»   »  மயங்கி விழுந்த அகத்தியன்!

மயங்கி விழுந்த அகத்தியன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Agathiyan
'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மயக்கம் போட்டு விழுந்தார் இயக்குநர் அகத்தியன்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அகத்தியன் இயக்கி வரும் படம் நெஞ்சத்தைக் கிள்ளாதே. இப்படத்தை தனது பாணியில் வித்தியாசமான காதல் கதையுடன் இயக்கி வருகிறார் அகத்தியன்.

விக்ராந்த், பாரதி ஜோடியில் உருவாகி வரும் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ஏற்கனவே கோலிவுட்டில் அதிகமாக உள்ளது.

படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறது. பொங்கலுக்கு படத்ைதத் திரைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதால் இரவு பகல் பாராமல் அகத்தியன் தீவிரமாக படம் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் வேலைப்பளு காரணமாக நேற்று அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. சங்கீதா டப்பிங் தியேட்டரில் ஒலிச்சேர்க்கைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார் அகத்தியன். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

சிகிச்சைக்குப் பின்னர் அவர் அங்கிருந்து திரும்பினர். சிறிய ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் அவர் மீண்டும் படப் பணிகளில் ஈடுபடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil