»   »  பச்சமரம் பத்திக்கிச்சு!

பச்சமரம் பத்திக்கிச்சு!

Subscribe to Oneindia Tamil

அபிநயஸ்ரீயின் அட்டகாச குத்தாட்டத்தில் பகடை படம் படு குஜாலாக வளர்ந்து வருகிறது.

அமிர்தாலயா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம்தான் பகடை. என்.டி.ஆரின் பேரனான தாரகரத்னா நடிக்கும் படம் இது. ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் இப்படத்துக்காக அபிநயஸ்ரீ சம்பந்தப்பட்ட குத்தாட்டத்தை, கொளுத்தும் வெயிலில் எடுத்தனர். அதுவும் எங்கு வைத்துத் தெரியுமா, அண்ணா சாலையில் உள்ள ஒரு உயரமான கட்டடத்தின் உச்சியில்.

படு குஜாலாக அபி ஆடியுள்ள இப்பாடலின் முதல் வரியே உசுப்பேத்துகிறது. தண்ணி ஊத்துடா, தண்ணி ஊத்துடா, பச்ச மரம் பத்திக்கிச்சு தண்ணி ஊத்துடா என்று ஆரம்பிக்கிறது இந்தப் பாடலின் வரிகள்.

இதுவரை இல்லாத அளவுக்கு இப்பாடலுக்காக கிளாமராக ஆடியுள்ளாராம் அபி. அவரது கைவசம் முன்பு போல வாய்ப்புகள் இல்லை. துணை நடிகையாக கூட யாரும் கூப்பிடுவதில்லை.

பிலிம் போடாமல் படம் எடுக்கும் பாபு கணேஷின் நடிகை படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்து வருகிறார். அதேபோல மன்சூர் அலிகானின் என்னைப் பார் யோகம் வரும் படத்திலும் தலை காட்டியுள்ளார்.

இந்த நிலையில் இப்போதெல்லாம் குத்தாட்ட சுந்தரிகளுக்குத்தான் குபேர வாழ்வு என்பதால், பகடை படத்தில் வரும் பாடலில் படு கிளாமராக குத்தாட்டம் போட்டுள்ளாராம் அபி.

இப்பாடல் மூலம் முழு நேர குத்தாட்ட நாயகியாக மாறும் எண்ணத்தில் உள்ளாராம் அபி.

இப்படம் முழுக்க அடிதடிக் காட்சிகள் நிறையவாம். ஒரு சண்டைக் காட்சியை கல் குவாரியில் வைத்து படு பயங்கரமாக எடுத்துள்ளனராம். எனவே அபியின் ஆட்டம், ரசிகர்களுக்குக் குளுமை கொடுக்கும்.

அபிக்கும் வளமை கொடுக்கட்டும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil