»   »  தெலுங்குக்கு போகும் அபிநயஸ்ரீ

தெலுங்குக்கு போகும் அபிநயஸ்ரீ

Subscribe to Oneindia Tamil

அபிநயஸ்ரீக்கு தெலுங்குப் பக்கம் பலமாக காற்றடிக்கிறது.

தனது குலுக்கல் ஆட்டத்தை மகள் அபிநயஸ்ரீயும் தொடரக்கூடாது, எப்பாடுபட்டாவது கதாநாயகியாக்கி விட வேண்டும் என்றுதான் முன்னாள் கவர்ச்சி நடிகை அனுராதா நினைத்தார். ஆனால் விதி யாரை விட்டது? அபிநயஸ்ரீயும் கவர்ச்சி நடிகையாகிவிட்டார்.

80களில் தமிழ் சினிமாவில் வில்லன்களைக் காட்டும்போது அவர்களுடன் அனுராதா, சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி போன்றவர்கள் அரைகுறை துணியுடன் இருக்க வேண்டும், ஒரு பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆட வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

ஆனால் இப்போது அப்படியில்லை. தமிழ் சினிமா வில்லன்கள் எல்லாம் மாறி விட்டார்கள். தேசதுரோக குற்றங்களில் ஈடுபட்டு கதாநாயகர்களிடம் அடிவாங்குவதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. இதில் கவர்ச்சி டான்ஸ் எங்கே பார்க்க?

மேலும் கவர்ச்சி நடிகைகளின் வேலையை கதாநாயகிகளே பார்த்துக் கொள்கிறார்கள். எனவே இருக்கும் ஒன்றிரண்டு கவர்ச்சி நடிகைகளும் தேவயானி, மீனா போன்ற கவர்ச்சி காட்ட முடியாத நடிகைகளின் படங்களில் நடித்து காலத்தை ஓட்டி வருகிறார்கள்.

அபிநயஸ்ரீயும் அதற்கு விதிவிலக்கல்ல. கிடைக்கிற சான்ஸை கெட்டியாக பிடித்துக் கொண்டு கவர்ச்சி மழை பொழிந்து வருகிறார். அண்மையில் பச்சை நிறமே படத்தில் நடித்தபோது அதற்கும் ஆபத்து வந்தது. எரியும் வளையத்துக்குள் நடனமாடிய போது, ஆடையில் தீப்பற்றிக் கொண்டது.

படப்பிடிப்புக் குழுவினர் உடனே தீயை அணைத்து காப்பாற்றி விட்டனர். முகத்தில் தீக்காயம் பட்டிருந்தால் என்னாவது என்று நினைத்து கலங்கிப் போய்விட்டாராம் அபிநயஸ்ரீ.

தமிழில் அதிகளவில் வாய்ப்பில்லை என்பதால் அபிநயஸ்ரீ மாநில எல்லைகளைத் தாண்டி கவர்ச்சி காட்டி தனது கலைத்தாகத்தை தீர்த்து வருகிறார். அப்படி தெலுங்கில் ஆர்யா என்ற படத்தில் அபிநயஸ்ரீ ஆடிய ஆட்டத்துக்கு பலத்த வரவேற்பு.

அதனால் தொடர்ந்து வாய்ப்புகள் குவிகிறது. ஆனால் எல்லாமே ஒரு பாடல் வாய்ப்புகள்தான். ஒன்றிரண்டு சீனாவது நடிப்பதற்கு ஸ்கோப் இருக்கிற மாதிரி கொடுங்க என்று கேட்டு வருகிறார் அபிநயஸ்ரீ.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil