மீண்டும் தெய்வமகன்

பழைய படங்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துவதாக இருந்தால் பெரும் தொகையை கட்டணமாக தயாரிப்பாளர் கவுன்சிலுக்குத் தர வேண்டும். அந்தத் தொகை அந்தப் பழைய படங்களின் தயாரிப்பாளர்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும் என சில நாட்களுக்கு முன்புதான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
சகட்டுமேனிக்கு பழைய ஹிட் படங்களின் பெயர்களை பயன்படுத்திக் கொண்டு குண்டக்க மண்டக்க படம் எடுத்து பழைய படங்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் அதுகுறித்து யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. 2 நாட்களுக்கு முன்பு தெய்வமகன் படத்தின் பெயரை பாக்ஸ் ஆபிஸ் கம்பெனி என்ற பட நிறுவனம் பதிவு செய்துள்ளது.
இப்படத்தில் தேவ் என்கிற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறாராம். மீரா ஜாஸ்மின் ஹீரோயினாக நடிக்கவுள்ளாராம். வெற்றி என்கிற புதுமுகம் இயக்கப் போகிறார். விரைவில் ஷூட்டிங் ஆரம்பிக்கவுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பு கூறுகிறது.
இப்படம் பழைய தெய்வமகன் இல்லை என்றும், இந்தக் காலத்திற்குத் தேவையான அனைத்து மசாலாக்களும் நிறைந்த கமர்ஷியல் படம் என்று இயக்குநர் வெற்றி கூறியுள்ளார்.
இதேபோல, படிக்காதவன், ஜானி உள்ளிட்ட 6 பழைய சூப்பர் ஹிட் படங்களின் டைட்டில்கள் கடந்த சில நாட்களில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











