»   »  இதுக்கு பேசாம 'ங்கோ**' னே டைட்டில் வெச்சிருக்கலாம்..! 'வீரா' விமர்சனம் #VeeraReview

இதுக்கு பேசாம 'ங்கோ**' னே டைட்டில் வெச்சிருக்கலாம்..! 'வீரா' விமர்சனம் #VeeraReview

Posted By:
Subscribe to Oneindia Tamil
#Veera Movie Review #வீரா படத்தின் விமர்சனம்

கிருஷ்ணா, கருணாகரன் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது 'வீரா' திரைப்படம். இப்படத்தை ராஜாராமன் இயக்கியுள்ளார்.

எழுத்தாளர் பாக்கியம் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இப்படத்தை ஆர் எஸ் இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. லியோன் ஜோன்ஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் 'கழுகு' கிருஷ்ணா, கருணாகரன், ஐஸ்வர்யா மேனன், தம்பி ராமையா, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ராதாரவி, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் எப்படி இருக்கிறது?

வீரா

வீரா

எழுத்தாளர் பாக்கியம் சங்கரின் கதை, திரைக்கதை, வசனத்தில் ராஜாராமன் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் 'வீரா'. வடசென்னை மனிதர்களின் முகங்களையும், வாழ்வியலையும் தனது சிறுகதைகளிலும், நூலிலும் வெகுசிறப்பாக பதிவு செய்திருக்கும் பாக்கியம் சங்கரின் கதை என்பதால் 'வீரா' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. இயக்குநர் ராஜாராமனும், பாக்கியம் சங்கரும் இணைந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வடசென்னை மனிதர்களின் வாழ்க்கையும், படத்திற்கு எடுத்துக்கொண்ட கருவையும் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார்களா 'வீரா' படத்தில்? வாங்க பார்க்கலாம்.

கதைக்களம்

கதைக்களம்

பாக்கியம் சங்கருக்கு ஸ்ட்ராங்கான ஏரியா என ரசிகர்களால் கருதப்படும் நார்த் மெட்ராஸ் தான் இப்படத்தின் கதைக்களம். வட சென்னைப் பகுதிகளில் காலங்காலமாக நிலவும் ஆதிக்கப்போட்டியும், அதனால் எளிய மனிதர்களுக்கு விளையும் தீமைகளையும், அதிகார வர்க்கத்தினரின் கைதேர்ந்த அரசியலையும் பற்றிப் பேசும் படமாக வந்திருக்கிறது 'வீரா'. மாவட்டத் தலைவருக்கு நெருக்கமானவராக இருக்கும் கண்ணா ரவி குறிப்பிட்ட ஏரியாவில் மன்றத் தலைவராக இருக்கிறார். அவருக்கு இருக்கும் மரியாதையைப் பார்த்து, தாங்கள் ஏன் அந்த இடத்திற்கு வரக்கூடாது என நெருங்கிய நண்பர்களான கிருஷ்ணாவும், கருணாகரணும் நினைக்கிறார்கள்.

வீரா கதை

வீரா கதை

இதற்கிடையே அந்த ஏரியாவில் டானாக இருக்கும் ஆடுகளம் நரேனுடனான முன்பகையால் ஒருவர் அவரது பெண்ணைக் கடத்திக் கொண்டுபோய் திருமணம் செய்வேன் எனச் சவால் விடுகிறார். அந்த ரௌடியிடம் இருந்து தனது பெண்ணைக் காப்பாற்ற பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார் ஆடுகளம் நரேன். அந்தப் பெண்ணை கிருஷ்ணாவும் காதலிக்கிறார். நாயகன் கிருஷ்ணா, நாயகியின் அப்பாவான நரேன் மற்றும் நாயகியை திருமணம் செய்துகொள்ளத் துடிக்கும் இன்னொரு ரௌடி இருவரையும் சமாளித்து, தான் காதலிக்கும் பெண்ணை அடைந்தாரா, மன்றத் தலைவராகி அதிகாரத்தைக் கைப்பற்றினாரா என்பதுதான் கதை.

வட சென்னை கதை

வட சென்னை கதை

சமீபகாலமாக நார்த் மெட்ராஸை கதைக்களமாகக் கொண்டு தொடர்ச்சியாகப் படங்கள் வெளியாகி வருகின்றன. அதிகார வர்க்கத்தினரின் அரசியலுக்காக சிந்தனை ஓட்டமின்றி வளர்த்தெடுக்கப்படும் கையாள்களாகவே சாமானிய மக்கள் எப்போதும் இருப்பது மாதிரியானது தான் இந்தக் கதையும். மன்றங்கள் எனும் பொழுதுபோக்கு அமைப்பு ஏன் தொடங்கப்பட்டது என்கிற காரணத்தையும், அதன் பின்னே இருக்கும் ஆதிக்க அரசியலையும் தொடக்கத்திலேயே டீட்டெயிலிங்கோடு சொல்லிவிடுவதால், அது தொடர்பான அரசியலை துணிந்து பேசுகிற படமாக இருக்கும் என எதிர்பார்ப்போடு நிமிர்ந்து உட்கார்ந்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. கடைசிவரை காதலிக்காகவும், மன்றத் தலைவர் பதவிக்காகவும் பெரிய லட்சியங்களின்றி போகிறபோக்கில் போராடுகிற ஹீரோவின் கதையாகவே முடிகிறது படம்.

நடிகர்கள்

நடிகர்கள்

வீரமுத்துவாக கிருஷ்ணாவும், பச்சை முத்துவாக கருணாகரனும் நல்ல கூட்டணி என்றாலும் இருவருமே தங்களது சிறப்பான முத்திரையைப் பதிக்கவில்லை என்றே சொல்லலாம். கருணாகரன், தம்பி ராமையா, யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன் என காமெடியை பார்ட் டைமாக செய்யும் சிலபல நடிகர்கள் இருந்தாலும் சுமாராக சிரிக்கும்படியான ஒரு காட்சி கூட இப்படத்தில் இல்லை என்பது பெரிய மைனஸ். லியோன் ஜோன்ஸின் பின்னணி இசை, பாடல்களும் சுமார். ஒளிப்பதிவில் பெரிய வித்தைகள் காட்டவில்லையென்றாலும் குறை இல்லை. அழுத்தமான கதை, பெரிதாக ட்விஸ்ட், ரசிக்கவைக்கும் காட்சிகள் என எதுவும் இல்லாமல் மெதுவாகவே பயணிக்கிறது படம். இன்டர்வெல்லுக்கு பிறகாவது வேகமெடுக்கும் எனப் பார்த்தால் கதை தரை தட்டி நிற்கிறது.

படம் எப்படி?

படம் எப்படி?

ராவான சப்ஜெக்ட்டை கையில் எடுத்திருந்தாலும், அழுத்தமான காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை உள்ளிட்ட எந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸும் வொர்க் ஆகாததால் பிரேக் டவுன் ஆகி நடுவிலேயே நிற்கிறது 'வீரா' வண்டி. ஹீரோயின் ஐஷ்வர்யா கிருஷ்ணாவை காதலிப்பதான காட்சிகளிலும் எந்தக் கனமும் இல்லை. நார்த் மெட்ராஸ் கதைக்களம் என்பதற்காகவே படத்தில் வருகிற எல்லோரும் வசனத்திற்கு வசனம் பீப் போடாமல் 'ங்கோ**' என்கிறார்கள். வடசென்னையின் வாழ்வியலைக் காட்சிப்படுத்த இதை விட வேறு வழியே கிடைக்கவில்லையா என்ன? பேசாமல், படத்தில் அதிகமாக உபயோகிக்கப்பட்ட அந்த வார்த்தையையே, டைட்டிலாக வைத்திருக்கலாம். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

English summary
'Veera' movie is lead by Krishna, karunakaran and Aishwarya menon. Rajaraman directed this movie and script and dialogues are written by Bakkiyam sankar. Read Veera movie review here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil