»   »  ஷூட்டிங்கில் விபத்து... ‘காயத்ரி’யாக விழுந்து ‘ஊர்மிளா’வாக எழுந்த "மியாவ்"!

ஷூட்டிங்கில் விபத்து... ‘காயத்ரி’யாக விழுந்து ‘ஊர்மிளா’வாக எழுந்த "மியாவ்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மியாவ் படத்தில் நாயகியாக நடித்து வரும் காயத்ரி, படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சிறு விபத்தைத் தொடர்ந்து தனது பெயரை ஊர்மிளா காயத்ரி என மாற்றியுள்ளார்.

குளோபல் வுட்ஸ் மூவிஸ் சார்பில் வின்சென்ட் அடைக்கலராஜ் தயாரித்து அறிமுக இயக்குனர் சின்னாஸ் பழனிச்சாமி இயக்கியுள்ள படம் 'மியாவ்'. பூனையைச் சுற்றிய கதைக்களம் என்பதால் இப்படத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Actress Gayathri changed her name after accident

இப்படத்தின் மூலம் காயத்ரி என்பவர் நாயகியாக அறிமுகம் ஆகிறார். தைரியமான விளம்பர மாடலாக நடிக்கும் காயத்ரியின் கதாபாத்திரத்தைக் கொண்டு தான் படம் நகருமாம்.

கதைப்படி காயத்ரிக்கு இரண்டு பாடல்களாம். அதில் ஒன்று பின்னி மில்லில் படமாக்கப்பட்ட போது எதிர்பாராத விதமாக கால் தடுமாறி கீழே விழுந்து விட்டார் காயத்ரி. இதில், அவருடைய முழங்கையும், முழங்கால் முட்டியும் இடம்பெயர்ந்து விட்டது.

இதனால் தன் பெயரை ஊர்மிளா காயத்ரி மாற்றி விட்டாராம் காயத்ரி. இது தொடர்பாக காயத்ரி கூறுகையில், "அந்த விபத்து வரை காயத்ரி என்ற பெயரோடு இருந்த நான், அதற்கு பின் ஊர்மிளா காயத்ரி என்று மாற்றி கொண்டேன். நிச்சயமாக இந்த பெயர் என்னுடயை வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என நம்புகிறேன். பொதுவாகவே பூனைக்கு ஒன்பது உயிர் உண்டு என்பதை நாம் கேள்வி பட்டிருக்கிறோம், அதே போல் எனக்கும் ஒன்பது உயிர்கள்...அதில் முதல் உயிரை இந்த மியாவ் படத்தின் மூலம் நான் பெற்று இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

English summary
The Meow movie actress Gayathri changed her name as Urmila, after she was met with an accident in the shooting spot.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil