Don't Miss!
- News
கைக்குழந்தைக்கு "தனி டிக்கெட்" கேட்ட விமான நிறுவனம்! பெற்றோர் எடுத்த விபரீத முடிவு! அலறிய ஏர்போர்ட்
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
23 ஆண்டுகளுக்கு பிறகு கோனேரிப்பட்டி காவிரி பாலத்தில் படமாகும் 'மிக மிக அவசரம்'!
அமைதிப்படை 2, கங்காரு ஆகிய படங்களை தனது வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி 'மிக மிக அவசரம்' என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இதன் படப்பிடிப்பு சேலம் மாவட்டம் பவானி அருகேயுள்ள கோனேரிப்பட்டி பாலத்தில் நடைபெற்றுவருகிறது. சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு 'பவுனு பவுனுதான்' படத்தின் படப்பிடிப்பு இங்கு நடந்தது. பாக்யராஜும், ரோகிணியும் தண்ணீருக்குள் குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

மிக மிக அவசரம் படத்தில் இந்த கோனேரிப்பட்டி பாலம் முக்கிய இடம்பிடித்துள்ளதால் 23 ஆண்டுகளுக்கு பிறகு படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்துள்ளனர்.
நீண்ட காலத்திற்கு பின் படப்பிடிப்பு நடைபெறுவதால் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் வந்து பார்வையிட்டு செல்கிறார்கள். இங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்ட பவுனு பவுனுதான் படம் போலவே இந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று வாழ்த்தினார்களாம்.

படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் சீமான் நடிக்கிறார். கதாநாயகனாக கோரிப்பாளையம் ஹரிஷ், கதாநாயகியாக கங்காரு, வந்தாமல ஸ்ரீஜா மற்றும் வழக்கு எண் முத்துராமன், சேதுபதி படத்தில் விஜய்சேதுபதியின் நண்பனாக நடித்த லிங்கா, ஆண்டவன் கட்டளை அரவிந்த், இயக்குநர் சரவண சக்தி, வீ.கே.சுந்தர்,வெற்றி குமரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த படம் மூலம் கங்காரு, அமைதிப்படை 2 படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குநராக அறிமுகமாகிறார். தயாரிப்பு வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ். ஒளிப்பதிவு பாலபரணி. எடிட்டிங் சுதர்சன்.

மேலும் முக்கிய அம்சமாக இந்த படத்தின் படப்பிடிப்புக்கு எபிக் வெப்பன் ஹீலியம் 8கே சென்சார் என்ற அதிநவீன கேமரா பயன்படுத்தப்படுகிறது. இது 8கே ரெசொல்யூஷன் அடங்கிய கேமரா ஆகும். இதன் மூலம் காட்சிகளை மிக துல்லியமாக படம் பிடிக்கலாம். இந்த கேமரா இந்தியாவிலேயே முதன்முறையாக 'மிக மிக அவசரம்' படத்தில் தான் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.