twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோடம்பாக்காத்துக்கு வெளியே ஒரு தமிழ் சினிமா!

    |

    Nila movie still
    தமிழ் சினிமா என்பது கோடம்பாக்கத்து அரசமரத்தடி நாட்டாமைகளின் கையில் மாட்டிக் கொண்டிருப்பதால்தான் இன்றைக்கு இத்தனை அவலங்களும் தலைவிரித்தாடுகின்றன. திரைத் தொழிலுக்கான அர்த்தமும் மாறிப்போயிருக்கிறது.

    இந்த நிலை எத்தனை சீக்கிரம் மாற்றப்படுகிறதோ, அப்போதுதான் ஆரோக்கியமான சினிமாக்கள், பொழுதுபோக்குகள் உருவாகும் வாய்ப்பு உருவாகும்.

    உலகில் தமிழ்ப்பேசும் மக்கள் அதிகரிக்க அதிகரிக்க இத்தகைய நல்ல வாய்ப்புகளும் உருவாகத் துவங்கியுள்ளன.

    சமீபத்தில் நார்வே தமிழர்கள் 'மீ்ண்டும்' என்ற முழு நீள தமிழ்த் திரைப்படத்தை உருவாக்கி திரையிட்டுள்ளனர். இன்னும் பல படங்கள் இப்படி உருவாகத் தொடங்கியுள்ளன.

    பக்கத்து மாநிலமான புதுவையில்கூட புதிய தமிழ்ப்படங்களை கோடம்பாக்கத்தின் நிழலே இல்லாமல் உருவாக்கும் முயற்சிகள் அரசு ஆதரவுடன் நடந்து வருகின்றன.

    அந்த வரிசையில், தீபாவளி வெளியீடாக கனடியத் தமிழர்களால் ஒரு படம் உருவாக்கப்பட்டுள்ளது. கனடிய ஈழத்து திரைப்படக் கலைஞர்களால் முதல் முறையாக எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் கனடியத் திரையரங்குகளில் வெளியாகிறது.

    'நிலா' என்ற இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க கனடிய மண்ணிலே தயாரிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த கனடியத் தமிழ்ப் பெண் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை.

    சுதன், நவநிதா, ரூபா, வினோத், விஜய், மாலன், சூரி, ராஜா, சங்கர், ஜிவன், உதயன், ராணி இவர்களுடன் இயக்குனர் தரன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    சிறீஜீவன் இசையமைத்துள்ளார். இவர் சமீபத்தில் 'இதுவே எங்கள் நிலையா' என்ற ஈழத் தமிழர் படுகொலை பற்றிய பாடலை உருவாக்கியவர். சுஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    பன்னீர்செல்வம் படத்தொகுப்பு செய்துள்ளார். கந்தசாமி ஜெகன் தயாரித்துள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X