»   »  ஷூட்டிங்கில் அப்பாஸ் காயம்

ஷூட்டிங்கில் அப்பாஸ் காயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெலுங்குப் பட ஷூட்டிங்கின்போது நடிகர் அப்பாஸ் காயமடைந்தார்.

தமிழில் கைவிடப்பட்டு விட்ட நடிகரான அப்பாஸ், தற்போது தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். ருத்ரமணி என்ற அப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

அப்பாஸும், வில்லன் சத்யபிரகாஷும் மோதும் சண்டைக் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர். சில காட்சிகளில் அப்பாஸுக்குப் பதில் டூப் போடலாம் என நினைத்தார் ஸ்டண்ட் மாஸ்டர் பிரகாஷ்.

டூப் வேண்டாம், நானே ரிஸ்க் எடுத்து சண்டை போடுகிறேன் என்றார் அப்பாஸ். இயக்குநர் கலீலையும் அதற்கு சம்மதம் தெரிவிக்க வைத்தார். பின்னர் அந்த ரிஸ்க்கான காட்சிக்காக தயாரானார்.

ஆனால் வேகமாக பல்டி அடித்துத் தாவிக் குதிப்பது போன்ற அந்தக் காட்சியின்போது நிலை தடுமாறி விழுந்தார் அப்பாஸ். இதில் அவரது இடது கையில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அப்பாஸை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil