»   »  டெல்லியில் நாளை தொடங்குகிறது ரஜினியின் 2.ஓ மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு!

டெல்லியில் நாளை தொடங்குகிறது ரஜினியின் 2.ஓ மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி இரு வேடங்களில் நடிக்கும் 2.ஓ படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு நாளை டெல்லியில் தொடங்குகிறது.

ஷங்கர் இயக்கும் இந்த மெகா பட்ஜெட் படத்தின் இரண்டுகட்டப் படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து முடிந்துவிட்டன. அடுத்து மூன்றாவது கட்டப் படப்பிடிப்பு நாளைமுதல் டெல்லியில் தொடங்குகிறது.


2.O third schedule to start in Delhi

படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனத்தின் நிர்வாகி ராஜூமகாலிங்கம் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார். டெல்லியில் நடக்கும் படப்பிடிப்பில் ரஜினி மற்றும் வில்லனாக நடிக்கும் அக்ஷய்குமார் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.


அக்ஷய் நடிக்கவிருக்கும் மொத்தக் காட்சிகளையும் அங்கே படமாக்கிவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.


இம்மாதம் டெல்லியில் நடக்கவிருக்கும் பத்மவிருதுகள் வழங்கும் விழாவில் ரஜினி பத்மவிபூஷன் விருது பெற உள்ளார். 2.ஓ படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த விழாவில் ரஜினி கலந்து கொள்கிறார்.

English summary
The third schedule of Rajinikanth's 2.O shooting will be starts in Delhi from Tomorrow.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil