Don't Miss!
- News
குளிர்காலத்தில் இதய பிரச்சினைகள் அதிகரிப்பது ஏன்? தடுக்க என்ன செய்யனும்? மருத்துவ நிபுணர்கள் அட்வைஸ்
- Automobiles
சுஸுகியும் கோதாவுல இறங்க போகுது... ஓலாவுக்கு மட்டுமல்ல ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் ஆப்பு உறுதி!
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
Veera Simha Reddy Review: 8 ஃபைட் இருக்கு.. டபுள் ஆக்ஷனில் பாலய்யா.. வீர சிம்ஹா ரெட்டி விமர்சனம்!
நடிகர்கள்: பாலகிருஷ்ணா, ஸ்ருதிஹாசன், ஹனி ரோஸ், வரலக்ஷ்மி சரத்குமார்
இசை: தமன்
இயக்கம்: கோபிசந்த் மல்லினேனி
ஹைதராபாத்:
போதாக்குறையாக ஹனிரோஸ், ஸ்ருதிஹாசன், வரலக்ஷ்மி சரத்குமார் என மூன்று ஹீரோயின்கள். இதில், வரலக்ஷ்மி சரத்குமார் வில்லியாக வழக்கமான மிரட்டலை கொடுத்துள்ளார். சரி பாலகிருஷ்ணாவின் இந்த வீர சிம்ஹா ரெட்டி படம் எப்படி இருக்கு என்பதை விரிவாக அலசுவோம் வாருங்கள்..
Veera Simha Reddy Twitter Review: பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி எப்படி இருக்கு?

வீர சிம்ஹா ரெட்டி கதை
கணவர் வீர சிம்ஹா ரெட்டியை (பாலகிருஷ்ணா) பிரிந்து அவரது மனைவி மீனாட்சி (ஹனி ரோஸ்) இஸ்தான்புல்லில் தனது மகன் ஜெய சிம்ஹா ரெட்டி (பாலகிருஷ்ணா) உடன் வசித்து வருகிறார். ஈஷா (ஸ்ருதிஹாசனை) காதலிக்கும் ஜெய சிம்ஹா ரெட்டிக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கும் போது தான் அப்பா பற்றிய விவரம் வெளியே வருகிறது. ராயல சிம்ஹாவில் இருக்கும் வீர சிம்ஹா ரெட்டியை பானுமதி (வரலக்ஷ்மி சரத்குமார்) மற்றும் அவரது கணவர் துனியா விஜய் ஏன் 30 ஆண்டுகளாக போட்டுத் தள்ள நினைக்கின்றனர் என்பதும் மனைவி மற்றும் மகனை பிரிந்து வீர சிம்ஹா ரெட்டி ஏன் தனிமையில் உள்ளார் கடைசியில் அப்பாவையும் அம்மாவையும் சேர்த்து வைத்தாரா ஜெய சிம்ஹா ரெட்டி என்பது தான் இந்த படத்தின் கதை.

டபுள் ஆக்ஷன்
அகண்டா படத்தில் அண்ணன் தம்பி கதாபாத்திரத்தில் நடித்தது வொர்க்கவுட் ஆனது என நினைத்துக் கொண்ட பாலகிருஷ்ணா இந்த படத்தில் அப்பா மகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்பா கதாபாத்திரத்தை கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், மகன் பாலகிருஷ்ணாவின் ரோலை பார்த்துத் தான் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர்.

டம்மி ஹீரோயின்
மாஸ் ஹீரோக்கள் படங்களில் எல்லாமே ஹீரோயினை பெரும்பாலும் டம்மியாக பயன்படுத்துவதை இந்த படத்திலும் தவிர்க்கவில்லை. நடிகை ஸ்ருதிஹாசன் ஈஷா எனும் கதாபாத்திரத்தில் மகன் பாலய்யாவை காதலிக்கிறார். அவருடன் டான்ஸ் ஆடுகிறார். மற்றபடி சொல்லிக் கொள்ளும் படி பெரிதாக அவருக்கு எந்தவொரு ஸ்கோப்பும் இல்லை.

ஹனிரோஸ் பரவாயில்லை
நடிகை ஹனி ரோஸுக்கு பாலகிருஷ்ணாவின் அம்மா மற்றும் மனைவி என வித்தியாசமான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவங்களையா பாட்டி ஆக்கிட்டீங்க என ரசிகர்கள் ஃபீல் செய்தாலும், ஸ்ருதிஹாசனை விட இவரது நடிப்பும் கதாபாத்திரமும் சற்றே நல்லா இருக்கு என்று தான் சொல்ல வேண்டும்.

வில்லி வரு
வரலக்ஷ்மி சரத்குமார் இந்த படத்தில் வீர சிம்ஹா ரெட்டிக்கு தங்கையாக நடித்துள்ளார். ஆனால், ஒரு கட்டத்தில் அண்ணனை தவறாக புரிந்து கொண்டு வில்லியாக மாறி படத்தின் வில்லன் துனியா விஜய்யை திருமணம் செய்து கொண்டு பழி வாங்க துடிக்கும் காட்சிகளில் தெலுங்கு படங்களில் தொடர்ந்து அவர் செய்து வரும் வழக்கமான வில்லத்தனத்தை இந்த படத்திலும் கொடுத்துள்ளார். ஆனால், பாலய்யாவுக்கு முன்னாடி ஸ்ட்ராங்கான வில்லியாக அவரால் ஜொலிக்க முடியவில்லை.

பிளஸ்
இந்த படத்திற்கு பிளஸ் என்று சொன்னால் அது பாலகிருஷ்ணாவின் ஆக்ஷன் காட்சிகள் தான். படத்தில் மொத்தம் 8 ஃபைட் சீன் இருக்கு அதை விட கார்கள் பறக்கும் காட்சிகளும், வில்லன்கள் காற்றில் மிதக்கும் காட்சிகளும் பாலகிருஷ்ணா ரசிகர்களை கொண்டாட வைக்கும். இசையமைப்பாளர் தமனின் பின்னணி இசை படத்திற்கும் பாலய்யாவின் பில்டப்புக்கும் பெரும் உதவி செய்துள்ளது. படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் ப்ரொடக்ஷன் வேல்யூ நல்லாவே உள்ளது.

மைனஸ்
ஆனால், அதே சமயம் அந்த 8 சண்டைக் காட்சிகளே படத்திற்கு பெரும் பின்னடைவாக மாறிவிடுகிறது. இயக்குநர் கோபிசந்த் மல்லினேனி திரைக்கதையில் கொஞ்சம் கூட சுவாரஸ்யத்தை கூட்டாமல் தியேட்டருக்கு வந்த ரசிகர்களை சும்மா வச்சு செய்து விட்டார். ஹீரோயின், வில்லி, வில்லன் என எந்த கதாபாத்திரமும் படத்துக்கு ஒட்டவில்லை. துணிவு படத்தில் தலையாட்டி பொம்மையாக இருக்கும் ஜான் கொக்கனும் இந்த படத்தில் இருக்கிறார். நீங்க பாலய்யா ரசிகராக இருந்தால் இந்த விமர்சனத்தை எல்லாம் பார்க்காமல் தியேட்டரில் பாலய்யாவின் மேஜிக்கை பார்த்து கொண்டாடுங்கள்!