»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

"மகா" படத்தின் சண்டைக் காட்சியில் நடிக்கும்போது நடிகர் அஜித்குமாருக்குக் கால் முட்டியில் அடிபட்டு தசை நார்கிழிந்தது.

தனது நண்பர் "நிக் ஆர்ட்ஸ்" சக்கரவர்த்தியின் தயாரிப்பில் உருவாகும் "மகா" படத்தில் தற்போது நடித்து வருகிறார்அஜித்.

இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னை-கிண்டியில் உள்ள கெம்பகோலா மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் நேற்று அஜித் நடித்த சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. ஸ்டன்ட் மாஸ்டர் "கனல்" கண்ணன் அந்தக்காட்சியை இயக்கிக் கொண்டிருந்தார்.

உயராமான ஒரு இடத்தில் நின்றுகொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்த அஜித், திடீரென்று கால் இடறிக் கீழேவிழுந்தார். இதில் அவருடைய வலது கால் முட்டியில் அடிபட்டு, தசை நார் கிழிந்தது.

இதையடுத்து பதறிப் போன படப்பிடிப்புக் குழுவினர், அஜித்தை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு, காலில் கட்டுப் போடப்பட்டது.

மூன்று மாதங்களுக்குப் பின்னர் வலது கால் முட்டியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள்கூறியுள்ளனர்.

மேலும் சில நாட்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மகாசூட்டிங் கேன்சல் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் சூட்டிங்கை முடித்துவிட்டு வெளிநாட்டில் நடக்கும் கார் பந்தய பயிற்சிப் போட்டியில் பங்கேற்க அஜீத் முடிவுசெய்திருந்தார். அதன் பின்னர் சர்வதேச கார் பந்தயங்களிலும் பங்கேற்க முடிவு செய்திருந்தார். இதனால் படங்களின்எண்ணிக்கையை ஆண்டுக்கு இரண்டு, அல்லது மூன்றாகக் குறைத்துவிடவும் திட்டமிட்டிருந்தார்.

இப்போது கால் முட்டி பாதிக்கப்பட்டிருப்பதால் வெளிநாட்டு கார் பந்தய பயிற்சிக்குப் போவாரா என்று தெரியவில்லை.

ஏற்கனவே அஜீத்துக்கு முதுகுத் தண்டில் அடிபட்டு அறுவை சிகிச்சை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil