»   »  திறப்பு விழா - விமர்சனம்

திறப்பு விழா - விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rating:
2.5/5

மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தில் உயிரையே தியாகம் செய்யும் பெண்ணின் கதை தான் திறப்பு விழா.

குடிப்பவர்களை வில்லன்களாக சித்தரித்த காலம் போய் இன்று குடித்தால் தான் ஹீரோ என்பது போன்ற படங்கள் வந்துகொண்டிருக்கின்ரன. இந்த சூழ்நிலையில் குடிக்கு எதிராக போராடும் இளம் ஜோடிகளைப் பற்றி படம் எடுத்ததற்காகவே இயக்குநர் கேஜி.வீரமணிக்கு பாராட்டுக்கள்.


Thirappu Vizha review

கீனணூர் என்ற கிராமத்துக்கு மதுக்கடை விற்பன்னராக வரும் ஹீரோ ஜெய் ஆனந்த் மதுவால் சீரழியும் மக்களை திருத்த நினைக்கிறார். அவர் மீது கொலைப்பழி விழுகிறது. அவர் ஏன் ஊருக்கு வந்தார் என்று தனது குடும்ப கதையை சொல்கிறார். பின்னர் ஊரே ஜெய் ஆனந்த் வழியில் மதுவை எதிர்க்கிறது. அந்த ஊரை விட்டு மது எப்படி ஒழிந்தது என்பது க்ளைமாக்ஸ்.


Thirappu Vizha review

ஹீரோவாக ஜெய் ஆனந்த்.கிராமத்து கதாபாத்திரத்துக்கு பொருத்தமான ஆள். ஹீரோயின் ரஹானா ஜெய் ஆனந்தை காதலிக்கும் கேரக்டர். இறுதியில் மதுவை எதிர்த்து உயிரை விடும்போது பரிதாபத்தை ஏற்படுத்துகிறார்.


காமெடி என்ற பெயரில் இடையில் சேர்த்திருக்கும் காட்சிகள் எதுவுமே எடுபடவில்லை.


Thirappu Vizha review

நல்ல டைட்டில் பிடித்து திரைக்கதையிலும் வேகம் கூட்டியிருந்தால் திறப்பு விழாவுக்கு கூட்டம் சேர்ந்திருக்கும்.


- ஆர்ஜி

English summary
Thirappu Vizha movie review

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil