, தெள்ள தெளிவாக காட்டி உள்ளார் டைரக்டர்.

பாடல்கள் எப்படி

ஜிப்ரான் வழக்கம் போல் இசையில் மிரட்டி உள்ளார். இரண்டு பாடல்கள் மட்டுமே இருந்தாலும் மனதில் பதிவதாக உள்ளது. சந்துருவின் வரிகளில் கட்டிக்கோடா, துடித்தெழு தோழா ஆகிய இரு பாடல்களும் ரசிக்கும்படி உள்ளன. ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம், காக்கி சட்டைகளின் பாரைடுகளை மிக அழகாக காட்சிப்படுத்தி அசத்தி உள்ளார். வேலூர் வெயிலையும் படத்தில் மிக கச்சிதமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். மொத்தத்தில் டாணாக்காரன் பார்க்கலாம், பாராட்டலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X