»   »  'தர்மதுரை' செம, மக்கா கலங்குதப்பா, விசில் பறக்கிறது: இது ட்விட்டர் விமர்சனம்

'தர்மதுரை' செம, மக்கா கலங்குதப்பா, விசில் பறக்கிறது: இது ட்விட்டர் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தர்மதுரை படம் அருமை என்றும், விஜய் சேதுபதியும், ராதிகாவும் நடிப்பில் கலக்கிவிட்டனர் என்றும் படம் பார்த்தவர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த தர்மதுரை படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.


படம் குறித்து ட்விட்டரில் பேசப்படுவதாவது,


 

விஜய் சேதுபதி

#Dharmadurai முதல் பாதி கிராமத்தில் துவங்குகிறது. பிளாஷ்பேக் மருத்துவக் கல்லூரி வாழ்க்கைக்கு செல்கிறது.. விஜய் சேதுபதி வழக்கம் போன்று நன்றாக நடித்துள்ளார்.


அழகான கதை

#Dharmadurai படத்தின் கதை சமூகத்திற்கான செய்தியுடன் கூடிய அழகான கதை. அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக நடித்துள்ளனர்.. யுவன் ராக்கிங்.. அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.


தர்மதுரை

#Dharmadurai- இரண்டாம் பாதி நன்றாக உள்ளது. பிளாஷ்பேக் பகுதி சூப்பர். விஜய் சேதுபதி, ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் செம. யுவன் பாடல்கள் அருமை.


ரசிப்பு

பெரிய திரையில் மக்காகலங்குதப்பா. படத்தின் ஒவ்வொரு பகுதியையும் மக்கள் ரசிக்கிறார்கள். #Vijaysethupathi #Dharmadurai


டான்ஸ்

டான்ஸில் பட்டையை கிளப்புகிறார் விஜய் சேதுபதி! பெண்கள் பகுதியில் இருந்து விசில் பறக்கிறது! #Dharmadurai


போதை

உலகத்துலே போதை எது தெரியுமா...
குடிச்சிட்டு நிதானமா இருக்குரது...#தர்மதுரை


English summary
Vijay Sethupathi's Dharmadurai hit screens today. Tweeples are talking good things about the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil