For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  அர்ஜுன் நடிப்பில் மூன்று மொழிகளில் 'காட்டுப்புலி'!

  By Shankar
  |
  Haripriya and Arjun
  அர்ஜுன் நடிப்பில் டினு வர்மா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் படம் காட்டுப்புலி.

  இயக்குநர் டினு வர்மா, இந்தியில் சண்டைப் பயிற்சி இயக்குநராக இருப்பவர். கத்தார், பார்டர், வீர், குதா கவா உள்ளிட்ட 50 படங்களுக்குமேல் ஆக்ஷனில் கலக்கியவர் டினு வர்மா. அதற்காக 7 பிலிம்பேர் விருதுகளையும் அள்ளியவர்.

  இப்போது முதல் முறையாக அர்ஜுனுடன் இணைந்து காட்டுப் புலியில் அனல் பறக்க வைக்கப் போகிறார்களாம்.

  ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில்தான் முதல் முறையாக அர்ஜுனை சந்தித்துள்ளார் டினு வர்மா. அர்ஜுனின் ஒர்க்கிங் ஸ்டைல் பிடித்துப்போக அவரையே தனது படத்தின் நாயனாக்க முயற்சித்து வெற்றியும் பெற்றார்.

  நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அசத்தல் ஜங்கிள் த்ரில்லர் என்று 'காட்டுப் புலி'யைச் சொல்லலாம். அத்தனை அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படம் முழுவதும். படம் பார்ப்பவர்கள் காட்டுக்குள் மாட்டிக் கொண்ட உணர்வு நிச்சயம் இந்தப் படத்தில் கிடைக்கும்.

  ரஜினீஷ் - சாயாலி பகத், அமீத் - ஹனாயா, ஜஹான்-ஜெனிபர் ஆகிய மூன்று ஜோடிகள் காட்டுக்குள் ஒரு ட்ரிப் போகிறார்கள். அங்கே ஒரு முக்கியமான நெருக்கடியில் மாட்டிக் கொள்கிறார்கள். அப்போது அர்ஜூன் - பிரியங்கா தேசாய் ஜோடியையும் அவர்களின் மகள் தன்யாவையும் சந்திக்கிறார்கள். அவர்களை நெருக்கடியிலிருந்து அர்ஜுன் எப்படி காப்பாற்றிக் கொண்டுவருகிறார் என்பது கதை.

  தலைக்கோணம் பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் தங்கியிருந்து படமாக்கியிருக்கிறார்கள் இந்தப் படத்தை. அனைத்து நட்சத்திரங்களுமே இங்கே கேம்ப் அடித்திருக்கிறார்கள். ராட்சத பல்லி, சிறுத்தைப் புலி, அட்டை, விஷப் பாம்புகள் என காட்டின் அத்தனை கொடிய விலங்குகளின் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் துணிந்து இந்தப் படத்தை படமாக்கியுள்ளனர்.

  இந்தப் படத்தில் 50 குதிரைகள் பயன்படுத்தியுள்ளனர். இந்தக் குதிரைகளைத் தேடி சிறுத்தைப் புலிகள் அடிக்கடி வந்து கொண்டிருந்தன. இவற்றிடமிருந்து பாதுகாக்க ஏராளமான காவலர்களை நியமித்து குதிரைகளைப் பார்த்துக் கொண்டார்கள் காட்டுப் புலி குழுவினர்.

  பிரியங்கா தேசாய் இதில் டாக்டராக, அர்ஜுனின் மனைவியாக, மகளுக்காக மருத்துவத் தொழிலையே தியாகம் செய்யும் தாயாக நடித்துள்ளார்.

  முன்னாள் மிஸ் இந்தியா சாயாலி பகத்தும் முன்னாள் மிஸ்டர் இந்தியா ரஜ்னீஷும் இதில் ஜோடி சேர்ந்துள்ளனர். இன்னொரு நாயகியான ஹனாயா மிஸ் அஸாம் பட்டம் வென்றவர். .

  அர்ஜூனின் ஆக்ஷன் வேட்கைக்கு செம தீனியாக அமைந்துள்ளதாம் இந்தப் படம். பொதுவாகவே காட்டுப் பகுதியில் ஆக்ஷன் காட்சிகள் அமையும் வகையில் வந்த அர்ஜுன் படங்கள் அனைத்துமே பெரும் வெற்றி பெற்றவை. உதாரணம் ஜெய்ஹிந்த். அந்த செண்டிமெண்ட் இந்தப் படத்திலும் தொடரும் என நம்புகிறார் அர்ஜூன்.

  காட்டுப் புலிக்காக அண்டர்வாட்டர் பயர், குதிரை மற்றும் கார் துரத்தல் காட்சிகளில் மயிர்க்கூச்செரியும் சாகஸங்களை செய்துள்ளார் அர்ஜூன்.

  "ஆக்ஷன் பட பிரியர்களுக்கு காட்டுப் புலி நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை", என்கிறார் இயக்குநர் டினு வர்மா.

  English summary
  Action King Arjun has teamed up with Bollywood's renowned action master Tinu Varma for the first time for a Tamil - Telugu-Hindi tri-lingual. Titled as Kaattu Puli, the film is the first Jungle Thriller in Tamil and Arjun plays the role of a saviour of 3 new married couples from a sensational risk in the highly notorious jungle. Tinu Varma, the action director of blockbusters like Veer, Gaddar, Border, Kutha Gawa is the director of Kaattu Puli

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more