»   »  வியாபாரி- பட விமர்சனம்

வியாபாரி- பட விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

பிளேபாய் இமேஜில் சிக்கி சின்னாபின்னாவாகி வரும் எஸ்.ஜே.சூர்யா அதிலிருந்து தப்பி வெளியே வர முயற்சி எடுத்திருக்கும் படம் தான் வியாபாரி.

ஒரு இளம் தொழிலதிபரின் கனவு, வெற்றி பெறும் வெறியை அற்புதமாக செய்திருக்கிறார் சூர்யா. இயக்குனர் சக்தி சிதம்பரத்தின் உதவியோடு தன்னை செதுக்கிக் கொள்ள தீவிரமாகவே முயன்றிருக்கிறார்.

நமிதா, மாளவிகா, தமன்னா என முப்பெரும் ஜோடிகளோடு கொட்டம் அடித்தாலும் வழக்கமான எஸ்.ஜே.சூர்யா பட விரசம் இதில் ரொம்ப கம்மி. அம்மா சென்டிமெண்ட் உள்பட தமிழ் சினிமாவின் எல்லா உணர்ச்சி மசாலாக்களையும் யூஸ் செய்திருந்தாலும், எதையும் ஓவராக கலக்காமல் படத்தை காப்பாற்றியிருக்கிறார் சக்தி.

உலகிலேயே பணக்கார மனிதனாக மாற வேண்டும் என வெறியில் திரியும் ஒரு பிஸினஸ் மேன் சூர்யா. அவருக்கு உதாரணப் புருஷர்கள் பில் கேட்சும், அம்பானியும் (திரூபாய்) தான்.

ஒன்றல்ல, இரண்டல்ல சும்மா 300 கம்பெனிகளை வைத்து நடத்துகிறார். தனது நேரத்தையெல்லாம் பிஸினஸை விரிவுபடுத்துவதிலேயே செலவிடும் சூர்யாவுக்கு குடும்பத்தை கண்டுகொள்ள நேரமேயில்லை.

இவ்வளவு பேமஸான நபாராச்சே. அவரைப் பற்றி தொடர் எழுத வருகிறார் நிருபர் தமன்னா. வந்த இடத்தில் லவ்வாகிப் போகிறது.

அதே போல முன்னணி மாடலாக வரும் மாளவிகாவுக்கும் சூர்யா மீது ஒரு கண். அய்யா சூர்யா அடிக்கடி விமானத்தில் பறந்து பறந்து பிஸினஸ் செய்பவராச்சே, அவர் மீது ஏர் ஹோஸ்டஸ் நமிதாவுக்கும் ஒரு இது வந்துவிடுகிறது.

ஆனால், மற்றவர்களுடன் டான்ஸ் மட்டும் ஆடிவிட்டு தமன்னாவை மட்டும் கல்யாணம் செய்கிறார் சூர்யா. கல்யாணம் ஆன பின்னர் சிக்கல் ஆரம்பிக்கிறது.

தன்னை கணவர் கண்டுகொள்ளாமல் பிஸினஸிலேயே சதா மூழ்கிக் கிடப்பதால் சண்டைக்கு வருகிறார் தமன்னா. இந்த குடும்ப சண்டையால் மன அமைதி இழக்கும் சூர்யா ஒரு வினோதமான முடிவுக்கு வருகிறார்.

தனது பிரச்சனையைத் தீர்க்க தனது பண பலத்தை வைத்து தன்னைப் போலவே ஒருவனை உருவாக்கச் சொல்கிறார் டாக்டர் நாஸரிடம். நாஸரும் ஒரு குளோன் சூர்யாவை உருவாக்கித் தருகிறார். இந்த குளோன் சூர்யாவால் பிரச்சனைகள் தீருகிறதா அல்லது மேலும் பிரச்சனைகள் வருகிறதா என்பதே கதை.

படத்துக்கு இசை தேவா. பழைய தேவா இல்லை, சங்கர்-கணேஷ் மியூசிக் மாதிரி சும்மா லொடக்கு லொடக்கு சத்தம் தான். இரண்டு பாடல்கள் மட்டுமே ஏதோ சோபிக்கின்றன.

சூர்யா இதிலும் உச்ச ஸதியில் தான் கத்தி கத்தி பேகிறார். அதை சரி செய்துவிட்டால் சூர்யாவின் நடிப்பு ஓ.கே தான். தமன்னாவுக்கே நடிக்க வாய்ப்பு, நமிதாவுக்கும் மாளவிகாவுக்கும் ஆடி அடங்கும் ரோல் தான்.

சினிமா என்றால் வில்லனும் இருக்கனுமே.. அந்த அசைன்மெண்ட் சஞ்சித் என்பவரிடம் தரப்பட்டிருக்கிறது. அவர் நன்றாகவே செய்திருக்கிறார். சீதா தான் சூர்யாவுக்கு அம்மாவாக வருகிறார். நடிப்பில் ஒரே உருக்கம் தான்.. சென்டிமெண்ட்டை பிசைந்து பிசைந்து தருகிறார்.வடிவேலுவை நன்றாகவே வேஸ்ட் செய்திருக்கிறார்கள்.

குளோனை களமிறக்கி விடுவது, பில் கிளின்டனை விட ஒரு ரூபாயாவது கூடுதலா சம்பாதிக்கனும் என்பது போன்ற சூர்யாவின் வசனங்களை ஜீரணிக்க கஷ்டமாக இருந்தாலும் நன்றாக பொழுது போகிறது.

மொத்தத்தில் வியாபாரி, நல்ல யாவாரம்...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil