»   »  பாட்டு எப்படி?

பாட்டு எப்படி?

Subscribe to Oneindia Tamil

தீபாவளிக்கு நிறைய படங்கள் ரிலீஸாகப் போகுது. குறைந்தது எட்டுப் படங்கள் வரைக்கும் வெளியாகலாம். வரப் போகும் படங்களில் தலைமைவகிக்கப் போவது தெனாலி. காரணம், இரு கதாநாயகர்கள். ஒன்று கமல். மற்றொருவர் ஏ.ஆர். ரஹ்மான்.

தமிழ்ப் படங்களின் வெற்றிக்கு சமீப காலமாக பாடல்கள்தான் முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே தீபாவளி ரிலீஸ் படங்களின் பாடல்களைப் பற்றிக்கொஞ்சம் பார்ப்போமா?

தெனாலி

தெனாலி ..

இதென்ன கலாட்டா என்று கேட்க வைக்கிறார் தெனாலி.

ஏ.ஆர்.ரஹ்மான் லண்டன் செல்லும் முன் இசையமைத்த கடைசிப் படம், கமல் பாடியிருக்கிறார், வைரமுத்து இல்லை, பல பாடல் ஆசிரியர்கள்எழுதியிருக்கிறார்கள்... இப்படி பல ஸ்பெஷல்கள் இந்தப் படத்திற்கு.

கமல் சும்மா பாடவில்லை பாட்டிலும் கூட நடித்திருக்கிறார். "ஆலங்கட்டி .. பிறைசூடனின் வரிகளுக்கு, சுஜாதாவுடன் சேர்ந்து கமல்கலக்கியிருக்கிறார். அதற்கு மேலாக ரஹ்மான். ஒரு இசை மழையாய் கொட்டியிருக்கிறார்.

"அத்தினி சித்தினி .. சுமாரான ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் வரிசையில் இதையும் சேர்க்கலாம். எழுதியது அறிவுமதி. என்ன என்னவோ வார்த்தைகள்வருகின்றன. முழுப் பாடலையும் கேட்க நினைக்க வேண்டாம். பிட்டு, பிட்டாக வார்த்தைகள் புரிகிறது. ஹரிகரன், சித்ரா, சிவராமன் பாடியிருக்கிறார்கள்.சித்ராவின் குரலை வளைத்திருக்கிறார் ரஹ்மான்.

"இஞ்சிரங்கோ .. பெண் கவிஞர் தாமரையின் வரிகளுக்கு, சித்ரா தலைமையில் ஒரு கும்பலே பாடியிருக்கிறது. கமல், கிளிண்டன், டொமினிக் என லிஸ்ட்நீளுகிறது. கமலின் குரல் வித்தியாசமாக ஒலிக்கிறது.

"போர்க்களம் .. கோபிகா, பூர்ணிமா, ஸ்ரீனிவாஸ் குரலில். பாடலை எழுதியது கலைக்குமார். ரோஜாப்பூ, சின்ன ரோஜாப்பூ என்ற அழகான பாடலைஎழுதியவர் கலைக்குமார் என்பதை நீங்கள் இன்னேரம் புரிந்திருக்கக் கூடும். நன்றாக இருக்கிறது.

"ஸ்வாசமே .. எஸ்.பி.பியின் வித்தியாசமான குரலில் அழகாக இருக்கிறது. துணைக்கு சாதனா சர்கம். புதுக் கவிஞர் பா.விஜய்யின் வார்த்தைகளில் மென்மைஅதிகம்.

சங்கர் மகாதேவனும் கலக்கியிருக்கிறார். படத்தின் தலைப்பிலேயே ஒரு பாடலை பாடுகிறார் இந்த உற்சாக மனிதர். கதையை, மலையூர் மம்பட்டியான்ஸ்டைலில், கொஞ்சம் மாடர்னாக கூறியிருக்கிறார்கள். பாட்டை எழுதியவர் இளைய கம்பன். கேட்கலாம்.

தெனாலி - பூனையை எலி விரட்டுவது மாதிரி வித்தியாசமாக இருக்கிறது.

பிரியமானவளே ..கண்ணுக்கு கண்ணாக ...

சீனு ... வானவில் ...

வண்ணத் தமிழ் பாட்டு...சினேகிதியே ...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil