For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Vantha Rajavathaan Varuven Review: சிம்பு மனதில் இருக்கும் உண்மை ஜெயிக்குமா... விஆர்வி விமர்சனம்!

  |
  AAA Part-2 தான் வந்தா ராஜாவா தான் வருவேன் படம்- வீடியோ

  Rating:
  3.0/5
  Star Cast: சிலம்பரசன், மேகா ஆகாஷ், கேதரின் தெரசா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு
  Director: சுந்தர் சி

  சென்னை: கோபத்தில் இருக்கும் அத்தையை சமாதானப்படுத்த, வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் மருமகனின் கதை தான் வந்தா ராஜாவாதான் வருவேன்.

  உலக நாடுகளில் விரல்விட்டு எண்ணக் கூடிய பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் சிம்பு. தாத்தா நாசருக்கு சண்டை போட்டு பிரிந்து போன தனது மகள் ரம்யாகிருஷ்ணனை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. ஆனால் அது சாத்தியமில்லை என்கிறார் சிம்புவின் அப்பா சுமன். தாத்தாவின் ஆசைக்காக தனது பரிவாரங்களுடன் அத்தையை தேடி சென்னை வருகிறார் மருமகன் சிம்பு. அத்தையை சந்தித்து எப்படி சமாதானம் செய்கிறார் என்பதை தனது வழக்கமாக கலகல காமெடி திரைக்கதையில், செண்டிமெண்ட், ரெலாமான்ஸ், மாஸ் ஆக்ஷன் மசாலா தூவி பரிமாறியிருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி.

  Vantha Rajavathaan Varuven movie review

  பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் ஹிட்டான 'அத்தரிண்டிக்கு தாரேதி' படத்தின் தமிழ் ரீமேக் தான் வந்தா ராஜாவாதான் வருவேன். தெலுங்கு படத்தின் ஐடியாவை மட்டும் எடுத்துக்கொண்டு, தமிழுக்கு தகுந்த மாதிரி மாற்றியிருக்கிறார் சுந்தர்.சி. வழக்கமாக அவரது படங்கள் எப்படி இருக்குமோ, அப்படி தான் இருக்கிறது இந்த படமும்.

  சிம்பு - சுந்தர்.சி கூட்டணியில் வரும் முதல் படம் என்பதால், இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. அதனை முடிந்தவரை பூர்த்தி செய்திருக்கிறார்கள். காமெடி, செண்டிமெண்ட், ரொமான்ஸ், குத்து பாட்டு, மாஸ் ஆக்ஷன், பஞ்ச் டயலாக் என ஒரு புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி தான் படம் பார்த்துவிட்டு வெளியவரும் போது ஏற்படும். வழக்கமான அத்தை - மருமுகன் இடையிலான போட்டி, சண்டை என படத்தை நகர்த்தாமல், படத்தை ஜாலியாக தந்துள்ளது ரசிக்க வைக்கிறது.

  Vantha Rajavathaan Varuven movie review

  தொடர் சறுக்கல்களை சந்தித்த சிம்புவுக்கு இது கம்பேக் படம். செக்கச் சிவந்த வானத்தில் கூட்டணி ஆட்சி செய்த சிம்பு, இதில் தனிக்காட்டு ராஜாவாக ஆட்சி புரிகிறார். விரல்களில் வித்தை காட்டும் பழைய சிம்புவை மீண்டும் பார்க்க முடிகிறது. பஞ்ச் டயலாக் பேசிவிட்டு, 'ரொம்ப நாள் கழித்து பஞ்ச் எல்லாம் பேசுறது எனக்கே பிடிச்சிருக்கு' என அவரே அதை சிலாகித்து பேசும் இடம் ரசிக்க வைக்கிறது.

  படம் முழுக்க ஜாலியாக வந்தாலும், க்ளைமாக்ஸ் காட்சியில் சின்னதாக ஒரு எமோஷன் காட்டி, 'நான் பிறந்ததில் இருந்தே ராஜா' என கெத்து காட்டுகிறார் நம்ம லிட்டில் சூப்பர் ஸ்டார். சில பஞ்ச் வசனங்கள் யாரையோ குறிப்பிட்டு பேசுவது போலவே இருக்கிறது. ஆனால் செம பிட்டான சிம்பு, இப்போது புவன்சர் போல் தடியாகிவிட்டார். அதனால் உடல் வலிக்காமல் சண்டைபோட்டு, டான்ஸ் ஆடி, ரொமன்ஸ் செய்து நடித்திருக்கிறார். நீண்ட ஆட்கள் கழித்து அவரது ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல விருந்து படைத்துள்ளது.

  சிம்புவின் அத்தையாக வருகிறார் ரம்யா கிருஷ்ணன். அவரது கணவராக பிரபு நடித்திருக்கிறார். பிடிவாதக்கார அத்தை பாத்திரத்திற்கு இயற்கையாகவே பொறுந்திபோகிறார் ரம்யா கிருஷ்ணன். ஆனால் நீலாம்பரியின் வயது முகத்தில் தெரிகிறது.

  Vantha Rajavathaan Varuven movie review

  ரோபோ சங்கர், விடிவி கணேஷ் என பலரும் ஆரம்பத்தில் இருந்து காமெடி செய்தாலும், இடைவேளைக்கு பின்னர் யோகி பாபு வந்த பிறகு தான் படம் களைகட்டுகிறது. கடைசி அரை மணி நேரத்தை யோகி பாபு கையில் கொடுத்திருக்கிறார்கள். செம காமெடி ப்ரோ.

  மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, என இரண்டு ஹீரோயின்கள். இரண்டு பேரும் சிம்புவுக்கு அத்தை மகள்கள். போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார்கள். ஒரு கமர்சியல் மாஸ் ஹீரோ படத்தில், ஹீரோயினுக்கு என்ன வேலையோ அதை தெளிவாக செய்திருக்கிறார்கள். இருவரில் மேகா ஆகாஷ் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக கவர்கிறார்.

  மொட்டை ராஜேந்திரன் சுமன், விச்சு, கௌதம், அபிஷேக் உள்பட படத்தில் ஏகப்பட்ட செட் ப்ராப்பர்டீஸ் இருக்கின்றன. எல்லோருமே துணை நடிகர்களை போல் அட்மாஸ்பியரை நிரப்புகிறார்கள்.

  ஹிப்பாப் தமிழா ஆதியின் இசையில் 'எனக்கா ரெட்காட்டு' பாட்டு மட்டும் மனதில் பதிகிறது. மற்ற பாடல்களை எல்லாம் திரும்ப திரும்ப கேட்க நேரிட்டால், ஒருவேளை மனதில் பதியலாம். ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான வழக்கான பின்னணி இசையை தந்திருக்கிறார்.

  Vantha Rajavathaan Varuven movie review

  கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு படம் நெடுக கண்ணுக்கு குளிர்ச்சியை தருகிறது. கலர்புல்லான பாடல்கள் காட்சிகளும் கண்ணுக்கு இனிமை. ஸ்ரீகாந்த்தின் படத்தொகுப்பு படத்தை போரடிக்காமல் கொண்டு செல்கிறது.

  பழைய சுந்திர்.சி படங்களின் பார்ட் 4, பார்ட் 5 போல தான் இந்த படமும் இருக்கிறது. ஆனால் அவர் படத்தில் வழக்கமாக இருக்கும் காமெடி காட்சிகள் இதில் குறைவு. முழுக்க முழுக்க காமெடி படமாக எடுக்காமல், சிம்புவுக்காக ஒரு மாஸ் ஹீரோ படத்தை தந்திருக்கிறார்.

  கதை, லாஜிக் பற்றி எல்லாம் யோசிக்காமல், இரண்டரை மணி நேர பொழுதை ஜாலியாக கழிக்க வேண்டும் என நினைத்தால், நிச்சயமாக 'வந்தா ராஜாவா தான் வருவேன்' பார்க்கலாம்.

  English summary
  The tamil movie Vantha Rajavathaan varuven is complete family drama, with lots of entertaining elements in it.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X