»   »  கபாலி 75 சதவீத படப்பிடிப்பு மலேசியாவில்தான்!

கபாலி 75 சதவீத படப்பிடிப்பு மலேசியாவில்தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் கபாலி படத்தின் 75 சதவீதக் காட்சிகள் மலேசியாவில் மட்டுமே நடைபெறும் என்று தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார்.

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் செப்டம்பர் மாதம் தொடங்கியது. தொடர்ந்து ஒரு மாத காலம் இங்கு படப்பிடிப்பு நடந்தது.

கடந்த 26-ம் தேதி இரண்டாவது கட்டப் படப்பிடிப்புக்காக மலேசியா புறப்பட்டார் ரஜினி. அங்கு அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. 27-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கியது. மலாக்காவில் உள்ள சிறைச்சாலையில் முதல் நாள் படப்பிடிப்பு நடந்தது.

75 percent of Kabali shooting in Malaysia

தொடர்ந்து நவம்பர் 2-ம் தேதி வரை மலாக்காவில் படப்பிடிப்பு நடக்கிறது. பின்னர் செபாங் மற்றும் கோலாலம்பூரில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

கபாலி படத்தின் 75 சதவீத காட்சிகள் மலேசியாவிலேயே படமாக்கப்பட உள்ளன. தாய்லாந்து மற்றும் ஹாங்காங்கிலும் சில காட்சிகள் படமாக உள்ளன.

வரும் டிசம்பர் வரை இங்கு படப்பிடிப்பு நடக்கிறது. ரஜினி தன் பிறந்த நாளான டிசம்பர் 12 அன்று சென்னையிலிருப்பார் என்று கூறப்படுகிறது.

English summary
Rajinikanth and team Kabali have already finished the Chennai schedule of the film. Now, team is camping in Malaysia for a one month long schedule. Our sources say that more than 75% of the film will be shot in Malaysia, Thailand and Hong Kong.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil