»   »  பட விமர்சனம்

பட விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

மிழ் சினிமாக்களில் திரைக் கதையினால் ஜெயித்த படங்களின் பட்டியலில் வருகிறது உன்னைக் கண் தேடுதே. காமெடி கலந்த குடும்பப்படம். கலகலப்பாக போய்க்கொண்டிருக்கும் படத்தில் தீடீரென்று ஒரு திருப்பம். ஒரு தாலியைக்கையில் வைத்துக்கொண்டு அந்த கல்யாணவீட்டில் யார் தாலி, யார் தாலி என்று சத்யராஜ் கேட்டுக்கொண்டு வரும் பொழுது குஷ்பூ என்னுடையது என்று சொல்வதில் திகில் படமாகமாறுகிறது.

ஒரு கொலை செய்தது யார் என்று தெரிய வருகிறது. கொலையான நபர் யார் என்பது தெரியாமலேயே, கதை நகர்த்தப்பட்டு அந்தக்கொலையோடு கல்யாண வீட்டை முடிச்சுபோடும் வரை திரில்லாகவே செய்திருக்கிறார்கள்.

என்னம்மா கண்ணு படம் மூலம் தனது மார்கெட்டை நிலை நிறுத்திக் கொண்டு மீண்டு வந்த சத்யராஜ் இப்பொழுது மார்கெட்டைஉறுதிபடுத்திக்கொண்டிருக்கிறார். இதற்கு உன்னைக் கண் தேடுதே ரொம்பவே உதவியிருக்கிறது.

ஒரு கல்யாண வீட்டில் திருமணத்திற்கு முன் தினம் நடக்கும் ஏற்பாடுகளில் தொடங்கி திருமணம் முடிந்து மாப்பிளை அமெரிக்காவுக்குபிளேன் ஏறுவது தான் கதை. திரைக்கதை மூலமாக நிறைய இடங்களில் உயிரூட்டியிருக்கிறார்கள்.

லிவிங்ஸ்டன், மதன் பாப், சச்சு, டெல்லிகணேஷ், சி.ஆர்.சரஸ்வதி, பானு, பாபிலோனா என்று ஒரு பெரும் நட்ச்திரக் கூட்டமே திரையில்உலாவருகிறது.

சத்யராஜூக்கு ஜோடியாக ரவளி. வழக்கம்போல் தனது ஆயுதமான கவர்ச்சியை நம்பி களமிறங்கியிருக்கிறார். பல இடங்களில் அவரைநடிக்க வைக்கவும் முயற்சி செய்திருக்கிறார்கள்.

ரவளியின் முறைப் பையனாக வரும் விவேக், ரவளியை கைபிடிக்க முயலும்போது செய்யும் ஒவ்வொரு லூட்டிகளும் சிரிக்க வைக்கின்றன.

கல்யாண வீட்டில் வேலை செய்யும் ஏஜென்டாக மணிவண்ணன். குஷ்பூவின் நாத்தனார் கல்யாணத்தை நல்லபடியாகமுடித்துக்கொடுத்தால்தான் தன்னுடைய மகள் ரவளியை உனக்குத் திருமணம் செய்து வைப்பேன் என்று கண்டிஷன் போட்டவுடன்பம்பரமாக சுழன்று வேலை செய்யும் சத்யராஜ்.

அந்த வேலையில் ஏதாவது குழப்பத்தை உண்டு பண்ண பல்லியைப்பிடித்து சாப்பாட்டில் போட்டு விடும் திட்டத்தில் பல்லியைப்பார்த்துக்கொண்டிருக்க, உள்ளே சேலைகட்டிக் கொண்டிருக்கும் பெண் தன்னை தான் முறைத்துப் பார்கிறான் என்று சொல்லிவிட விவேக்தர்ம அடிவாங்குவது சூப்பர்.

படம் முழுக்க விவேக், மணிவண்ணன், செந்தில், கோவை சரளா வருகிறார்கள். எல்லா நடிகர்களுமே ஐயர் பாஷை பேசி ஜமாய்க்கிறார்கள்.சபாஷ் தான் போங்கோ.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil