»   »  பாட்டு எப்படி?

பாட்டு எப்படி?

Subscribe to Oneindia Tamil

அர்ஜூன், அபிராமியின் நடிப்பில் வானவில். பாடல்கள் ரொம்ப சுமார் ரகம் தான்.

வைரமுத்துவின் வரிகள் வீணடிக்கப்பட்ட படம். தேவா, தீபாவளி பிஸியில் அடித்தஅடி மாதிரி இருக்கிறது.

நிறையப் பேர் பாடியிருக்கிறார்கள். "ஆசை மகனே .. மலேசியா வாசுதேவன் நீண்டஇடைவெளிக்குப் பிறகு பாடியிருக்கிறார். உச்சிக் குரலில் நம்மை வெறுக்கச்செய்யாமல் கொஞ்சம் அமைதியாக பாடியிருக்கிறார். கொஞ்சம் குரலில் மாற்றம்தெரிகிறது. இது நல்லா தான் இருக்கு மலேசியா சார்.

சுஜாதா, கோபால் ராவ் குரலில், "ஹோலி ஹோலி .. திருஷ்டிக்காக போட்டது போலஇருக்கிறது டியூன். கோபால் ராவ், குரல் நன்றாக இருக்கிறது. லேசாகஇளையராஜாவின் சாயல் இருக்கிறது. "ழ வை நன்றாக உச்சரிக்கும் ஒரே தமிழ் பாடகர்இவர் தான்.

"கன்னிக் கோவில் .. இளையராஜாவின் ஒரு பழைய ட்யூனை, யுரேகா போர்ப்ஸ்கிளீனரால் தூசி தட்டி போட்டது மாதிரி இருக்கிறது.

"ஓ பெண்ணே .. எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதாவுடன் சேர்ந்துபாடியிருக்கிறார். குரல் கொஞ்சம் தேய்ந்தது போலத் தோன்றுகிறது. இருந்தாலும்,எஸ்.பி.பி. என்ற மயக்கம் இன்னும் அப்படியே இருக்கிறது.

எஸ்.பி.பி. தவிர, உன்னி மேனனும், ஸ்வர்ன லதாவுடன் சேர்ந்து இந்தப் பாடலைபாடியிருக்கிறார்.

"பிறையே .. மயக்கியிருக்கிறார் எஸ்.பி.பி. ஏக்கம், தவிப்பு, ஆதங்கம் மூன்றையும்கலந்து பாடுவதில் எஸ்.பி.பியை அடிக்க ஆள் உண்டா என்ன!

"வெளிநாட்டுக் காற்றே .. ஹரிகரன், ஹரினியின் குரலில். தமிழை கொஞ்சம்வெளிநாட்டுக்கு அழைத்துப் போயிருக்கிறார்கள். அடுத்த எஸ்.பி.பி. என்ற பெயர்ஹரிகரனுக்குப் பொருத்தமாகத்தான் தெரிகிறது. குழைந்திருக்கிறார்.

வானவில்- வெடிக்காத அணு குண்டு.

பிரியமானவளே ..கண்ணுக்கு கண்ணாக ...

சீனு ... தெனாலி ..

வண்ணத் தமிழ் பாட்டு...சினேகிதியே ...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil