»   »  வில்லாதி வில்லன் வீரப்பன்- விமர்சனம்

வில்லாதி வில்லன் வீரப்பன்- விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

-எஸ் ஷங்கர்

Rating:
1.5/5

வீரப்பன் நல்லவரா கெட்டவரா... என்ற முடிவுக்குப் போவதற்கு முன், வீரப்பன் என்பவர் கற்பனைப் பாத்திரமல்ல.

தமிழகக் காடுகளில் சந்தன மரம் கடத்தி, யானை தந்தம் கடத்தி, போலீசுக்கு தண்ணி காட்டி, லோக்கல் மக்கள் பெரும்பாலானோருக்கு ஒரு ஹீரோ மாதிரி வாழ்ந்து, கண் சிகிச்சை தருகிறோம் என போலீசார் தாஜா பண்ணி அழைத்துப் போய் சுட்டுக் கொன்ற வீரப்பனின் நிஜக் கதை எல்லோருக்குமே தெரிந்தது.

Villathi Villain Veerappan review

அந்தக் கதையை, நடந்ததை நடந்த மாதிரி சொல்லக் கூடத் திராணியின்றி இஷ்டத்துக்கும் 'சுற்றியிருக்கிறார்' ராம் கோபால் வர்மா.

ஒரு காட்சியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் வீரப்பனை ஒப்பிட்டிருக்கிறார். இன்னொரு காட்சியில் லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்பு இருந்ததாக... கடைசியில், பிரபாகரனைச் சந்திக்கப் போனபோதுதான் வீரப்பனைச் சுட்டுக் கொன்றார்கள் என்று முழுப் பூசணிக்காயை இரண்டு மூன்று பருக்கைகளில் மறைக்கப் பார்த்திருக்கிறார்.

உயிரோடு இருக்கும் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பற்றியும் ஏகப்பட்ட அவதூறுகள், கேவலமான காட்சிகள்.

Villathi Villain Veerappan review

இது கற்பனைக் கதை என்று சொல்லிக் கொண்டு என்ன வேண்டுமானாலும் எடுக்கலாம். அதை யாரும் கேட்கப் போவதில்லை. ஆனால் நிஜக்கதை.. வீரப்பன் வாழ்க்கைக் கதை என்றெல்லாம் சொல்லிவிட்டு, இல்லாத விஷயங்களை, நடக்காத சமாச்சாரங்களை இட்டுக் கட்டி சொல்வது எத்தனை கேவலமானது? இவ்வளவு படங்கள் எடுத்த ராம் கோபால் வர்மாவுக்கு இதுகூடவா தெரியாது?

படமே தவறு என்றான பிறகு, அதில் நடித்தவர்களைப் பற்றி என்னவென்று எழுதுவது? அவர்களில் பலருக்கும் வீரப்பன் பற்றி எதுவும் தெரிந்திருக்காது. வீரப்பனாக நடித்திருக்கும் சந்தீப் பரத்வாஜும் முகம், உடலமைப்பு எந்த வகையிலும் வீரப்பனை மாதிரி இல்லை. ஏதோ கோமாளி மாதிரி தெரிகிறார்.

Villathi Villain Veerappan review

அதேபோல அந்த போலீஸ் அதிகாரிகள். இருவருமே இந்திக்காரர்கள் என்பதால் சுத்தமாக ஒட்டவில்லை. இந்தியிலிருந்து டப்பிங் செய்யப்பட்ட படம் என்பது அப்பட்டமாகத் தெரிவதால் படத்தை எந்த வகையிலும் ரசிக்க முடியவில்லை.

வீரப்பன் பாத்திரத்தை கேவலப்படுத்துவதிலேயே குறியாக இருந்ததால், பல உண்மைகளைப் பதிவு செய்ய மறந்திருக்கிறார் ராம்கோபால் வர்மா. வீரப்பன் செய்த தவறுகள், வீரப்பனைத் தேடுவதாகக் கூறிக் கொண்டு அதிரடிப் படையினர் அப்பாவி மக்களைப் படுத்திய பாடுகள் போன்றவற்றை நேர்மையாகப் பதிந்திருந்தால் இந்தப் படம் முக்கியமான பதிவாக இருந்திருக்கும்.

English summary
Ram Gopal Varma's Killing Veerappan Tamil version 'Villathi Villain Veerappan' is a boring biography of Veerappan with many factual errors.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil