For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  The Matrix: Resurrections Review : 20 வருஷம் ஆகியும் இன்னுமா நியோ காதலியை தேடுறாரு.. போங்க பாஸ்!

  |

  லாஸ் ஏஞ்சல்ஸ்: 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் கீனு ரீவ்ஸை நியோவாக பார்க்கப் போகிறோம் என்கிற உத்வேகத்துடன் ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று உட்கார்ந்தால் அவர் இன்னமும் தனது காதலியான ட்ரினிட்டியை தேடி கடுப்பேத்துகிறார்.

  ஹாலிவுட்டின் பல அறிவியல் புனைவு படங்களுக்கு எல்லாம் முன்னோடியாக பார்க்கப்பட்ட படம் தி மேட்ரிக்ஸ்.

  கருப்பு கலரில் லெதர் ஜாக்கெட், வினைல் பேன்ட் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு புல்லட்டுகளை டைம் ஃப்ரீஸ் செய்து ஆக்‌ஷனில் அனல் பறக்க விட்ட படம் மேட்ரிக்ஸ். ஆனால், இப்போ வந்துள்ள மேட்ரிக்ஸ் 4ம் பாகம் எப்படி இருக்கிறது என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

  பிக்பாஸ் சீசன் 5...பனிரெண்டாவது வாரத்தில் நாமினேட் ஆன 6 பேர் பிக்பாஸ் சீசன் 5...பனிரெண்டாவது வாரத்தில் நாமினேட் ஆன 6 பேர்

  மேட்ரிக்ஸ் உலகம்

  மேட்ரிக்ஸ் உலகம்

  இயக்குநர் லானா வச்சாஸ்கி இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியான திரைப்படம் தி மேட்ரிக்ஸ். கீனு ரீவ்ஸ், கேரி அனா மோஸ், லாரன்ஸ் ஃபிஷ்பர்ன், ஹூகோ வீவிங் என ஏகப்பட்ட நடிகர்களின் அசத்தல் நடிப்பில் வெளியான முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. வரிசையாக வெளியான 3 பாகங்களும் ரசிகர்களை பிரம்மிக்க வைத்தது. ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் படத்தின் சைனிஸ் ஃபைட்டே இந்த படத்தில் இருந்து இன்ஸ்பிரேஷன் ஆனது தான். ஏகப்பட்ட ஹாலிவுட் படங்களுக்கு விஷுவல் மற்றும் டெக்னாலஜி பேஸ் அமைத்து கொடுத்தது இந்த படம்.

  மேட்ரிக்ஸ் 4 எப்படி

  மேட்ரிக்ஸ் 4 எப்படி

  20 ஆண்டுகள் கழித்து மீண்டும் மேட்ரிக்ஸ் உலகத்தை காண போகிறோம் என பயங்கர ஆர்வத்துடன் சென்ற ரசிகர்களுக்கு படம் பெரிய ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. புதிய டெக்னாலஜிகளையும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளையும் அறிமுகப்படுத்திய மேட்ரிக்ஸ் படத்தின் 4ம் பாகம் வெறும் வசனம் பேசும் ரொமான்டிக் டிராமாவாக மாறி விட்டது.

  என்ன கதை

  என்ன கதை

  ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்தில் தான் யார் என்பதை உலகம் மறக்க வேண்டும் என ஹீரோ போராடுவார். மேட்ரிக்ஸ் ரெசரக்ஸன் படத்தில் தான் யார் என்பதையே மறந்து விட்டு வாழும் ஹீரோவுக்கு நீங்க தான் நியோ உங்க காதலி தான் ட்ரினிட்டி என புரிய வைப்பது தான் படத்தின் கதையாக அமைந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மேட்ரிக்ஸ் முதல் பாகத்தில் இருந்து 4ம் பாகம் வரை காதலியை தேடுவதை சுற்றியே திரைக்கதை சுழல்வது ரசிகர்களுக்கு கடுப்பை கிளப்புகிறது. அந்த குழந்தைக்கு ஒரு 20 வயசு இருக்குமா? என்கிற பொல்லாதவன் காமெடி தான் நினைவுக்கு வருகிறது.

  காமெடியும் எமோஷனும்

  காமெடியும் எமோஷனும்

  ஆரம்பத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளால் உலகளவில் ரசிகர்களை கவர்ந்த ஹாலிவுட் திரைப்படங்கள் சமீப காலமாக அதிகளவு காமெடி மற்றும் எமோஷன் காட்சிகளை நம்பி திரைக்கதைகளை உருவாக்கி வருகிறது. சமீபத்தில் வெளியான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்திலும் அதிகளவு காமெடி மற்றும் சென்டிமென்ட் காட்சிகளே நெஞ்சை நக்கிய நிலையில், மேட்ரிக்ஸ் இன்னமும் ஒரு படி எமோஷனல் ஏகாம்பரமாக மாறி உள்ளது நம்ம ஊர் ஆடியன்ஸ்களை திரையரங்குகளில் தாலாட்டி தூங்க வைத்து விடுகிறது.

  பிரியங்கா சோப்ரா பின்னிட்டாங்களா

  ஹீரோ கீனு ரீவ்ஸே ஆக்‌ஷனில் பெரிதாக பின்னி பெடலெடுக்கவில்லை. பிரியங்கா சோப்ரா இந்த படத்தில் அவருக்கு கொடுத்த சிறிய கதாபாத்திரத்தை இயக்குநர் லானா என்ன சொன்னாரோ அதை கேட்டு விட்டு நடித்து சென்றுள்ளார் அவ்வளவுதான். அடுத்த 10 அல்லது 20 ஆண்டுகள் கழித்தும் ஒரு பிரம்மிப்பை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் என்றாலும் மேட்ரிக்ஸ் படத்தின் 3 பாகங்களையும் பார்த்த ரசிகர்களுக்கு அங்கங்கே சில ஈஸ்டர் எக்குகள் காத்திருக்கின்றன.

  English summary
  The Matrix 4th part movie titled The Matrix: Resurrections released on worldwide. After a very long time fans enjoys Keanu Reeves again in the character of Neo but slightly disappointed due to low amount of actions sequence.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X