For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  முரட்டுத்தனமான பேய்களை விரட்டுவதே வி .இஸட்.துரையின் இருட்டு

  |

  Rating:
  3.5/5

  நடிகர்கள்: சுந்தர்.சி, சாய் தன்ஷிகா ,யோகி பாபு,விடீவி கனேஷ்,விமலா ராமன் ,சாக்ஷி சவ்தரி

  இசை: கிரீஷ்

  இயக்குனர்: வி.இஸட்.துரை

  நீண்ட இடைவெளிக்கு பிறகு சுந்தர்.சி நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தான் இருட்டு .சுந்தர்.சி கடைசியாக முத்தின கத்திரிக்காய் படத்தில் நடித்திருந்தார் .இந்த படத்திற்கு பிறகு இயக்குனராக பிஸியான சுந்தர் .சி வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை .சுந்தர்.சி தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் .இவர் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் .

  v.z durai directed iruttu movie is a complete horror

  சுந்தர்.சி 2006ல் வெளியான தலைநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் .அந்த படம் பலரிடத்தில் நல்ல பாராட்டை பெற்றது .தலை நகரம் படத்திற்க்கு பிறகு சுந்தர்.சிக்கு தொடர் வாய்ப்புகள் கிடைத்தது .அதையடுத்து வீராப்பு ,சண்டை ,ஆயுதம் செய்வோம்,பெருமாள்,தீ,ஐந்தாம் படை , குரு சிஷ்யன், வாடா, நகரம் மறுப்பக்கம்,முரட்டு காலை ,அரண்மனை மற்றும் அரண்மனை 2 ,முத்தின கத்திரிக்காய் ஆகிய படங்களில் நடித்தார் .இதில் பல படங்கள் சுந்தர்.சிக்கு வெற்றி படங்களாகவே அமைந்தது ,சுந்தர் .சி நடிக்கும் சமயங்களில் சரியாக 2006 முதல் 2011 வரை அவர் படமே இயக்காமல் முழுக்க முழுக்க நடித்தே வந்தார். அதற்கு பிறகு கலகலப்பு மற்றும் அதன் இரண்டாம் பாகம், அரண்மனை மற்றும் அதன் இரண்டாம் பாகம் ,வந்தா ராஜாவாதான் வருவேன் ,ஆம்பள மற்றும் ஆக்சன் என மீண்டும் இயக்கத்தில் பிஸியாகி போன சுந்தர்.சி தற்போது மீண்டும் ஒரு படத்தில முழு நீள கதாபாத்திரத்தில் இருட்டு படத்தில் நடித்துள்ளார் .

  இருட்டு படத்தை வி.இஸட்.துரை கதை எழுதி இயக்கியுள்ளார் ,படத்தில் சுந்தர்.சி போலீஸாக நடித்துள்ளார் ,மேலும் சாய் தன்ஷிகா ,யோகி பாபு,விடீவி கனேஷ்,விமலா ராமன் ,சாக்ஷி சவ்தரி ஆகியோர் படத்தில் முக்கியமான வேடங்களில் நடித்து உள்ளனர்.

  v.z durai directed iruttu movie is a complete horror

  பேய் படங்களின் வரவு தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிகரித்து கொண்டு தான் உள்ளது .காஞ்சனா படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் பேய் பட டிரென்ட் எங்கேயோ போய்விட்டது என்று கூறலாம் .ஆனால் அதில் பாதிக்கும் மேற்பட்ட படங்கள் தோல்வி படங்களே அதனாலே அந்த பேய் பட டிரென்ட் என்பது சரிவை சந்தித்தது .சில படங்கள் மட்டுமே மிரள வைக்கும் , அதிர வைக்கும், நம்மை சீட் நுணிக்கு அழைத்து செல்லும் . அப்படி பட்ட படங்கள் எப்போதாவது தான் வரும் . தற்போது சுந்தர்.சி நடிப்பில் இருட்டு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பல காட்சிகள் திகில் மற்றும் பயத்தின் உச்சத்திற்கு நம்மை அழைத்து செல்கிறது.

  படத்தின் முதல் பாதியில் மிகவும் அழுத்தமாக கதையை புரிய வைக்கிறார் இயக்குனர். ஒவ்வொரு காட்சியும் அலுப்பு தட்டாமல் விறுவிறுப்புடன் செல்கிறது. படத்தின் சுவாரஸ்யமான ஸ்க்ரீன் பிலே படத்திற்கு மிக பெரிய பலம். 100% ஹாரர் பிலிம் பார்த்து மிக அதிக நாட்கள் ஆகிவிட்டது. கமேற்சியல் மசாலா என்று எதுவும் கலக்காமல் சொல்ல வந்த கருத்தை ஆணி தனமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் துரை.

  v.z durai directed iruttu movie is a complete horror

  அருமையான லொகேஷன்ஸ் கண்களுக்கு இதமாகவும் கொஞ்சம் ரீலாக்ஸ்டாகவும் இருக்கிறது . நல்ல
  டெக்னிசியன்ஸ் பயன் படுத்தி நம்மை மனோ ரீதியாக கதைக்குள் ஆழ்த்தி படபடப்பை ஏற்படுத்திக்கிறார்.
  ஆங்காகே சுந்தர்.சி பேசும் ஆங்கில மொழி தான் கொஞ்சம் நெருடல் மற்றபடி நடிப்பை யதார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் அழாகாக செய்திருக்கிறார்.

  இருட்டு எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் பயமும் பிரட்சனையும் வருகிறது . அதை அழகாக ஜஸ்டிபை செய்துள்ளார் இயக்குனர் துரை. விமலா ராமன் தோன்றும் காட்சிகள் படத்தில் மிகவும் முக்கியமான காட்சிகள். நீண்ட இடைவெளி விட்டு தமிழ் சினிமா வந்து உள்ளார் விமலா ராமன். நல்ல நல்ல படங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் .

  பூத் பங்கலா , பேய் என்று ரெகுலர் பார்மெட்டுக்குள் சிக்காமல் ஒரு கிராமமே நம்மை அதிர வைக்கிறது. இப்படி பட்ட படங்களுக்கு பின்னணி இசை தான் மிக மிக முக்கியம். பக்காவாக பிரமாண்டமாக சிறப்பு சப்தங்கள் கொடுத்து பின்னணி இசையில் நம்மை மூச்சை திணற வைக்கிறார் கிரீஷ் .

  v.z durai directed iruttu movie is a complete horror

  வி .இஸட்.துரை மீண்டும் தமிழ் சினிமாவில் அசத்தி உள்ளார். ஒரு நல்ல கம் பாக் மூவி என்று சொல்லலாம்.
  வி .எப் .எக்ஸ் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். மற்றபடி ஒரு தரமான ஹாரர் படம் என்று தான் சொல்ல வேண்டும்.

  மற்ற கமேற்சியல் மசாலா பேய் படங்களை பார்த்தவர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக பயத்தை ஏற்படுத்தும். குழந்தைகளுடன் இரவு காட்சி பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.

  பேய்யை விரட்டு -அதுதான் இருட்டு என்று சிம்பிளாக சொல்லிவிட முடியாது . நிறைய திரைக்கதை முடிச்சுக்களுடன் இருட்டு படம் நல்ல என்டெர்டைன்மெண்ட்.

  English summary
  sundar.c has directed many commercial films and also produced many fun filled comedy movies. this time he has acted in a different script in his carrier. its a complete horror movie directed by v.z durai . The movie is telling about islamic beliefs and also many evil aspects revolving around the village. sure many horror movie lovers will enjoy this movie too the core.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X