»   »  ரஜினி காலில் விழுந்து ஆசிபெற்ற ஐஸ்!

ரஜினி காலில் விழுந்து ஆசிபெற்ற ஐஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rajinikanth and Aishwarya Rai
எந்திரன் படப்பிடிப்பு முற்றாக முடிந்ததைத் தொடர்ந்து, படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் இதர குழுவினர் விடைபெற்றனர்.

படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராய், ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்று மும்பை திரும்பினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இரண்டு ஆண்டுகளாக நடந்த எந்திரன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. மூன்று தினங்களுக்கு முன் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு பெருங்குடியில் நடந்தது. ரஜினி, ஐஸ்வர்யாராய் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி அங்கு படமானது.

படப்பிடிப்பு முடிந்ததும் எல்லோரது முகத்திலும் பிரிந்து செல்லும் வாட்டம் தெரிந்தது. படக்குழுவினர், ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்தும், கைகுலுக்கியும் பிரியா விடை பெற்றனர்.

அப்போது ஐஸ்வர்யாராய் யாரும் எதிர்பாராத வகையில் ரஜினி காலில் விழுந்து வணங்கினார். தன்னை வாழ்த்தி ஆசி வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஐஸ்வர்யாராய் செயல் ரஜினிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'இதெல்லாம் எதுக்கும்மா?' என்றவர், பின்னர் சுதாரித்துக் கொண்டு ஐஸ்வர்யா ராயை ஆசீர்வதித்தார். 'நீயும் எனக்கு மருமகள் போலத்தான்' என்று சொல்லி வாழ்த்தினார்.

ஐஸ்வர்யா ராய் பணிவைப் பார்த்து படப்பிடிப்பு குழுவினர் வியந்தனர். படக்குழுவினர் பலரும் ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற ஆரம்பிக்க, அவர்களைத் தடுத்த ரஜினி, "யாரும் யார் காலிலும் விழுவது தேவையில்லாதது. என் ஆசீர்வாதம் அனைவருக்கும் உண்டு" என்றார்.

எந்திரன் அடுத்த மாதம் (ஆகஸ்டு) இறுதியில் ரிலீசாகும் என்று நிருபர்களிடம் நேற்று தெரிவித்தது நினைவிருக்கலாம்.

Please Wait while comments are loading...