»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

மீண்டும் வருகிறது ஒரு பஸ் காதல். படத்தின் பெயர் 12 B.

பார்த்தேன் ரசித்தேன் போக்குவரத்துக் காதலின் வெற்றிக்குப் பின் தைரியமாக இன்னொரு பஸ் லவ்கிளம்பியிருக்கிறது. ஆனால், பார்த்தேன் ரசித்தேன் மாதிரி படம் நெடுக இல்லாமல், இந்தப் படத்தில் ஒரே ஒருகாட்சியில் மட்டும் தான் பஸ் நடிக்கிறதாம்.

சங்கரின் ஆஸ்தான கேமராமேனாக இருந்த ஜீவா தான் இந்தப் படத்தை இயக்குகிறார்.

வட நாட்டு மாடல் போல இருக்கும் ஒரு நபரைக் காட்டி இவர் தான் ஹீரோ என்கிறார்கள். இவரது பெயர் ஷாம்.இவர் வட நாட்டு நபர் அல்ல, நம்ம மதுரை-காரைக்குடி ரூட்டில் இருக்கும் திருப்பத்தூர்காரர் தான் என்று சத்தியம்செய்கிறார்கள். நம்புவோம்.

ஆனால், ஷாம் ரொம்ப அதிர்ஷ்டக்காரர். அறிமுகமாகும்முதல் படத்திலேயே கொடியிடை சிம்ரன், குட்டித்தொப்பை ஜோதிகா என்று இவருக்கு இரு ஹீரோயின்கள்.

பஸ்ஸை மையமாக வைத்துத் தொடங்கும் காதல் கதையாம். ஷாம் இரு ரோல்களில் தோன்றுகிறார் என்கிறார்கள்.பாஸிகரில் ஷாரூக்கான் செய்தது மாதிரி, ஒரே நபர் டபுள் ரோல் செய்வதாகத் தெரிகிறது. இது இரட்டை வேடம்இல்லை. டான்சில் மட்டுமில்லாமல், கற்பனையில் வாழும் ஒரு கேரக்டர், நிஜத்தில் வாழும் ஒரு காரெக்டர் என்றுஷாம் நடிப்பிலும் வெளுத்து வாங்கியிருக்கிறாராம்.

முன்னாள் அண்ட் இன்னாள் தேவதை முன்மூன் சென்னும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்கள் தவிரவிவேக்கும், மயில்சாமியும் கடிக்க இருக்கிறார்கள். படத்துக்குப் படம் யாரையாவது இமிடேட் செய்து ஓட்டும்விவேக் இந்தப் படத்தில் ஹிரிதிக் ரோஷனின் கோகோ-கோலா விளம்பர டான்ஸை கிண்டல் அடித்திருக்கிறார்.ஹிரிதிக் போலவே சார்லி-சாப்லின் காஸ்ட்யூமில் தோன்றும் விவேக் கோகோ பாட்டிலை சுற்றி சுற்றி வந்து ஆட்டம்போட்டிருக்கிறார்.

ஹாரீஸ் ஜெயராஜின் இசையில் வைரமுத்து தமிழைக் கொட்டியிருக்கிறார். பட்டாம்பூச்சிகள் மீட்டிங் போட்டால்சரியா தவறா?, எங்கேயோ போகிற மேகம் நிற்குது.. என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது, பூவேவாய்பேசும் போது காற்றே ஓடாதே, லவ் லவ் பண்ணு புன்னகைப் பூவே என்று வித்தியாசமானசிந்தனைகளுடன் வெறும் பாடல்களை அல்ல, கவிதை மழையே பொழிந்திருக்கிறார் வைரமுத்து.

சிம்ரனின் இவர் (அது தாங்க ராஜூ சுந்தரம்) தான் நடனக் காட்சிகளை அமைத்துள்ளார்.. சுந்தரத்துக்கு உதவியாகரேகா பிரகாஷ் என்பவரும் ஆடல் காட்சிகளில் உதவியுள்ளார்.

படத்தில் சிம்ரன், ஜோதிகா இருவரும் ஒரே ஒரு காட்சியில் தான் சந்தித்துக் கொள்கிறார்களாம். ஒரு ஹலோசொல்லிக் கொள்வதோடு சரி. மற்றபடி இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் ஏதும் இல்லை என்கிறார்கள்.

படத்தின் கதை, இயக்கம் ஜீவா. போட்டோகிராபியும் ஜீவா தான். இந்தியன் படத்தில் காமிராவில் விளையாடிவர்தான் ஜீவா. மிகச் சிறந்த சினிமாட்டோகிராபர்களில் ஒருவர்.

இந்தப் படத்தில் தனது இரு உதவி சினிமாட்டோகிராபர்களையும் நடிகர்களாக அறிமுகம் செய்கிறார்.

ஜோர்டானில் போய்க் கூட ஒரு பாடலை படமாக்கியிருக்கிறார்கள்.

பஸ் வரட்டும்...ஏறித் தான் பார்போம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil