காளிக்கு ஸ்கெட்ச் போடும் பண்ணையார்... நடுவில் வந்த பார்த்திபன்: பேட்டைக்காளி 5 எபிசோட்கள் விமர்சனம்

சென்னை: வெற்றிமாறன் தயாரித்துள்ள பேட்டைக்காளி வெப் சீரிஸ், ஆஹா ஓடிடியில் வெள்ளிக்கிழமைதோறும் ஒவ்வொரு எபிசோடாக வெளியாகிறது.

பேட்டைக்காளி வெப் சீரிஸின் 4 எபிசோட்கள் கடந்த வாரங்களில் வெளியான நிலையில், இந்த வாரம் 5வது எபிசோட் வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகியுள்ள பேட்டைக்காளி வெப் சீரிஸ் இந்த வாரம் சுவாரஸ்யமாக இருந்ததா இல்லையா என்பதை இப்போது பார்க்கலாம்.

வெற்றிமாறனின் பேட்டைக்காளி

வெற்றிமாறனின் பேட்டைக்காளி

வெற்றிமாறன் தனது 'கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி' சார்பில் தயாரித்துள்ள 'பேட்டைக்காளி' வெப் சீரிஸ்ஸை ராஜ்குமார் இயக்கியுள்ளார். ஜல்லிக்கட்டை பின்னனியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸ், வெள்ளிக்கிழமை தோறும் ஒவ்வொரு எபிசோடாக வெளியாகிறது. இதுவரை 4 எபிசோட்கள் வெளியான நிலையில், தற்போது ஐந்தாவது எபிசோட் ரிலீஸாகியுள்ளது. கலையரசன், வேல ராமமூர்த்தி, கிஷோர், ஷீலா ஆகியோர் பேட்டைக்காளி வெப் சீரிஸில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர்.

பேட்டைக்காளி கதை சுருக்கம்

பேட்டைக்காளி கதை சுருக்கம்

சிவகங்கை அடுத்த தாமரைக்குளம் - முல்லையூர் கிராமங்களை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள பேட்டைக்காளி வெப் சீரிஸ், ஜல்லிக்கட்டுப் போட்டியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. தாமரை குளத்தைச் சேர்ந்த பண்ணையார் செல்வசேகரனான வேல ராமமூர்த்தி, ஜல்லிக்கட்டில் பிடிபடாத தனது காளை தான் கெளரவம் என வாழ்ந்து வருகிறார். ஆனால், ஜல்லிக்கட்டில் பண்ணையாரின் மாட்டை பிடித்து அவரை அவமானப்படுத்துகிறார் முல்லையூரைச் சேர்ந்த பாண்டியாக வரும் கலையரசன். அதோடு பிடிபட்ட காளையும் இறந்துவிட தனது மகனை தூண்டிவிட்டு கலையரசனை கொலை செய்கிறார் பண்ணையார்.

கை மாறிய அதிகாரம்

கை மாறிய அதிகாரம்

மருமகன் பாண்டியை பண்ணையார் தான் கொலை செய்திருக்க வேண்டும் என அவரை பழிவாங்க துடிக்கிறார் முத்தையாவாக வரும் கிஷோர். கிடை மாடு போட்டு பிழைப்பு நடத்தி வரும் முத்தையா பண்ணையார் வேல ராமமூர்த்தியை கொலை செய்ய முயற்சிக்கும் போது, டிரைவர் மாயாண்டி பலியாகிறார். அப்போது பண்ணையாரின் பார்வையும் பறிபோகிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அவரது மகன் வீரசேகரன் பண்ணையாரின் மொத்த அதிகாரத்தை கைப்பற்றுகிறார்.

காளிக்கு ஸ்கெட்ச்

காளிக்கு ஸ்கெட்ச்

இதனிடையே, சிறுவயது முதலே தன் வீட்டில் வளர்ந்த மீனாட்சியை பலவந்தமாக திருமணம் செய்கிறார் பண்ணையார். ஆனால், மீனாட்சியோ பண்ணையாரின் விசுவாசி மாயாண்டியை காதலித்ததுடன், அவரது குழந்தையும் பெற்றெடுக்கிறார். கொலை செய்யப்பட்ட மாயாண்டியின் தங்கை தேன்மொழியான ஷீலா ராஜ்குமார், ஆற்றில் அடித்துவந்த கன்றை எடுத்து அதை ஜல்லிக்கட்டுக்காக தயார் செய்கிறார். இறுதியாக அந்த காளை ஜல்லிக்கட்டுப் போட்டியில் இறங்கி வீரர்களை பந்தாடுகிறது. தேன்மொழி வளர்க்கும் பேட்டைக்காளி காளையை சொந்தமாக்க பல லட்சங்களுக்கு பேரம் பேசிப் பார்க்கிறார் வீர சேகரன். ஆனால், அவர்கள் முடியாது என மறுக்க, அந்த காளையை அபகரிக்க சூழ்ச்சி செய்கிறார் வீர சேகரன்.

இந்த வாரம் காதலின் வழி நெடுக

இந்த வாரம் காதலின் வழி நெடுக

ஜல்லிக்கட்டுப் போட்டியில் இருந்து வெளியேறிய காளி, யாரிடமும் பிடிபடாமல் பார்த்திபனின் முல்லையூரில் இருக்கும் பார்த்திபன் வீட்டில் தஞ்சமடைகிறது. இதனால் சோகத்தில் இருக்கும் தேன்மொழிக்கு, பார்த்திபன் செய்த உதவியால் காளை திரும்ப கிடைக்கிறது. அதற்காக பாரத்திபனை வீட்டுக்கு அழைத்து தேன்மொழி விருந்து கொடுக்கும் போது, இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் என்பது தெரியவருகிறது. அப்படியே பார்த்திபனுக்கு தேன்மொழி மீது காதலும் வருகிறது. இன்னொருபக்கம் உள்ளூர் வேடிக்கையில் இறங்கப் போகும் தேன்மொழியின் காளைக்கு எதிராக பண்ணையாரின் மகன் வீரசேகரன் சூழ்ச்சி செய்கிறார். இதனுடன் 5வது சீசனை நிறைவு செய்திருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார்.

கொஞ்சம் பொறுமை தேவை

கொஞ்சம் பொறுமை தேவை

பேட்டைக்காளி வெப் சீரிஸின் முதல் மூன்று எபிசோட்களின் திரைக்கதையும் மின்னல் வேகத்தில் நகர்ந்தன. ஆனால், 4வது எபிசோட் கொஞ்சம் மந்தமாக நகர்ந்தது என்றால், ஐந்தாவது எபிசோட் இன்னும் மோசமாக இருக்கிறது. 'மேற்குதொடர்ச்சி மலை' படம் மூலம் நடிகராக அறிமுகமான ஆண்டனி, இந்த எபிசோடில் பார்த்திபன் என்ற பாத்திரத்தில் அறிமுகமாகிறார். ஸ்டண்ட் அப் காமெடியன் என்ற பெயரில் அவரது நகைச்சுவையும் நடிப்பும் நாடகத் தன்மையுடன் இருப்பது, ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது. சில காட்சிகளில் ஷீலாவின் நடிப்பும் செயற்கைத்தனமாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முக்கியமாக 5வது சீசனில் கதை எங்கும் நகராமல் அங்கேயே நிற்பதாக தெரிகிறது. ஆனாலும், அடுத்த எபிசோடில் இந்த பொறுமைக்கும் சேர்த்து சம்பவங்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X