அட! இன்னொரு நடிகரும் ஷூட்டிங்கை முடித்து விட்டாராம்.. இறுதிக்கட்டத்தில் பொன்னியின் செல்வன்!

சென்னை: பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை இயக்குநர் மணிரத்னம் மின்னல் வேகத்தில் முடித்து வருகிறார்.

நடிகர் ஜெயம் ரவியை தொடர்ந்து இன்னொரு பிரபலமான நடிகரும் தனது போர்ஷனை முடித்து விட்டதாக போட்டோக்களை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

அந்த நடிகர் வேறு யாருமில்லை நம்ம ரகுமான் தான். இயக்குநர் மணிரத்னத்துடன் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையே ஷேர் செய்துள்ளார்.

கனவு படம்

கனவு படம்

தமிழ் சினிமா இயக்குநர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் இத்தனை வருடங்கள் கழித்து தற்போது தான் இயக்குநர் மணிரத்னத்தின் மூலமாக உயிர்பெற்றுள்ளது. மல்டி ஸ்டார் படமான செக்கச் சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களை வைத்து பிரம்மாண்டமாக இந்த வரலாற்று காவியத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் மணிரத்னம்.

பொன்னியின் செல்வன் யார்

பொன்னியின் செல்வன் யார்

ராஜ ராஜ சோழ மன்னனின் இன்னொரு பெயர் அருள் மொழி வர்மன் அந்த மன்னனை சுற்றி புனையப்பட்ட கதை தான் பொன்னியின் செல்வன். பொன்னி ஆற்றில் சுந்தர சோழ மன்னர் தனது மனைவி மற்றும் மகன் அருள் மொழி வர்மனுடன் பொன்னி ஆற்றில் ஓடத்தில் செல்லும் போது, மகன் தவறி விழ, உடனடியாக பொன்னி நதி தாய் மகனை காப்பாற்றி தூக்கி மீண்டும் ஓடத்தில் சேர்த்ததால் பொன்னியின் செல்வன் என அழைக்கப்பட்டார் என அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதை இருக்கும்.

இறுதிக்கட்டத்தில் படப்பிடிப்பு

இறுதிக்கட்டத்தில் படப்பிடிப்பு

பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. லைகா நிறுவனம் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகிறது. குவாலியரில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படம் 75 சதவீதத்தை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொன்னியின் செல்வன் போர்ஷன் ஓவர்

பொன்னியின் செல்வன் போர்ஷன் ஓவர்

இந்த படத்தில் பொன்னியின் செல்வனாக நடிகர் ஜெயம் ரவி தான் நடித்து வருகிறார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாக ஷூட்டிங்கையும் தான் நிறைவு செய்து விட்டேன் என இயக்குநர் மணிரத்னத்துக்கு நன்றி தெரிவித்து அவர் பதிவிட்ட ட்வீட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

விடாத வந்தியத்தேவன்

விடாத வந்தியத்தேவன்

ஆனால், அப்படியெல்லாம் உங்களை விட்டு விட முடியாது இளவரசே இன்னமும் உங்கள் போர்ஷன் மீதம் இருப்பதாக நடிகர் கார்த்தி ஜெயம் ரவியின் ட்வீட்டுக்கு மறு ட்வீட் போட அதுவும் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. நடிகர் கார்த்தி இந்த படத்தில் கதையின் நாயகன் வந்தியத்தேவனாக நடித்து வருகிறார். முதலில் இந்த கதாபாத்திரத்தில் மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் கதையின் நாயகனாக நடித்த விஜய்சேதுபதி நடிக்கவிருந்த நிலையில், கால்ஷீட் பிசி காரணமாக அவர் படத்தில் இருந்து விலகினார்.

கசிந்த ஐஸ்வர்யா ராய் போட்டோ

கசிந்த ஐஸ்வர்யா ராய் போட்டோ

பொன்னியின் செல்வனில் மிகவும் முக்கியமான பெண் கதாபாத்திரமான நந்தினி கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்து வருகிறார். சமீபத்தில் நந்தினி தேவியாக பிரம்மாண்ட உடையில் ஐஸ்வர்யா இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் கசிந்து வைரலானது.

குந்தவை திரிஷா

குந்தவை திரிஷா

இந்த படத்தில் குந்தவையாக நடிகை திரிஷா நடித்து வருகிறார். அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை ரகசியமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து இயக்குநர் மணிரத்னத்துக்கு பயங்கர தலைவலியை கொடுத்து வருகிறார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ரகுமான் போர்ஷன் ஓவர்

ரகுமான் போர்ஷன் ஓவர்

இந்நிலையில், நடிகர் ரகுமான் பொன்னியின் செல்வன் படத்தில் தனது போர்ஷன் முழுமையாக முடிந்து விட்டதாக நடிகர் ரகுமான் அறிவித்துள்ளார். இயக்குநர் மணிரத்னத்துடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ரகுமானுக்கு என்ன ரோல்

ரகுமானுக்கு என்ன ரோல்

சியான் விக்ரம் ஆதித்ய கரிகாலனாகவும் ஜெயம் ரவி அருள்மொழி வர்மனகவும் கார்த்தி வந்தியத்தேவனாகவும் ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும் திரிஷா குந்தவையாகவும் பிரகாஷ் ராஜ் சுந்தர சோழ மகாராஜாவாகவும் சரத்குமார் பெரிய பழுவேட்டரையராகவும் பார்த்திபன் சின்ன பழுவேட்டரையராகவும் நடித்து வரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனின் நண்பர் பார்த்திபேந்திர பல்லவர் கதாபாத்திரத்தில் நடிகர் ரகுமான் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X