For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தொட்டி ஜெயா - பட விமர்சனம் ரொம்ப பழைய கதை. ஆனால் அதை சொல்லிய விதத்திற்காக சபாஷ் கொடுக்கலாம் இயக்குநர் துரைக்கு.தொட்டி ஜெயா, அப்பா, அம்மா, சொந்தம், பந்தம் யாரும் இல்லாத அனாதை. ஒரு ஹோட்டலில் பாத்திரம் கழுவும் வேலை. முதலாளியிடம்அடிக்கடி திட்டு விழுகிறது. ஆனாலும் அவன் அதிகம் பேசுவதில்லை. ஒரு நாள் முதலாளியிடம் தகராறு செய்யும் ஒரு கும்பலை மிரட்டி ஓடவைக்கிறான். அது முதல் முதலாளிக்கு தொட்டி ஜெயா மீது பயம் கலந்த மரியாதை ஏற்பட்டு விடுகிறது. தன்னைக் காப்பாற்றியதற்காகதொட்டி ஜெயாவுக்கு பணம் கொடுக்கிறார் முதலாளி.ஆனால் அதைப் புறக்கணிக்கும் ஜெயா, அங்கிருந்து வெளியேறுகிறான். வெளியே வரும் அவனுக்கு ரவுடிக் கும்பலின் அறிமுகம்கிடைக்கிறது. லோக்கல் தாதா சீனா தானாவின் நட்பு கிடைக்கிறது. அங்கேயே அடைக்கலமாகி விடும் தொட்டி ஜெயாவை, சினா தானாவளர்த்து பெரிய அடிதடி வீரனாக மாற்றி தனக்கு அடியாளாக வைத்துக் கொள்கிறார்.முகம் நிறைய தாடியும், முரட்டுக் குணமும், அதிகம் பேசாத மெளனமுமாக சீனா தானா ஏவும் வேலைகளை செவ்வனே செய்யும் முரட்டுரவுடியாக வருகிறான் தொட்டி ஜெயா. ஒரு கொலை வழக்கில் போலீஸாரிடமிருந்து நெருக்குதல் வரவே, தொட்டி ஜெயாவைகொல்கத்தாவிற்கு அனுப்பி வைக்கிறார் சீனா தானா.அங்கு ஒரு தென்றலை சந்திக்கிறான் சினா தானா. கன்னியாகுமரியிலிருந்து டூர் வந்த மாணவி பிருந்தா, டிக்கெட்டைத் தொலைத்து விட்டுதெரியாத்தனமாக விபச்சாரக் கும்பலிடம் மாட்டிக் கொள்கிறாள். அவளை தொட்டி ஜெயா காப்பாற்றுகிறான்.தன்னை பத்திரமாக ஊர் வரை கொண்டு வந்து விட்டு விடும்படி பிருந்தா கெஞ்சவே, அவளுடன் ரயில் ஏறுகிறான். ரயில் பயணத்தில்,தொட்டி ஜெயா நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து அசந்து போகிறாள் பிருந்தா.பார்க்க முரட்டுத்தனமாக இருந்தாலும் இவ்வளவுகண்ணியமா என்று ஆச்சரியப்படும் அவளுக்குள் காதல் பூக்கிறது.ஊர் வந்து இறங்கியதும், ஜெயாவுக்கு நன்றி சொல்லும் பிருந்தா, கூடவே தனது காதலையும் சொல்கிறாள். ஆனால் முதலில் ஏற்க மறுத்துதன் வழியே செல்லும் ஜெயாவுக்கு, பிருந்தாவின் நினைவு வாட்டவே, அவளைத் தேடி ஓடுகிறான்.இருவரும் காதலிக்கத் தொடங்கும்போது சீனா தானா குறுக்கிடுகிறார். பிருந்தாவின் அப்பாவே அவர்தான்! தனது மகளையே தொட்டிஜெயா காதலிப்பதை விரும்பாத சினா தானா, ஜெயாவைத் தீர்த்துக் கட்ட ஆட்களை ஏவுகிறார். அதை எப்படி தொட்டி ஜெயாசமாளிக்கிறான், பிருந்தாவை அடைந்தானா என்பதுதான் தொட்டி ஜெயாவின் குட்டிக் கதை.அடியாள் ஒருவன் ரவுடி மகளைக் காதலிப்பதும், அதற்கு எதிர்ப்பு ஏற்படுவதும், அதை அவன் சமாளித்து கல்யாணம் செய்து கொள்வதும்ஏற்கனவே நிறையப் படங்களில் பார்த்து சலித்துப் போன கதை. ஆனால் தொட்டி ஜெயாவில் இந்தப் பழங்கதையை கொஞ்சம்வித்தியாசமாக காட்டியுள்ளார் இயக்குநர் துரை.ஏற்கனவே முகவரி என்ற அருமையான படத்தைக் கொடுத்தவர். இப்போது டைரக்ஷனில் மேலும் மெருகேறியுள்ளார். படத்தில் வரும் பலகாட்சி அமைப்புகள் ரொம்பவே ரசிக்க வைக்கிறது.குறிப்பாக சிம்புவுக்கும், கோபிகாவுக்கும் இடையே காதல் பூக்கும் இடம். காதல் மலர்ந்தவுடன் வெளிநாட்டுக்குப் போய் டூயட் பாடும்வேலையை இயக்குநர் இங்கு வைக்கவில்லை. ரொம்ப இயல்பாக அதைக் காட்டியிருக்கிறார். அதற்காக அவருக்கு ஒரு சபாஷ் போடலாம்.அதேபோல, கோபிகா தனது காதலை சொல்லி விட்டுப் போன பிறகு, அதை ஏற்க மறுத்து ஊருக்குத் திரும்புவதற்காக நிற்கும் சிம்பு, மனசுகேட்காமல், ஓடி வந்து பஸ்ஸில் ஏறுகிறாரே, அழகான தவிப்பு!

  By Staff
  |

  ரொம்ப பழைய கதை. ஆனால் அதை சொல்லிய விதத்திற்காக சபாஷ் கொடுக்கலாம் இயக்குநர் துரைக்கு.

  தொட்டி ஜெயா, அப்பா, அம்மா, சொந்தம், பந்தம் யாரும் இல்லாத அனாதை. ஒரு ஹோட்டலில் பாத்திரம் கழுவும் வேலை. முதலாளியிடம்அடிக்கடி திட்டு விழுகிறது. ஆனாலும் அவன் அதிகம் பேசுவதில்லை. ஒரு நாள் முதலாளியிடம் தகராறு செய்யும் ஒரு கும்பலை மிரட்டி ஓடவைக்கிறான். அது முதல் முதலாளிக்கு தொட்டி ஜெயா மீது பயம் கலந்த மரியாதை ஏற்பட்டு விடுகிறது. தன்னைக் காப்பாற்றியதற்காகதொட்டி ஜெயாவுக்கு பணம் கொடுக்கிறார் முதலாளி.

  ஆனால் அதைப் புறக்கணிக்கும் ஜெயா, அங்கிருந்து வெளியேறுகிறான். வெளியே வரும் அவனுக்கு ரவுடிக் கும்பலின் அறிமுகம்கிடைக்கிறது. லோக்கல் தாதா சீனா தானாவின் நட்பு கிடைக்கிறது. அங்கேயே அடைக்கலமாகி விடும் தொட்டி ஜெயாவை, சினா தானாவளர்த்து பெரிய அடிதடி வீரனாக மாற்றி தனக்கு அடியாளாக வைத்துக் கொள்கிறார்.

  முகம் நிறைய தாடியும், முரட்டுக் குணமும், அதிகம் பேசாத மெளனமுமாக சீனா தானா ஏவும் வேலைகளை செவ்வனே செய்யும் முரட்டுரவுடியாக வருகிறான் தொட்டி ஜெயா. ஒரு கொலை வழக்கில் போலீஸாரிடமிருந்து நெருக்குதல் வரவே, தொட்டி ஜெயாவைகொல்கத்தாவிற்கு அனுப்பி வைக்கிறார் சீனா தானா.

  அங்கு ஒரு தென்றலை சந்திக்கிறான் சினா தானா. கன்னியாகுமரியிலிருந்து டூர் வந்த மாணவி பிருந்தா, டிக்கெட்டைத் தொலைத்து விட்டுதெரியாத்தனமாக விபச்சாரக் கும்பலிடம் மாட்டிக் கொள்கிறாள். அவளை தொட்டி ஜெயா காப்பாற்றுகிறான்.

  தன்னை பத்திரமாக ஊர் வரை கொண்டு வந்து விட்டு விடும்படி பிருந்தா கெஞ்சவே, அவளுடன் ரயில் ஏறுகிறான். ரயில் பயணத்தில்,தொட்டி ஜெயா நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து அசந்து போகிறாள் பிருந்தா.பார்க்க முரட்டுத்தனமாக இருந்தாலும் இவ்வளவுகண்ணியமா என்று ஆச்சரியப்படும் அவளுக்குள் காதல் பூக்கிறது.

  ஊர் வந்து இறங்கியதும், ஜெயாவுக்கு நன்றி சொல்லும் பிருந்தா, கூடவே தனது காதலையும் சொல்கிறாள். ஆனால் முதலில் ஏற்க மறுத்துதன் வழியே செல்லும் ஜெயாவுக்கு, பிருந்தாவின் நினைவு வாட்டவே, அவளைத் தேடி ஓடுகிறான்.

  இருவரும் காதலிக்கத் தொடங்கும்போது சீனா தானா குறுக்கிடுகிறார். பிருந்தாவின் அப்பாவே அவர்தான்! தனது மகளையே தொட்டிஜெயா காதலிப்பதை விரும்பாத சினா தானா, ஜெயாவைத் தீர்த்துக் கட்ட ஆட்களை ஏவுகிறார். அதை எப்படி தொட்டி ஜெயாசமாளிக்கிறான், பிருந்தாவை அடைந்தானா என்பதுதான் தொட்டி ஜெயாவின் குட்டிக் கதை.

  அடியாள் ஒருவன் ரவுடி மகளைக் காதலிப்பதும், அதற்கு எதிர்ப்பு ஏற்படுவதும், அதை அவன் சமாளித்து கல்யாணம் செய்து கொள்வதும்ஏற்கனவே நிறையப் படங்களில் பார்த்து சலித்துப் போன கதை. ஆனால் தொட்டி ஜெயாவில் இந்தப் பழங்கதையை கொஞ்சம்வித்தியாசமாக காட்டியுள்ளார் இயக்குநர் துரை.

  ஏற்கனவே முகவரி என்ற அருமையான படத்தைக் கொடுத்தவர். இப்போது டைரக்ஷனில் மேலும் மெருகேறியுள்ளார். படத்தில் வரும் பலகாட்சி அமைப்புகள் ரொம்பவே ரசிக்க வைக்கிறது.

  குறிப்பாக சிம்புவுக்கும், கோபிகாவுக்கும் இடையே காதல் பூக்கும் இடம். காதல் மலர்ந்தவுடன் வெளிநாட்டுக்குப் போய் டூயட் பாடும்வேலையை இயக்குநர் இங்கு வைக்கவில்லை. ரொம்ப இயல்பாக அதைக் காட்டியிருக்கிறார். அதற்காக அவருக்கு ஒரு சபாஷ் போடலாம்.

  அதேபோல, கோபிகா தனது காதலை சொல்லி விட்டுப் போன பிறகு, அதை ஏற்க மறுத்து ஊருக்குத் திரும்புவதற்காக நிற்கும் சிம்பு, மனசுகேட்காமல், ஓடி வந்து பஸ்ஸில் ஏறுகிறாரே, அழகான தவிப்பு!

  சிம்பு, கோபிகா இரண்டு பேருமே நடிப்பில் கொள்ளை கொள்கிறார்கள். ஒரு பக்கம் முரட்டுக் காவியமாக சிம்பு, மறுபக்கம் அழகானஓவியமாக கோபிகா. முரட்டுத்தனம் ரத்தத்தில் ஊறியது என்பதை காட்டுவதற்காக எப்போதுமே கடுகடுவென்று இருக்கும் முகத்தை சிம்புரொம்ப அழகாக காட்டியிருக்கிறார்.

  வசன உச்சரிப்பிலும் தடுமாற்றம் இல்லை, எதற்கும் பயப்படாதவன், எல்லாத்துக்கும் துணிந்தவன் என்ற கேரக்டருக்கு ஏற்ப நடிப்பைவெளிப்படுத்தியிருக்கிறார். குட்டி சிம்புவாக வரும் பையனும் அசத்தியிருக்கிறான். காசு கொடுக்கிறியா, அடிக்கிறேன் என்று குட்டி தொட்டிஜெயா சொல்வது, ரவுடித்தனத்தின் பிறப்பை நமக்கு உணர்த்துகிறது.

  கோபிகாவின் நடிப்பு அட்டகாசம். கொல்கத்தா ரயில் நிலையத்தில் ரயிலை தவற விட்டுப் பதறும்போதும் சரி, கையில் பைசா இல்லாதநிலையிலும் வளையல் வாங்க ஆசைப்பட்டு, அதை சிம்பு பார்த்து விட்டபோது வெட்கப்படும்போதும் சரி, சிம்புவிடம் தனது காதலைசொல்லும்போதும் சரி, கலக்கியிருக்கிறார்.

  படத்தில் இன்னொரு நல்ல விஷயமும் இருக்கிறது, காமடி கிடையாது. இதனால் படம் பார்க்கும்போது ரொம்ப சீரியஸாக பார்க்கவேண்டியிருக்கிறது. ஆனால் அதை ஈடு கட்டும் விதமாக பல இடங்களில் லாஜிக்கில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர்.

  ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் 2 பாடல்களை கேட்க முடிகிறது. பின்னணி இசையில் பாய்ந்திருக்கிறார். ராஜசேகரின் கேமரா கண்களுக்குவலியைக் கொடுக்காமல் மென்மையாக இருக்கிறது. லிண்டாவின் குத்துப் பாட்டு ரசிகர்களுக்காக.

  சண்டைக் காட்சிகளில் சிம்பு நன்கு உக்கிரம் காட்டுகிறார். சிலோன் மணோகர் இந்தப் படத்தில் தாதாக்களில் ஒருவராக வந்து மிரட்டுகிறார்.ஆனால் மெயின் வில்லனாக வரும் பிரதீப்தான் மிரட்டுகிறார். ஆனால் முரட்டுத்தனத்தைக் காட்டுவதற்காக ரொம்ப கஷ்டப்பட்டு பேசுகிறார்,அது கொஞ்சம் ஓவராகத் தெரிகிறது!

  அடிதடி அடியாள் படம் என்பதற்காக ஏகப்பட்ட சண்டைக் காட்சிகளை வைக்காமல், அதேசமயம், குறைவாகவே இருந்தாலும் நச்சென்றுசண்டைக் காட்சிகளை வைத்து அசத்தியிருக்கிறார் இயக்குநர். படம் முழுக்க நிறைய அமைதி தெரிகிறது. சண்டையிலும் கூட ஏகப்பட்டகும்பலை சேர்க்காமல் குறைச்சலான ஆட்களை வைத்தே சண்டைகளை அமைத்திருக்கிறார்கள். அதையும் பாராட்ட வேண்டும்.

  நிதானமாக போவது போலத் தெரியும் படம் போகப் போக விறுவிறுப்படைகிறது. சிம்புவின் நடிப்பில் ரொம்பவே மெருகு ஏறியிருக்கிறது.இறுதிக் காட்சியில் மனுஷன் கலக்கி விட்டார். சீனா தானாவின் காலில் விழுந்து கதறும்போது உருக வைக்கிறார்.

  மன்மதனில் பார்த்த ரொமாண்டிக் சிம்புவை, முற்றிலும் மாறுபட்ட முரட்டு சிம்புவாக மாற்றி பிரமிக்க வைத்துள்ளார் துரை.

  ரொம்பவும் சிலாகிக்க முடியவில்லை என்றாலும் கூட தொட்டி ஜெயா, ஓ.கேதான்!

  Read more about: chandramukhi cinema kannamma review
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X