»   »  ரஜினியின் 2.ஓ ஷூட்டிங்... வெற்றிகரமான நூறாவது நாள்!

ரஜினியின் 2.ஓ ஷூட்டிங்... வெற்றிகரமான நூறாவது நாள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக்கில் நேற்று மாலையிலிருந்து விறுவிறுவென விசிட் அடித்துக் கொண்டிருக்கிறது ஒரு படம்.

அது கூலர்ஸூடன் படு ப்ரெஷ்ஷாக நிற்கும் ரஜினியின் படம். வெளியிட்டவர் வேறு யாரும் அல்ல... மெகா இயக்குநர் ஷங்கர்தான்.

100 நாட்கள்

100 நாட்கள்

ரஜினியை வைத்து தான் இயக்கும் 2.ஓ படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக 100 நாட்களைத் தொட்டுவிட்டதைக் குறிப்பிட்டு, இந்தப் படத்தை வெளியிட்டுள்ளார் ஷங்கர்.

50 சதவீதம்தான்....

50 சதவீதம்தான்....

"2.ஓ' படத்தின் படப்பிடிப்பு நூறு நாட்களை கடந்து உள்ளது. இந்த நூறு நாட்களில் இரண்டு முக்கிய சண்டைக் காட்சிகளை படமாக்கியிருக்கிறேன். குறிப்பாக ரஜினியும், அக்‌ஷய் குமாரும் சண்டை போடும் கிளைமாக்ஸ் காட்சியை முடித்திருக்கிறேன். இன்னும் 50 சதவிகித படப்பிடிப்பு பாக்கி உள்ளது," என்று கூறியுள்ளார் ஷங்கர்.

350 கோடி

350 கோடி

இந்திய திரையுலகமே அதிகம் எதிர்பார்க்கும் இப்படத்தை லைகா நிறுவனம் ரூ 350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது. ரஜினியுடன் அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன் நடிக்கின்றனர்.

அமெரிக்காவில்..

அமெரிக்காவில்..

இங்கு ஷூட்டிங் நடக்கும் அதே நேரம், 2.ஓ படத்தின் தொழில்நுட்பப் பணிகள், ரோபோ உருவாக்கம் அனைத்தும் அமெரிக்காவில் நடக்கிறது. அதைப் பார்வையிடவும், ரோபோ உருவாக்கத்துக்கு மாடலாக உடனிருக்கவும்தான் ரஜினி அமெரிக்காவில் தங்கியிருக்கிறார்.

English summary
Rajinikanth's Shankar directed 2.O movie shooting has crossed 100 days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil