For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆதிராவான வர்ஷினி!

  By Staff
  |

  Varshini
  அருள் மூவீஸ் சார்பில் பி.கே.சந்திரன் பிரமாண்டமாய் தயாரிக்க புதுமுக இயக்குநர் ஞானமொழி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் மாணவன் நினைத்தால்.

  புதுமுகம் ரித்திக் நாயகனாக நடிக்க, பல தமிழ்-மலையாள திரைப்படங்களில் வர்ஷினி என்ற பெயரில் நடித்த இவர் ஆதிராவாக மாறி நாயகியாக நடிக்கும் படம் இது.

  திருடா திருடியில் நாயகியின் தோழியாக அறிமுகமான இவர் நீண்ட இடைவெளிக்குப் பின் கோலிவுட்டுக்கு கவர்ச்சிப் புயலாக மாறி திரும்பியுள்ளார்.

  வி்க்னேசுடன் ஒரு படத்தில் நடிக்கும் இவர், இப்போது மாணவன் நினைத்தாலில் நடிக்கிறார்.

  சமீபத்தில் மரக்காணம் உருகே உள்ள எழில்மிகு கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியில் ரித்திக்-ஆதிரா ஆடிப்பாடுவது போன்ற காட்சியை டான்ஸ் மாஸ்டர் ரமேஷ் ரெட்டி படமாக்கிக் கொண்டிருந்தபோது, அங்கே சென்றோம்.

  நீ பேரழகா..

  உன் பேர் அழகா...

  என்ற தமிழ் கொஞ்சும் வரிகளுக்கு நாயகனும் நாயகியும் அழகாக ஆடிப் பாடி நடித்துக் கொண்டிருந்தார்கள்.

  அருகில் நின்று அந்தக் காட்சியை இன்னும் அழகாக செதுக்கிக் கொண்டிருந்த இயக்குநர் ஞானமொழியிடம் பேசினோம்.

  "இது இன்றைய இளைஞர்களுக்கான படம். அவர்கள் என்னென்ன செய்கிறார்கள், எதையெல்லாம் விரும்புகிறார்கள், அவர்களின் மன ஓட்டம் என்ன என்பதையெல்லாம் கண்ணாடி மாதிரி அப்படியே பிரதிபலிக்கிற படம் இது.

  ரித்திக்கையும் ஆதிராவையும் நாயகன் நாயகியாக முடிவு செய்துவிட்டு, முக்கியமான ஒரு பாத்திரத்தில் நடிக்கக் கேட்டு இயக்குநர் பாக்யராஜைப் போய் பார்த்தோம். நான்கு சீன்கள்தான் அவர் வரவேண்டியிருந்தது. கதையைக் கேட்டதும் தனது யோசனைகளையும் சொன்னவர், பின்னர் ஒருவாரம் கால்ஷீட் கொடுத்தார்.

  தனது பரபரப்பான புதிய வார்ப்புகள் படத்தின் ஷூட்டிங்குக்கு நடுவிலும், என்னைப் போன்ற வளரும் கலைஞர்களுக்கு உற்சாகமளிக்கும் விதத்தில் அவர் பேசியதையும், நடித்துக் கொடுத்ததையும் மறக்க முடியாது. திறமைசாலிகள் மீது அவர் வைத்திருக்கும் மரியாதைக்கு அடையாளம் இது.

  ரித்திக் அம்மாவாக மாலினி நடித்திருக்கிறார். உருக வைக்கிற பாத்திரம் அது.

  ஆதிரா ஏற்கெனவே சில மலையாளப் படங்களிலும், தமிழ்ப் படங்களிலும் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் இளைஞர்களை ஏக்கப் பெருமூச்சு விடவைக்கும் விதத்தில் இளமை துள்ள நடித்திருக்கிறார். கேரக்டரை உணர்ந்து நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ஆன்ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி பிரமாதமாய் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

  நளினி, பாண்டு, சிங்கமுத்து, புதுமுக வில்லன் வரதன் என அனைவருமே பிரமாதமாய் செய்திருக்கிறார்கள்.

  தயாரிப்பாளர் பி.கே.சந்திரன் பெரும் ஆர்வத்தோடும், எதிர்பார்ப்புகளோடும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். நிச்சயம் அவரது நம்பிக்கையை இந்தப் படம் மெய்ப்பிக்கும். இப்படத்தின் வெற்றி அவரை பெரிய தயாரிப்பாளர்கள் வரிசையில் கொண்டுபோய் சேர்க்கும். இனி அவரது அருள் மூவீஸ் சார்பில் வரிசையா படங்கள் வரப் போகுது.

  இசையமைப்பாளர் தஷி இசையில் நான்கு பாடல்களை எழுதியிருக்கிறேன். இந்தப் படத்தில் பி.சி.சுபீஷ் என்ற புதியவரைப் பாடவைத்திருக்கிறோம். இதில் விசேஷம் என்னவென்றார், ஒவ்வொரு பாடலையும் ஒரு வித்தியாசமான குரலில் அவர் பாடி அசத்தியிருக்கிறார். இந்த மாதிரியான அபூர்வ குரல் வெகு அரிதாகத்தான் அமையும். இவரோடு ஸ்வர்ணலதா, மாணிக்க விநாயகம் ஆகியோரும் பாடியிருக்கிறார்கள்.

  இந்தப் படத்தின் மூலம் பின்னணி இசையில் தான் யார் ன்பதை நிரூபிக்கப் போகிறார் தஷி. அந்தளவு வேலை இருக்கிறது அவருக்கு.

  கேமராமேன் செல்வகுமார், கலை இயக்குநர் குமார், எடிட்டர் எம்.ஆர்.சீனிவாசன், டான்ஸ் மாஸ்டர்கள் மஸ்தான், ரமேஷ் ரெட்டி, ஸ்டன்ட் மாஸ்டர் ஆக்ஷன் பிரகாஷ், இணைத் தயாரிப்பாளர் வி.கே.பிரகாஷ், மேனேஜர்கள் குட்டி கிருஷ்ணன், சீனிவாசன் என அத்தனைபேரும் அருமையாக ஒத்ததுழைத்து இந்தப் படம் சிறப்பாக வளர உதவியிருக்கிறார்கள்.

  நல்ல யூனிட் கிடைத்ததால் ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்துவிட்டேன். இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் மாணவன் நினைத்தால் திரையைத் தொடும்....' என்கிறார் ஞானமொழி.

  அபாரமான நம்பிக்கை தெரிகிறது. படத்திலும் நல்ல சரக்கு இருந்தால் சரி...

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X