»   »  'டைரக்டர் மட்டும் இல்லேன்னா... '-அதிர்ச்சியில் அஞ்சலி!

'டைரக்டர் மட்டும் இல்லேன்னா... '-அதிர்ச்சியில் அஞ்சலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தம்பி வெட்டோத்தி சுந்தரம் படப்பிடிப்பில் நடந்த திடீர் தாக்குதலில் இயக்குநரால் காப்பாற்றப்பட்டார் நடிகை அஞ்சலி.

'இயக்குநர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் நான் தப்பித்திருக்கவே முடியாது', என்கிறார் அஞ்சலி அதிர்ச்சி விலகாமல்.

அஞ்சலியும் கரணும் ஜோடியாக நடிக்கும் 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படப்பிடிப்பு குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள மங்கலம் பகுதியில் நடந்தது. நேற்று பகல் அஞ்சலி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.

அப்போது 7 பேர் அடங்கிய கும்பல ஆட்டோவில் வந்து இறங்கி, 'குமரி மாவட்டத்துக்காரன் கதையை எப்படி சினிமாவாக எடுக்கலாம்' என கேட்டு இயக்குனர் வடிவுடையானை அடித்து உதைத்தது. சட்டை கிழிக்கப்பட்டது. கார் உடைக்கப்பட்டது. படப்பிடிப்பு சாதனங்கள் உடைக்கப்பட்டன.

ஹீரோயின் அஞ்சலியையும் தாக்க தேடினார்கள். அப்போது அஞ்சலியை போர்வையால் போர்த்தி ஒரு வீட்டுக்குள் ஒளித்து வைக்கும்படி உதவி இயக்குநர்களுக்கு உத்தரவிட்டார் இயக்குநர். இதர துணை நடிகர், நடிகைகள் அலறியடித்து ஓடினார்கள்.

"தக்க சமயத்தில் இயக்குநரும் உதவி இயக்குநர்களும் என்னைக் காப்பாற்றினார்கள். அந்த கும்பல் கையில் கிடைத்திருந்தால் நான் என்ன ஆகி இருப்பேன் என்று பயமாக இருக்கிறது.." என்றார் அஞ்சலி.

Please Wait while comments are loading...