twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Movie Review : ஸ்ரீகண்டன் இயக்கத்தில் வெற்றியின் நடிப்பில் "வனம்" படம் எப்படி இருக்கு ?

    |

    Rating:
    3.0/5
    Star Cast: நடிகர்கள் : வெற்றி அணு சித்தாரா ஸ்ம்ரிதி வெங்கட் வேலா ராமமூர்த்தி அழகம் பெருமாள்
    Director: இயக்கம் : ஸ்ரீகண்டன் ஆனந்த்

    சென்னை : வெற்றி, அனு சித்தாரா, ஸ்மிருதி வெங்கட், அழகம் பெருமாள், வேலா ராமமூர்த்தி ஆகியோர் நடிப்பில் ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கியுள்ள படம் வனம் . கோல்டன் ஸ்டார்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. ரான் ஈதன் யோஹான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    8 தோட்டாக்கள், ஜீவி,கேர் ஆப் காதல் படங்களில் நடித்த வெற்றி இந்த படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுசித்தாரா மல்லி என்ற கதாபாத்திரத்தில் மலைவாழ் பெண்ணாக கண்களால் கைது செய்கிறார் . வேலா ராமமூர்த்தி தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து ஒரு ராஜாவாக கம்பீரம் காட்டுகிறார் .

    மீண்டும் ஜெயிலுக்கு போன நிரூப் அன்ட் வைல்டு கார்ட் என்ட்ரி.. கேப்டன் டாஸ்க்கிற்கு தேர்வான 3 பேர்! மீண்டும் ஜெயிலுக்கு போன நிரூப் அன்ட் வைல்டு கார்ட் என்ட்ரி.. கேப்டன் டாஸ்க்கிற்கு தேர்வான 3 பேர்!

    ஒரு ஜமீன் கதையிலிருந்து ஆரம்பித்து பிறகு தற்காலத்தில் நடக்கும் அமானுஷ்ய சம்பவத்தை இனைத்து ஒரு சுவாரசியமான படத்தை எடுத்து இருக்கின்றார் இயக்குனர் ஸ்ரீகண்டன் .

    ஆராய்ச்சியின்  முடிவில்

    ஆராய்ச்சியின் முடிவில்

    வனப்பகுதியில் ( நட்ட நடு காட்டில் )புதிதாக ஒரு நுண்கலை கல்லூரி துவங்கப்படுகிறது. கல்லூரி விடுதியில் குறிப்பிட்ட அறையில் தங்கியுள்ள மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். எதற்காக அவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? என்று கதாநாயகன் வெற்றியும் தனது தோழி ஸ்ம்ரிதி வெங்கட்டும் ஆராய்கிறார்கள். அந்த ஆராய்ச்சியின் முடிவில் பல மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்க்ராக தெரிவது தான் படத்தின் முதல் பாதி . புலி சிங்கம் திரியும் நடுக் காட்டுக்குள் கல்லூரி ஒன்றைக் கட்டவேண்டும் என்று பரிகாரம் சொல்வதெல்லாம் கொஞ்சம் நம்பும் படியாக இல்லை என்று சொன்னாலும் படத்தின் பின்பாதி அதற்க்கு ஏற்றார் போல பல காட்சிகள் அமைத்தது இயக்குனரின் சாமர்த்தியம் .

    சில நேரங்களில்

    சில நேரங்களில்

    கதையாக கேட்கும்பொழுது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது, ஆனால் இந்தப் படத்தை காட்சிகளாக ஒவ்வொன்றாக பார்க்கும் பொழுது சில நேரங்களில் யூகிக்கக்கூடிய காட்சிகளாக தெரிவதுதான் ஒரு பெரிய குறையாக இருக்கிறது . சின்ன சின்ன லாஜிக் மிஸ்டேக்ஸ் இருந்தாலும் கூட அமானுஷ்ய கதை என்று எடுத்துக் கொண்டதால் அந்த குறைகளை சுட்டிக் காட்டத் தேவையில்லை. இருப்பினும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் வனம் படம் பூங்காவனமாக மக்கள் மனதில் நின்று இருக்கும்.

     மான்குட்டி ,பட்டாம்பூச்சி

    மான்குட்டி ,பட்டாம்பூச்சி

    ஒரு ஜமீன்தாரின் வெறியாட்டம் என்பது தெரிய வந்த பின், ஜமீனுக்கும் அந்த கல்லூரிக்கும் என்ன தொடர்பு? குறிப்பிட்ட அறையில் வசிப்பவர்கள் மட்டும் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்? அதற்கான காரணம் என்ன? என்று பல கேள்விகளுடன் பல விதமான க்ராபிக்ஸ் காட்சிகளுடன் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. மான்குட்டி ,பட்டாம்பூச்சி ,அருவி ,அடர்ந்த காடு என்று பல விஷயங்களை கவனம் செலுத்தி குழந்தைகளுக்கும் பிடிக்கும் ஒரு திரில்லர் படமாக இருப்பது கூடுதல் சிறப்பு.

    மாயாஜால கண்ணாடி

    மாயாஜால கண்ணாடி

    மறுபிறவி மற்றும் பழிவாங்கும் வழக்கமான திகில் திரைப்படங்கள் நமக்கு கண்டிப்பாக மனதில் அவ்வப்போது வந்து போகும்,ஒருவருடைய கடந்தகால வாழ்க்கையைக் காட்டக்கூடிய ஒரு மாயாஜால கண்ணாடியின் பின்னணிக் கதை, பழங்குடி பெண் ஒருத்தி காடுகளின் காவல் தேவதையாக (அனு சித்தாரா) காட்டியது இந்த கதைக்கு அழகு. அவைகளை தவிர்த்து பெண்களைத் தாக்கும் ஜமீன்தார் (வேல ராமமூர்த்தி) ஒரு கர்ப்பிணிப் பெண்ணை எட்டி உதைத்து மிதித்து நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்க முயற்சி செய்கிறார் இயக்குனர். இப்படி சில பல காட்சிகள் மிரள வைத்தாலும் ஸ்லோ மோஷன் காட்சிகள் கொஞ்சம் அதிகம் வைத்து விட்டார்களோ என்று என்ன தோன்றுகிறது.

    பயன்படுத்திய விதம்

    பயன்படுத்திய விதம்

    குறும்படங்கள் மூலம் நண்பர்களாக பழகி வெள்ளித்திரையில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் முயற்சி செய்துள்ள கோல்டன் ஸ்டார் அலெக்ஸுக்கும் இயக்குனர் ஸ்ரீகண்டன் இருவருக்கும் பாராட்டுக்களை கொடுக்கலாம். ஒரு நல்ல கதையை சமூகத்திற்கு கொடுப்பதற்காக இவர்கள் எடுத்த முயற்சி குறிப்பிடத்தக்கது.படத்திற்கு மிகப்பெரிய பலம் கேமராமேன் விக்ரம் . அடர்ந்த காட்டுப் பகுதிகளை டாப் ஆங்கிள் ஷாட் மூலம் காட்டிய விதம் மற்றும் ஹெலிகேம் பயன்படுத்திய விதம் மிகவும் நேர்த்தி. விவசாய நிலங்கள் அப்பார்ட்மெண்ட்களாகவும் கல்லூரிகள்ளாகவும் மாறுவதை அன்றாடம் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம்.

     உச்சகட்ட ஆசையை

    உச்சகட்ட ஆசையை

    காடுகளை அழித்து கல்லூரி கட்டுவது ,வனங்களை விரியச் செய்யாமல் வசப்படுத்திக் கொள்வது ,மனிதனின் உச்சகட்ட ஆசை. இயற்கையின் தேவையையும் மனிதனின் உச்சகட்ட ஆசையையும் வெவ்வேறு விதமாக யோசித்து திரைக்கதை அமைத்து படமாக்கி விதம் நன்று. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகவும் பாராட்டத்தக்கது . சின்னச் சின்ன குறைகள் திரைக்கதையில் இருந்தாலும் படத்தின் கிளைமாக்ஸ் பெரிய டிவிஸ்டு . குடும்பத்துடன் சென்று தியேட்டரில் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கலாம் . அழகம்பெருமாள் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரம் அதற்காக அவர் எடுத்துக்கொண்ட மெனக்கெடல் அருமை . சென்னையில் உள்ள எக்மோர் ஃபைன் ஆர்ட்ஸ் கல்லூரியை நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த திரைப்படத்தில் வித்யாசமான கேமரா கோணங்கள் மூலம் காட்டிய படக்குழுவுக்கு நன்றிகள் பல. வசனங்கள் எழுதிய ஐஸக் மற்றும் ஆடை வடிவமைப்பு செய்த மீனாட்சி இருவருக்கும் இன்னும் நிறைய வாய்ப்புகள் கதவை தட்டும்.

    வனம் வசப்பட்டு

    வனம் வசப்பட்டு

    கிளைமாக்ஸ் மட்டுமே மனதில் நிற்கிறது .ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொழுது ஒரு பீரியட் பிலிம் மற்றும் ஃபேன்டஸி கலந்த திகில் படத்திற்கு உண்டான தாக்கம் குறைவாகத்தான் இருக்கிறது -அதுவே ஒரு பெரிய குறையாகவும் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் மெனக்கெட்டுருந்தால் வனம் வானம் அளவு வசப்பட்டு இருக்கும். கிடைத்த பட்ஜெட்டில் கிடைத்த வாய்ப்பை முடிந்தவரை முயற்சி செய்த ஸ்ரீகண்டன் அடுத்த அடுத்த படைப்புகளில் மேலும் திரைக்கதையில் மெனக்கெட வேண்டும் என்பதுதான் அனைவரது ஆசையும்.

    English summary
    Director Srikantan Anand directed "VANAM" movie got released in theatres recently and the script revolves around nature and Rebirth of Human mankind. Lots of twist and turn with good camera work along with horror specifications in bgm makes the entire movie bit sensible. Also Actor vetri, Actress Anu sithara , have done their best. and it's one of the note worthy films at recent times.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X