»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

இந்திப் பட ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயின் கால் முறிந்தது.

"ஜீன்ஸ்", "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய்.

இந்திப் பட உலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராய், தற்போது "காக்கி" என்றபடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நாசிக் அருகே நேற்று இந்தப் படத்திற்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அப்போதுஎதிர்பாராத விதமாக ஒரு ஜீப் ஐஸ்வர்யா ராய் மீது மோதியது. இதில் அவர் நிலை தடுமாறிஅருகிலிருந்த சப்பாத்திக் கள்ளி செடிகளின் மீது விழுந்தார்.

அப்போது அவர் இடது கால் முறிந்தது. மேலும் முதுகிலும் கைகளிலும் கூட பலத்த காயங்கள்ஏற்பட்டன.

இதையடுத்து ஐஸ்வர்யா ராய் உடனடியாக மும்பைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ளஹிந்துஜா மருத்துவமனையில் அவருக்கு ஆபரேஷன் நடைபெற்றது. மொத்தம் 10 இடங்களில்அவருக்குத் தையல் போடப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று அவருக்குச் சிகிச்சை அளித்த டாக்டர்தெரிவித்தார்.

மருத்துவமனைக்கு வெளியே நூற்றுக்கணக்கான ஐஸ்வர்யா ராயின் ரசிகர்கள் குவிந்தனர்.இதையடுத்து அவர்களைப் போலீசார் லேசான தடியடி நடத்திக் கலைத்தனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil