»   »  வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.: பட விமர்சனம்

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.: பட விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற படத்தின் ரீமேக், தமிழில் கமல்- சரண்- பரத்வாஜ்- வைரமுத்து- கிரேஸிமோகன் கூட்டணியின் கைவண்ணத்தில் வருகிறது எனும்போது எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும். அதற்குவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் தீனி போட்டிருக்கிறதா என்றால் இல்லை.

சென்னையில் பிரபு, கருணாஸ் வகையறாக்களுடன் சேர்ந்து கொண்டு வட்டிப் பணத்தை வசூலித்துத் தரும் அடிதடிபார்ட்டிதான் வசூல்ராஜா கமல். ஆனால் ஊரிலிருக்கும் அப்பா (நாகேஷ்), அம்மாவிடம் (ரோகிணிஹட்டாங்டி)டாக்டர் என்று சொல்லி வைக்கிறார்.

அவர்கள் தன்னைப் பார்க்க வரும்போது டாக்டராக வேஷம் போடுகிறார். இது தெரியாமல் நாகேஷ், டாக்டர்பிரகாஷ்ராஜின் டாக்டர் மகளை கமலுக்குப் பெண் கேட்கிறார். பெண் பார்க்கும் படலத்தில் கமல் ரெளடி என்பதுதெரிய வந்து, பிரகாஷ்ராஜ் அவமானப்படுத்தி விடுகிறார்.

இதனால் ஆவேசமான கமல், பிரகாஷ்ராஜூக்கு குடைச்சல் கொடுக்க, அவர் டீனாக இருக்கும் மருத்துக்கல்லூரியில், சில தகிடுதத்தங்கள் செய்து முதலாமாண்டு மாணவராக சேர்கிறார். அங்கு அவரும், அவரது அடிதடிகும்பலும் சேர்ந்து அடிக்கும் லூட்டிதான் கதை.

சட்டம் என் கையில், சவால், பம்மல் கே. சம்மந்தம் படங்களில் இதுபோன்ற அடிதடி கேரக்டர்கள்பண்ணியிருப்பதால், கமல் இதை அல்வா சாப்பிடுவது போல் செய்திருக்கிறார். மனுஷருக்கு வயசு இறங்கு முகத்தில்இருக்கிறது போல. ஜிம் பாடி, டைட் சர்ட் என ஜம்மென இருக்கிறார். காமெடியிலும், சீரியல் காட்சிகளிலும்குறைவின்றி ஸ்கோர் பண்ணுகிறார்.

படத்தில் பிரபு பெரிதும் வீணடிக்கப்பட்டிருக்கிறார். அல்லக்கை ரெளடிகளில் ஒருவராக கருணாசுடன் இவரும்வந்து போகிறார்.

கதாநாயகியாக ஸ்னேகா. பிரகாஷ்ராஜின் மகளாகவும், கமலின் பால்ய சிநேகிதியாகவும், பின்னர் அவரைக்காதலிப்பவராகவும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை அழகாக செய்து முடித்திருக்கிறார்.

கமலுக்கு அடுத்து படத்தில் ஸ்கோப் உள்ள வேடம் பிரகாஷ்ராஜூக்கு. மனிதர் பொறுப்பை உணர்ந்துநடித்திருக்கிறார். அதுவும் மருத்துவக் கல்லூரியில் கமலிடம் மாட்டிக் கொண்டு இவர் விழிப்பது அசத்தல்.

சரண்- பரத்வாஜ் கூட்டணி இந்தப் படத்தில் சறுக்கியிருக்கிறது. ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா பாடல் கந்தசாமிராமசாமி பாடலையும், கலக்கப் போவது யாரு பாடல் அதோ அந்தப் பறவை போல பாடலையும்நினைவுபடுத்துவது துரதிர்ஷ்டம்.

படத்தை ஒன்று முழுக்க முழுக்க நகைச்சுவையாக எடுத்திருக்கலாம். இல்லை சீரியஸாக எடுத்திருக்கலாம். ஆனால்இரண்டும் இல்லாமல் கொஞ்ச நேரம் காமெடி, கொஞ்ச நேரம் சீரியஸ் என்று பண்ணியிருக்கிறார்கள்.

ஒரு காட்சியில் சீரியஸாக கமல் நடித்து, பார்ப்பவர்களைக் கண்கலங்க வைத்து விட்டு, அடுத்த காட்சியில் காமெடிபண்ணப் போய்விடுகிறார். இதனால் முதலில் பார்த்த சீரியஸ் காட்சியும் அடிபட்டு, அடுத்து வரும் காமெடிகாட்சியும் காலியாகி விடுகிறது. படத்தைப் பெரிதும் பலவீனப்படுத்துவது மாறி மாறி வரும் இத்தகைய காட்சிகள்தான்.

காமெடியும் சீரியஸ் காட்சிகளும் கலந்து, காலேஜ் பொண்ணுங்க பேசற தமிழ் மாதிரி, படம் வந்திருக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil