twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Movie Review : மலேஷியா டூ அம்னீஷியா - திரைவிமர்சனம்

    |

    நடிகர்கள் :
    வைபவ் ,
    வாணிபோஜன் ,
    எம் எஸ் பாஸ்கர்
    கருணாகரன்
    மயிலசாமி

    இயக்கம் : ராதாமோகன்
    இசை : பிரேம் ஜீ

    Rating:
    2.5/5
    Star Cast: வைபவ் , வாணிபோஜன் , எம் எஸ் பாஸ்கர் கருணாகரன் மயிலசாமி
    Director: ராதாமோகன்

    சென்னை: வைபவ், வாணி போஜன், எம் எஸ் பாஸ்கர், கருணாகரன் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் மலேஷியா டூ அம்னீஷியா.

    இந்த படத்தை ராதா மோகன் இயக்கியுள்ளார். பிரேம்ஜி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    ஒரே நாளில் 1 மில்லியன் வியூஸ்... சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் படம் சாதனை ஒரே நாளில் 1 மில்லியன் வியூஸ்... சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் படம் சாதனை

    கொரோனா காலத்தில் உருவாகிய இந்த திரைப்படம் நேரடியாக Zee5 OTT தளத்தில் வெளியாகியுள்ளது.

    மலேஷியா விமானம்

    மலேஷியா விமானம்

    முழுக்க முழுக்க காமெடி கதைகளத்தை கொண்டு இந்த படம் தயாராகியுள்ளது. வைபவ், வாணி போஜன், அவர்களுக்கு ஒரு குழந்தை என குடும்பமாக உள்ளனர். வைபவின் நண்பராக கருணாகரன் வருகிறார். ஒரு தருணத்தில் பிஸ்னஸ் விஷயமாக மலேஷியா போவதாக தன் மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு அவருடைய Girl Friend ஐ பார்க்க விமானம் மூலம் பெங்களூருக்கு செல்கிறார் வைபவ். வைபவ் போவதாக கூறிய மலேஷியா விமானம் மலேஷியா சென்றடையாமல் வழியில் மாயமாகிறது. இதற்கு பின் கதாநாயகன் வைபவ் சந்தித்த சம்பவங்கள் தான் மீதமுள்ள படத்தின் கதை.

    புது ட்ராக்கில்

    புது ட்ராக்கில்

    இயக்குனர் ராதா மோகன் அபியும் நானும், மொழி போன்ற அழகான படங்களை இயக்கியவர். இந்த படத்தில் ஒரு புது ட்ராக்கில் முழுவதுமாக ஒரு காமெடி படத்தை இயக்க களமிறங்கியுள்ளார். கொரோனா காலத்தில் ரசிகர்களை மகிழ்விக்க ராதா மோகன் தேர்வு செய்து இயக்கிய கதை பாரட்டிற்குரியது. எதிர்பார்த்த அளவில் இல்லையென்றாலும் ஓரளவுக்கு படத்தை நன்றாக கையாண்டுள்ளார் ராதா மோகன். கொடுக்கப்பட்ட பட்ஜெட் , லாக் டவுன் காலகட்டத்தில் குறுகிய நேரத்தில் எடுக்க பட்ட படம் என்பதால் ராதாமோகன் நிறயவே தியாகம் செய்து உள்ளார் என்பது திரைக்கதையில் தெரிகிறது .

    பெரிதாக எழுதவில்லை

    பெரிதாக எழுதவில்லை

    படத்தின் நாயகன் வைபவ்-வே இந்த படத்தை தயாரித்துள்ளார். வைபவ்வின் நடிப்பை பொறுத்தவரையில் எந்த வித குறையும் இல்லாமல் நன்றாகவே நடித்துள்ளார். வைபவ்விற்காகவே எழுதிய கதாபாத்திரம் போல் தோன்றியது. அந்த அளவுக்கு இயல்பாக இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்துள்ள வாணி போஜன் படத்திற்கு படம் முன்னேற்றம் கண்டு வருகிறார். இந்த படத்திலும் ஒரு தேர்ந்த நடிகை போல் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார். கருணாகரன் தன்னுடைய வேலையை சரி வர செய்துள்ளார்.

    துப்பறியும் மாமா

    துப்பறியும் மாமா

    கதையில் மிகவும் எதிர்பார்த்த எம் எஸ் பாஸ்கர்ரின் கதாபாத்திரத்தை ட்விஸ்டாக வைத்துள்ளனர். எம் எஸ் பாஸ்கர்ரின் கதாபாத்திரம் பெரிதாக எழுதப்படவில்லை (முயற்சித்துள்ளனர்). இருந்த போதிலும் தன்னுடைய வேலையை கச்சிதமாக முடித்துள்ளார் எம் எஸ் பாஸ்கர். தன்னுடைய நடை உடை தனக்கே உண்டான மெனக்கெடுதல் என்று அந்த காதாபாத்திரத்தை நக்கி புரிந்துகொண்ட சிறப்பு செய்து உள்ளார் எம் எஸ் பாஸ்கர் .

    ஏமாற்றும் கணவன்

    ஏமாற்றும் கணவன்

    அழகான மனைவி ,பாசமான குழந்தை என்று இருந்தாலும் கணவன் ஏன் ஏமாற்றுகிறான் என்பது தான் தமிழ் சினிமாவின் பல கால கேள்வி . அதுவும் வாணி போஜன் மிகவும் மென்மையாகவும் ,அழுத்தமாக பாசத்தை காட்டுவதிலும் மிகவும் அழகு. மிகவும் ஹோம்லியான காஸ்ட்யூம்ஸ் வாணியை மிகவும் ரசிக்க வைக்கிறது. மனைவியை ஏமாற்றும் கணவன் கதை பல் வேறு இயக்குர்களால் பல பல ஆண்டுகளாக பல் வேறு விதமாக ஏற்கனவே நாம் பார்த்து விட்டதால் கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது இருப்பினும் ராதா மோகன் இந்த கதையை ஆபாசம் இல்லாமல் மெல்லிய கோட்டில் அனைவைரையும் ரசிக்க வைக்கிறார் .

    கதையில் தொய்வு

    கதையில் தொய்வு

    கொரோனா காலத்தில் ரசிகர்களை இன்புற்றும் வகையில் ஒரு காமெடி திரைப்படத்தை எடுத்துள்ளனர். நல்ல கதையை கொண்டுள்ள இந்த திரைப்படத்தில் முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாம் பாதியில் மிஸ் ஆகிறது. படத்தின் முதல் 40நிமிடம் கலகலப்பாக சென்ற வேலையில் அதன் பின் கதையில் தொய்வு ஏற்படுகிறது. இரண்டாம் பாதியில் பேச்சு உள்ள அளவுக்கு வீச்சு இல்லை. மீண்டும் படத்தின் இறுதி காட்சி நெருங்கும் வேலையில் படத்தில் ஒரு வேகம் தெரிகிறது. பெரிதும் எதிர்பார்க்காமல் இந்த கொரோனா நோய் தொற்று காலத்தில் பார்க்கக்கூடிய ஒரு சராசரி காமெடி படமாக அமைந்துள்ளது மலேஷியா டூ அம்னீஷியா.

    English summary
    actor vaibhav produced movie which is directed by radhamohan is been released in zee5 and the title "malaysia to amnesia " makes the audience think in different aspects . actress vanibojan as female lead and ms baskar along with comedian karunakaran has done justice to several wits and funny sequences in this family drama. actor vaibhav as producer and hero of this film selected a good time of release to reach wide audience.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X