»   »  மீண்டும் தொடங்கும் 10 எண்றதுக்குள்ள ஷூட்டிங்!

மீண்டும் தொடங்கும் 10 எண்றதுக்குள்ள ஷூட்டிங்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்ரம் ஹீரோவாக நடித்து வரும் 10 எண்றதுக்குள்ள படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 16 ம் தேதி மீண்டும் தொடங்கும் என்று படக்குழுவினர் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளனர்.

சமீப காலமாக விக்ரம் நடித்து வரும் படங்கள் தொடர்ந்து பிரச்சினைகளில் சிக்குகின்றன. இதனால் தான், அவரின் படங்கள் தள்ளிப் போகின்றன என்று ஒரு பேச்சு தமிழ்த் திரையுலகில் எழுந்தது.

இதனை நிரூபிப்பது போன்று அடுத்தடுத்து அவரின் படங்களுக்கு பிரச்சினைகள் முளைத்தன. இதனால் விக்ரமுடன் இணைந்து சமந்தா நடித்து வந்த 10 எண்றதுக்குள்ள படத்தின் படப்பிடிப்பு இடையில் சிறிது நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது, தற்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

10 எண்றதுக்குள்ள

10 எண்றதுக்குள்ள

ஐ படத்திற்குப் பின்பு விக்ரமின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 10 எண்றதுக்குள்ள, கோலிசோடா வெற்றிப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் 2 வது படம் இது.

விக்ரம் - சமந்தா

விக்ரம் - சமந்தா

இந்தப் படத்தில் முதன்முறையாக விக்ரமுடன் இணைந்து நடித்து வருகிறார் நடிகை சமந்தா, இதனால் திரையில் இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நின்றுபோன படப்பிடிப்பு

நின்றுபோன படப்பிடிப்பு

இடையில் விக்ரம் சந்தித்த சில பிரச்சினைகளின் காரணமாக படப்பிடிப்பு கொஞ்ச காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. படம் அக்டோபர் மாதம் 2 ம் தேதி வெளியாகும் என்றுமுன்பே அறிவித்திருந்தனர். ஆனால் 10 எண்றதுக்குள்ள படத்தின் படப்பிடிப்புகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை, படப்பிடிப்பு நடைபெறாமல் வெளியீடு எப்படி சாத்தியம் என்று ஆங்காங்கே முணுமுணுப்புகள் எழுந்தன.

படப்பிடிப்பு ஆகஸ்டில் துவங்கும்

தற்போது படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 16 ம் தேதி மீண்டும் தொடங்கும் என்று படப்பிடிப்புக் குழுவினர் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளனர்.

ராஜஸ்தானில் சண்டைக் காட்சிகள்

ராஜஸ்தானில் சண்டைக் காட்சிகள்

படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் சில சண்டைக் காட்சிகள் இன்னும் எடுக்கப்படவிருக்கிறது என்றும் , இந்தக் காட்சிகளை ராஜஸ்தானில் படமாக்கப் போவதாகவும் அறிவித்து உள்ளனர்.

இந்தப் படம் முடிந்த பின்னர்தான் அடுத்த படம்

இந்தப் படம் முடிந்த பின்னர்தான் அடுத்த படம்

இந்தப் படத்தின் படபிடிப்பை முடித்து விட்டுத் தான் அடுத்த படத்தில் நடிக்கப் போகிறாராம் விக்ரம், அனேகமாக அது அரிமாநம்பியை இயக்கிய ஆனந்த் சங்கரின் படமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

English summary
Vikram - Samantha Starring 10 Endrathukulla Movie Shooting Started Again.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil