»   »  படம் ஓட தல தளபதி ரெஃபரன்ஸ் மட்டும் போதுமா? பதில் சொல்லும் விசிறி! - விமர்சனம் #VisiriReview

படம் ஓட தல தளபதி ரெஃபரன்ஸ் மட்டும் போதுமா? பதில் சொல்லும் விசிறி! - விமர்சனம் #VisiriReview

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rating:
2.5/5

வெண்ணிலா வீடு என்று ஒரு குடும்ப படத்தை தந்தவர் வெற்றி மகாலிங்கம். வெண்ணிலா வீடு வியாபார ரீதியாக சரியாக போகாவிட்டாலும் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. ஆனால் இந்த முறை வெற்றி கையில் எடுத்திருப்பது தல தளபதி ரசிக யுத்தத்தை. அதில் வெற்றி பெற்றாரா?

சென்னையில் வசிக்கும் தீவிர தல ரசிகனை மதுரையில் வசிக்கும் அவனது பரம எதிரியான தளபதி ரசிகனின் தங்கையை காதலிக்கவைக்கிறது விதி. சந்தர்ப்ப சூழ்நிலையால் தல ஃபேன் தளபதி ஃபேனாக நடிக்கிறான். இறுதியில் என்ன ஆகிறது என்பது தான் விசிறி கதை.

Visiri Review

தல ஃபேனாக வரும் ராம்சரண் காமெடியிலும், தளபதி ஃபேனாக வரும் ராஜ் சூர்யா ஆக்‌ஷன் காட்சிகளிலும் தெறிக்க விடுகிறார்கள். இருவருமே கோலிவுட்டுக்கு நல்ல அறிமுகங்கள்.

மற்ற எல்லோரும் தாங்கள் நடிப்பதை ஒவ்வொரு காட்சியிலும் காட்டிக்கொள்கிறார்கள்.

படத்திற்கு நல்ல ஒன்லைனை பிடித்த வெற்றி அதற்கு சுவாரஸ்யமான திரைக்கதை பிடிக்காமல் அரைத்த மாவையே அரைத்திருக்கிறார். எல்லா காட்சிகளுமே யூகிக்க முடிந்தால் எப்படி? க்ளைமாக்ஸ் ஆறுதல் என்றாலும் அது படமாக்கப்பட்ட விதம் அமெச்சூராக இருக்கிறது.

Visiri Review

ஃபேன்ஸ் படம் என்பதால் இசை தெறிக்கிறது. வெறுமனே தல தளபதி ரெஃபரன்ஸை வைத்து ரசிகர்களை ஏமாற்ற முடியாது. அதை எப்போதுதான் தமிழ் சினிமா இயக்குநர்கள் புரிந்துகொள்வார்களோ?

இந்த படத்தின் மூலம் இரண்டு புது ஹீரோக்கள் கிடைத்திருக்கிறார்கள். அவர்கள் தல தளபதியாக வாழ்த்துகள்!

English summary
Visiri movie Review

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil