twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Thor: Love and Thunder Review - ஆயிரம் கோடி பட்ஜெட்.. நல்ல சிஜி இருக்கு.. ஆனால், கதை எங்கப்பா?

    |

    Rating:
    3.0/5

    நடிகர்கள்: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், கிறிஸ்டியன் பேல், நடாலியா போர்ட்மேன்

    இசை: மைக்கேல் கியாச்சினோ

    இயக்கம்: டைக்கா வைட்டிட்டி

    லாஸ் ஏஞ்சல்ஸ்: மார்வெல் படங்களிலேயே ஆரம்பத்தில் அசத்தலாக வந்த படம் என்றால் அது தோர் தான். அதிக சக்திக் கொண்டு இடிக் கடவுளாக ஆஸ்கார்டில் இருந்து பூமிக்கு சுத்தியல் ஆயுதத்துடன் வந்து இறங்கியவர்.

    அவெஞ்சர்ஸ் டீமிலும், தானோஸின் தலையை அசறாமல் வெட்டி சாய்த்த தோரின் தனித் திரைப்படங்கள் தொடர்ந்து காமெடி பண்ண ஆரம்பித்து டிராஜிடியாக மாறி விட்டன.

    இந்த வாரம் வெளியாகி உள்ள தோர்: லவ் அண்ட் தண்டர் படம் எந்த அளவுக்கு மார்வெல் ரசிகர்களுக்கு பிடிக்கும் படமாக அமைந்திருக்கிறதா? இல்லையா? என்பது குறித்த விமர்சனத்தை இங்கே பார்ப்போம்..

     ரஜினி, கமல் ஆளுமைகளை உருவாக்கிய இயக்குநர்..பாலச்சந்தரின் தீர்க்க தரிசனம் ரஜினி, கமல் ஆளுமைகளை உருவாக்கிய இயக்குநர்..பாலச்சந்தரின் தீர்க்க தரிசனம்

    என்ன கதை

    என்ன கதை

    தன்னுடைய இனமே அழிந்து போன நிலையில், எஞ்சியிருக்கும் தன்னுடைய மகளையாவது எப்படியாவது ஏதாவது ஒரு கடவுள் காப்பாற்றி விட மாட்டாரா என உதவி நாடி செல்லும் நிலையில், கடவுள்கள் அதெல்லாம் விதிப்படி தான் மரணம் நிகழும் எங்க கிட்ட ஒன்றுமில்லை என சொல்ல, தனது மகள் இறந்து விடும் நிலையில், அவளை எந்த கடவுளும் காப்பாற்றாத நிலையில், ஓ நீங்களாம் அப்போ டம்மி பீஸா கடவுள் என்று சொல்லிக் கொண்டு ஏன் ஊரை ஏமாற்றுகிறீர்கள், இனி என் வேலையே உங்களை போன்றவர்களை கொல்வது தான் என காட்'ஸ் பட்சராக கோர் மாற அவனிடம் இருந்து மற்ற கடவுள்களையும் ஆஸ்கார்டில் உள்ள குழந்தைகளையும் எப்படி தோர் காப்பாற்றுகிறார் என்பது தான் இந்த லவ் அண்ட் தண்டர் படத்தின் கதை.

    கிறிஸ்டியன் பேல்

    கிறிஸ்டியன் பேல்

    மர்வெலின் ஒவ்வொரு படங்களிலும் பிரபலமான ஹாலிவுட் நடிகர்களை இழுத்துக் கொண்டு வந்து விடுகின்றனர். கோடிக் கணக்கில் சம்பளம் என்றால் அவர்களும் நோ சொல்லவா போகின்றனர். டிசியில் பேட்மேனாக கலக்கிக் கொண்டிருந்த கிறிஸ்டியன் பேல் தற்போது தோருக்கு வில்லனாக கோர் எனும் கதாபாத்திரத்தில் கடவுள்களையே கொல்லும் கொலைகார சாத்தானாக நடித்துள்ளார். நம்ம புராணங்களில் வரும் அதே தேவ - அசுர போராட்டம் தான். கிறிஸ்டியன் பேலின் லுக் பார்க்க அப்படியே ஹாரிபாட்டர் வால்ட்மார்ட் மாதிரியே இருப்பதை தவிர்த்து இருக்கலாம். கிறிஸ்டியன் பேலை காட்டும் போதெல்லாம் என்னடா இது கடவுளுக்கு வந்த சோதனை என்பது போலத்தான் கதை நகர்கிறது.

    துறவியான தோர்

    துறவியான தோர்

    தானோஸை எல்லாம் அழிச்சிட்டோம், நிறைய போர் செய்து பாவத்தை சேர்த்துவிட்டோம், துறவியாக வாழ்க்கையை அமைதியாக வாழலாம் என தோர் நினைத்தால் இயக்குநர் டைக்கா வைட்டிட்டியும் மார்வெல் ரசிகர்களும் சும்மா விடுவார்களா? உங்களுடைய புதிய ஆஸ்கார்டை காவு வாங்க கோர் வந்து கொண்டிருக்கிறான் என்கிற சிக்னலை கொடுக்க அழிந்து கொண்டு இருக்கும் ஆஸ்கார்டை காப்பாற்ற செல்லும் தோருக்கு அங்கே அவருடைய முன்னாள் காதலி பெண் தோராக இருந்து அந்த இடத்தை காத்துக் கொண்டு வருவது தெரிய வருகிறது. இருவரும் இணைந்து கோரை அழிக்க பிளான் பண்றாங்களான்னு பார்த்தா அங்க இன்னொரு ட்விஸ்ட் வைத்து விடுகிறார் இயக்குநர்.

    தோர் காதலிக்கு கேன்சரா

    தோர் காதலிக்கு கேன்சரா

    இந்திய புராணங்களை மட்டுமின்றி தேவதாஸ் படங்களில் இருந்தும் ஸ்க்ரிப்ட்டை மார்வெல் திரைக்கதை ஆசிரியர்கள் ஆட்டையைப் போட ஆரம்பித்து விட்டார்கள் போலத் தெரிகிறது. தோர் காதலிக்கு கேன்சர் என்றும் அவர் சீக்கிரமே இறந்து விடுவார் என்றும் தெரிய வர, காதலா? கடமையா? என எதை செய்வது என்றே புரியாமல் தவிக்கும் தோர், கடவுள்களை காப்பாற்ற கிரேக்க கடவுளான ஜியூஸை (கிளேடியட்டர் ஹீரோ ரசல் க்ரூ) சந்திக்கிறார். ஆனால், கோர் கூடலாம் நாங்க போருக்கு வர முடியாது என அவர் எஸ்கேப் ஆக தோருக்கும் அவருக்குமே சண்டை நடக்கிறது. இறுதியில் கோரை எப்படி தோர் ஜெயித்தாரா? இவரது காதலி உயிர் காப்பாற்றப்பட்டதா? என்பது தான் கிளைமேக்ஸ்.

    பிளஸ்

    கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் அப்படியே அப்போ பார்த்தது போலவே ஆள் செம ஹேண்ட்ஸமாக தோர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வில்லனாக கிறிஸ்டியன் பேல் மிரட்டுவதும் பெரிய பிளஸ் தான். தோரின் கதலியாக நடாலியா போர்ட்மேன் நடித்துள்ளார். டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், ஸ்பைடர்மேன் டிரைலஜிக்கு இசையமைத்த மைக்கேல் கியாச்சினோவின் இசை அற்புதம். பேரி இடியோனின் ஒளிப்பதிவு, சிஜி எஃபெக்ட்ஸ் எல்லாம் பிரம்மாண்டத்தின் உச்சம். 250 மில்லியன் டாலர் செலவில், அதாவது 2000 கோடி ரூபாயில் இந்த படம் எடுக்கப்பட்டு உலகம் முழுக்க வெளியாகி உள்ளது.

    மைனஸ்

    மைனஸ்

    ஆனால், 2000 கோடி செலவு செய்து எடுக்கும் படத்திற்கான கதை தான் சரியானதாக அமையவில்லை என்பது தான் மார்வெல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை அளித்துள்ளது. நம்ம ஊரில் இருக்கும் ராஜாக்களின் கதையை எடுக்க இங்கே பட்ஜெட் கிடைக்காமல் திண்டாடும் போது, மார்வெல் பல ஆயிரம் கோடிகளை கொட்டி மொக்கைக் கதைகளை தொடர்ந்து படமாக எடுத்து வருகிறது என்கிற குற்றச்சாட்டு சமீப காலமாக எழுந்துள்ளது. அதிலும் தோர் படத்தில் காமெடி காட்சிகள் என்கிற பெயரில் வரும் மொக்கை காட்சிகளை தியேட்டரில் நிம்மதியாய் அமர்ந்து பார்க்க முடியவில்லை. மொத்தத்தில் இந்த தோர் ஒரு பிரம்மாண்ட போர்! (குழந்தைங்க என்ஜாய் பண்ணுவாங்க)

    English summary
    Thor: Love and Thunder Review in Tamil - No intense in Story line makes Thor hammer so weak. Chris Hemsworth, Christian Bale and Natalie Portman done their role promisingly and cherish their fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X