Just In
- 2 hrs ago
இவ்ளோ டைட்டான டிரெஸ்ல இப்படி உட்காந்திருக்கீங்களே.. ஸ்ட்ராப்லெஸ் டாப்பில் பதற வைக்கும் சாக்ஷி!
- 12 hrs ago
தளபதி65 படத்தில் நடிக்கிறேனா? அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் !
- 12 hrs ago
அதிகரிக்கும் கொரோனா...பொன்னியின் செல்வன் சூட்டிங்கில் மாற்றம் செய்த மணிரத்னம்
- 13 hrs ago
விஜய் கையெழுத்திட்ட துண்டுச்சீட்டு...பொக்கிஷமாக பதிவிட்ட அமெரிக்க ரசிகர்
Don't Miss!
- News
தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும்... பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து
- Automobiles
நான்காவது ஆண்டாக தொடரும் ஆதிக்கம்... டாப் 5 இடத்தை ஆக்கிரமித்த மாருதி தயாரிப்புகள்... ஆச்சரியத்தில் சந்தை!!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 14.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பழைய கடனால் தொல்லை அதிகரிக்கும்…
- Sports
ரோகித் பத்தி மோசமான கமெண்ட்... பதிவை உடனடியாக நீக்கிய ஸ்விகி... குவியும் எதிர்ப்பு
- Finance
இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..!
- Education
பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஓட்டுப் போடுறதுக்கு முன்னாடி இந்த படத்தை ஒருமுறை பார்த்துடுங்க.. மண்டேலா ட்விட்டர் விமர்சனம்!
சென்னை: இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் இன்று தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகி உள்ள படம் மண்டேலா.
தேர்தலை முன்னிட்டு விஜய் டிவியில் இந்த படத்தை இன்று காலை வெளியிட்டனர். நாளை நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் மண்டேலா படம் வெளியாகிறது. மண்டேலா படத்தை பார்த்த பலரும் #Mandela வை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
திரிஷ்யம்2 3 மாஸ்டர் பீஸ்.. ஜீத்து ஜோசப்பை பாராட்டிய பிரபல இயக்குனர்!
மண்டேலா படத்தின் விமர்சனங்களையும் நெட்டிசன்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.

மண்டேலா
மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா பெயரை படத்தின் டைட்டிலாக கொண்டு அரசியல் நைய்யாண்டியை தூவி யோகி பாபு நடிப்பில் இயக்குநர் மடோன் அஸ்வின் இந்த படத்தை இயக்கி உள்ளார். மாரி படத்தை இயக்கிய பாலாஜி மோகன் இந்த படத்திற்கு கிரியேட்டிவ் புரொட்யூசராக பணியாற்றி உள்ளார். இந்த படம் விஜய் டிவியில் இன்று நேரடியாக ரிலீசானது.

ஸ்கோர் செய்த யோகி பாபு
நகைச்சுவை நடிகராகவும் ஹீரோவாகவும் கலக்கி வரும் யோகி பாபுவின் வாழ்வில் இதுவரை நடித்த படங்களிலேயே இந்த படம் தான் சிறந்த படம் என ஏகப்பட்ட ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர் சாதி ஓட்டு மற்றும் காசுக்கு ஓட்டு போன்ற கலாசாரத்தை தனது இயக்கத்தின் மூலம் அறிமுக இயக்குநர் தோலுரித்துக் காட்டி உள்ளார் என இந்த நெட்டிசன் கருத்து தெரிவித்துள்ளார்.

வித்தியாசமான
ஒரு ஊரில் இரண்டு பேர் தலைவர் பதவிக்கு தேர்தலில் நிற்கு சம அளவு வாக்குகள் பதிவாகின்றன. கடைசியில் ஒரு ஓட்டு யாருக்கு கூடுதலாக வருகிறதோ அவங்க தேர்தலில் ஜெயித்து விடலாம். முடி திருத்தும் தொழில் செய்யும் யோகி பாபுவிடம் இரு தரப்பும் ஏகப்பட்ட இலவச பரிசுகளை கொடுத்து ஓட்டுப் போட சொல்வதும், கடைசியாக கிளைமேக்ஸில் காத்திருக்கும் செம ட்விஸ்ட்டும் தான் படத்தை பாராட்ட வைப்பதாக பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

வாக்கின் வலிமை
ஒரே ஒரு வாக்கின் வலிமையை அரசியல் நக்கல் மற்றும் நய்யாண்டி கலந்து நகைச்சுவையாக எடுத்துக் கூறி இருக்கிறது இந்த மண்டேலா திரைப்படம். நடிகர் யோகி பாபு மண்டேலா கதாபாத்திரத்தில் பக்காவாக நடித்து அசத்தி இருக்கிறார். ஓட்டுப் போடுவதற்கு முன்பாக இந்த படத்தை ஒரு முறை பார்த்து விட்டுப் போங்க என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சிறந்த படம்
2021ம் ஆண்டு இதுவரை வெளியான படங்களிலேயே மண்டேலா படம் சிறந்த படம் என்றும், அதுவும் சரியான நேரத்தில் வெளியாகி உள்ளது. தியேட்டரில் வெளியாகி இருந்தால் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருக்கும். ஆனால், விஜய் டிவியில் வெளியானதால் அனைவருக்கும் சென்று சேர்ந்துள்ளது என ஏகப்பட்ட பேர் படத்தை பாராட்டி வருகின்றனர்.

கலக்கிட்டாரு
யோகி பாபு வாழ்விலேயே இந்த படம் சிறந்த படமாக இருக்கும். அவ்வளவு அழகாக தனது இயற்கையான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி உள்ளார். ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு வசனமும் படத்தை மக்கள் மனதில் நன்றாக பதிய வைக்கிறது. இந்த படத்துக்கு என்னுடய மார்க் 10க்கு 8.5 என ஸ்டார் ரேட்டிங் எல்லாம் கொடுத்து மண்டேலாவை கொண்டாடி வருகின்றனர்.