twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அக்காங்கரவ அடுத்த அம்மா மாதிரி , தம்பி படம் உணர்த்தும் கதை

    |

    Rating:
    3.5/5
    Star Cast: கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், நிகிலா விமல், இளவரசு
    Director: ஜீத்து ஜோசப்

    15 வருடங்களாக காணாமல் போன தம்பியை நினைத்து எங்கும் அக்காவின் கதை மற்றும் தனது மகன் மீண்டும் வர வேன்டும் என்று என்னும் அப்பாவின் கதையும் என்றும் சொல்லலாம்.

    தம்பி என்ற தலைப்பு சீமான் இயக்கிய 2006 வருடத்தின் மாதவன் படத்திற்கு வைக்கபட்டு இருந்தது ,அந்த தலைப்பை மீட்டெடுத்து இந்த படத்தில் வைத்து இருக்கிறார்கள் .அது ஒரு அரசியல் படம் இது அப்படியே அதற்கு எதிரான ஒரு குடும்ப படம். இன்னும் சொல்ல போனால் குடும்ப அரசியல் படம்.

    Thambi movie is based on sisters love and brothers affection

    ஜோதிகாவின் தம்பி 15 வருடங்களுக்கு முன்னால் காணாமல் போகிறான்.
    அவனை மீண்டும் தங்களது குடும்பத்தினர் உடன் இணைக்க நிணைக்கிறார் அப்பா சத்யராஜ்.
    அம்மா சீதா பாட்டி செளகார் ஜானகி தங்களது மகன்/பேரன் வருவான் என்று நம்புகின்றனர் கடைசியில் தங்களுடன் இணைந்தார்களா? , தம்பி ஏன் விட்டை விட்டு சென்றான் போன்ற பல கேள்விகளும் அதற்கு பதில்களும் உள்ளன தம்பி படத்தில்.

    Thambi movie is based on sisters love and brothers affection

    கோவாவில் சுற்றுலா கைடாக இருப்பவர் தான் கார்த்தி அவரை தன் மகன் என்று
    நினைத்து வீட்டிற்கு அழைத்து வருகிறார் அப்பா சத்யராஜ்.ஆனால் கார்த்தி அவர்களது உண்மையான மகன் இல்லை என்பது சத்யராஜ்க்கு மட்டும் தெரியும்.கார்த்தியை தங்களது சொந்தம் என்று குடும்பத்தில் மெல்ல மெல்ல அவரை எற்று கொள்கிறார்கள்.நிகிலா விமல் தன் காதலன் சரவணன்
    வருகிறான் என்று மிகவும் சந்தேஷப்படுகிறார்.வந்திருப்பது சரவணன் என்று நினைத்து அவரை கொலை செய்ய ஒரு கும்பல் திட்டம் தீட்டுகிறது.

    அவர்களிடம் இருந்து சரவணன் ஆக வரும் கார்த்தி தப்பிப்பாரா. உண்மையான சரவணன் வந்தால் கார்த்தி நிலைமை என்ன ஆகும்.ஏன் முதலில் அவர் வீட்டை விட்டு ஓடிப்போனர். இவ்வளவு காலம் எங்கு இருந்தார் போன்ற பல கேள்விகளுக்கு என்ன பதில் என்பதே மீதி கதை.

    Thambi movie is based on sisters love and brothers affection

    கார்த்தி மற்றும் ஜோதிகா முதல் முறையாக இனைந்து நடித்து இருக்கும் படம் தான் அதை தான்டி பாபநாசம் பட இயக்குனருக்காக படம் பார்க்க வந்தவர்கள் அதிகம் என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

    முதல் பாதி படம் கொஞ்சம் சுமார் தான்.
    யார் சரவணன் என்று திரைக்கதை நகர்கிறது.இரண்டாம் பாதி முதல் பாதியை இடு செய்யும் அளவிற்கு உள்ளது. படத்தில் நிறைய டுவிஸ்ட் அண்டு டெர்ன் உள்ளது, அது படத்திற்கு கூடுதல் பலம். கார்த்தி தனது இரண்டுவித கதாபாத்திரத்தில் அசத்துகிறார் சத்யராஜ் அரசியல்வாதியாகவும் அப்பாவாகவும் நடிக்கும் நடிப்பு அற்புதம்.

    Thambi movie is based on sisters love and brothers affection

    அக்காவாக வரும் ஜோதிகாவின் நடிப்பும் மிகவும் எதார்த்தமாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி. நிகிலா விமல் பெயரளவுக்கு நடித்துள்ளார். கார்த்தி மற்றும் நிகிலா விமல் காதல் காட்சிகள் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. கோவிந்த் வசந்தா இசை படத்திற்கு மிகவும் பக்கபலமாக இருந்தது.

    Thambi movie is based on sisters love and brothers affection

    படத்தில் நிறைய டுவிஸ்ட் திரில் வைத்த இயக்குநர் திரைக்கதை மற்றும் அதனை கொண்டு செல்லும் விதத்தில் அவரின் வேகம் சில இடங்களில் குறைந்தது. முக்கியமாக படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் சத்யராஜ் தான் நடிக்க வேண்டும் என்று கார்த்தி சொன்னார் அதன் அர்த்தம் படம் பார்த்த பின் புரியும்.

    தம்பி படத்தின் முதல் பாதி காதல் நிரைந்ததாகவும் சுவார்ஸயம் நிரைந்த காட்சிகளாகவும் பல விசயங்களுடன் நகர்ந்து செல்கிறது . இருபின்னும் சில விசயங்கள் படத்தை தொய்வுற்றி வைத்து விட்டது சில இடங்களில். இரண்டாம் பாதி மிக சுவாரஸ்யமான முறையில் நகர்கிறது .முக்கியமாக படத்தின் இறுதி காட்சி அது யாரும் எதிர்பாராத ஒரு டிவிஸ்ட் என்றே சொல்லலாம் அதற்தாக கட்டாயம் தம்பி படத்தை பார்கலாம் என்று கூட சொல்லலாம்

    Thambi movie is based on sisters love and brothers affection

    பாசம் நிறைந்த நீரில் தம்பியால் நீந்த மட்டுமே முடிந்தது. இன்னும் சில உன்னதமான காட்சிகள் அமைந்திருந்தால் எவர் கிறீன் அக்கா தம்பியாக பல ஆண்டுகள் நாம் நினைத்து பார்த்திருப்போம் .
    ஒரு வீட்டில் அக்கா என்பது இன்னொரு அம்மா என்ற வசனம் பலருக்கு பிடித்து இருந்தது , அதுவே நிதர்சனமான உண்மையும் கூட.

    கூட பொறந்த எல்லாரும் அன்பான தம்பியாக , அன்பான அக்காவாக இருப்பதில்லை. எதார்த்த வாழ்வில் நாம் சந்திக்கும் சில மனிதர்களே உடன் பிறந்தவர்கள் போல் பழகி நாம்மை காப்பார்கள். கூட பொறந்துட்டா மட்டும் தம்பி ஆயிட முடியாது . தம்பி என்ற சொல் அன்பின் உச்சம் , அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அதன் உண்மை புரியும்.

    Thambi movie is based on sisters love and brothers affection

    சௌகார் ஜானகி வசனங்களே பேசாமல் நடித்தது கொஞ்சம் சாமர்த்தியம். ஆனால் ஒரு பெண் சிங்கத்தை வீல் சேரில் உட்கார வைத்தது , வசனங்களே இல்லாமல் செய்தது கொஞ்சம் வருத்தம். அடுத்த அடுத்த படங்களில் அவர் இன்னும் ஆரோக்கியத்துடன் வசனங்கள் பேசி நடிக்க வேண்டும் .

    சூர்யா ஜோதிகா , ஜோதிகா கார்த்தி , சூர்யா ஜோதிகா மற்றும் சிவகுமார் இப்படி பல காம்பினேஷன்ஸ் இந்த குடும்பத்தில் நாம் பார்த்து விட்டோம். 2020 ஆம் ஆண்டு இவர்கள் நால்வரும் சேர்ந்து ஒரு படம் நடித்தால் ஆச்சரியப்படுவதிற்கு இல்லை.

    Thambi movie is based on sisters love and brothers affection

    தம்பி படத்தில் இன்னொரு மிக பெரிய ரிலாக்ஸ்சேஷன் குட்டி பையன் அஸ்வந்த் . அவன் பேசும் பல வசனங்கள் பல இடங்களில் சிரிக்க வைக்கிறது. சுட்டி தனமாக , குறும்பு தனமாக அவன் கொடுக்கும் எக்ஸ்பிரஸின்ஸ் அவ்வளவு அழகு. இயக்குனர் அவ்வளவு அழகாக பயன் படுத்தி இருக்கிறார்.

    ஜீத்து ஜோசப் என்றால் சஸ்பென்ஸ் , கிரைம் , பதட்டம், ஆச்சரியம் , படபடப்பு , பயம், பாசம் என்று ஒட்டு மொத்த கலவையும் ஒரு மிக்ஸியில் போட்டு அடித்து கொடுப்பார். இந்த படத்திலும் அதை முடிந்தவரை நன்றாகவே செய்திருக்கிறார்.

    தம்பி தப்பித்து விட்டான் அக்கா பாசத்தில்.

    English summary
    Karthi and jothika acted together for the 1st time in the movie thambi. popular director jithu hoseph has directed this movie and this movie tells about the relationship of an true sister who lost her brother and lagging for its true affection. sathyaraj, seetha has done special roles in this movie and versatile actress sowkar janaki has given her performance after a long gap in tamil cinema industry through this movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X