»   »  'காலா' ஷூட்டிங்கில் பிரபல நடிகர் படுகாயம்!

'காலா' ஷூட்டிங்கில் பிரபல நடிகர் படுகாயம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பா.இரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் 'காலா'. மும்பை தாராவியைக் கதைக்களமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தில் தாதா ரஜினியின் அடியாளாக நடிகர் அருள்தாஸ் நடிக்கிறார். இவர் 'நீர்ப்பறவை', 'சூது கவ்வும்', 'நான் மகான் அல்ல', 'கதகளி' உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் ஒளிப்பதிவாளராகப் படங்களில் பணியாற்றி நடிகரானவர்.

Actor was injured during the 'kaala' shooting

'காலா' படப்பிடிப்பு பூந்தமல்லியை அடுத்த ஈ.வி.பி பொழுதுபோக்குப் பூங்காவில் போடப்பட்டிருக்கும் தாராவி செட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஷூட்டிங்கில் ரஜினியைத் தாக்க வரும் வில்லங்களுடன் மோதி விரட்டியடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது.

Actor was injured during the 'kaala' shooting

இந்தக் காட்சியில் சமுத்திரக்கனி, அருள்தாஸ் உள்ளிட்டோர் நடித்தனர். அருள்தாஸ், வேகமாக வரும் ஜீப்பின் மீது தாவிக்குதித்து டிரைவரைத் தாக்குவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது டைமிங் மிஸ் ஆனதால், அருள்தாஸ் கீழே தவறி விழுந்தார்.

அருள்தாஸ் கால்களின் மீது ஜீப் ஏறியது. இந்த விபத்தில் அவரது கால் விரல்கள் நசுங்கின. உடனே, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு எழும்பு முறிவு கண்டுபிடிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை நடைபெற்றது. அதனால் நேற்று 'காலா' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

English summary
Actor Aruldoss was injured during the 'kaala' shooting. So, shooting was cancelled yesterday.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil