»   »  ஜெயலலிதா அல்ல, யாராலும் இந்த அஜீத்தை திருத்தவே முடியாது!

ஜெயலலிதா அல்ல, யாராலும் இந்த அஜீத்தை திருத்தவே முடியாது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் படப்பிடிப்பில் சண்டை காட்சியில் நடித்தபோது அஜீத்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

வீரம், வேதாளம் படங்களை அடுத்து மூன்றாவது முறையாக இயக்குனர் சிவா, அஜீத் ஒன்று சேர்ந்துள்ள படம் விவேகம். படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து வருகிறது.


இந்த படம் மூலம் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக கோலிவுட்டுக்கு வந்துள்ளார்.


காயம்

காயம்

பல்கேரியாவில் சண்டை காட்சியை படமாக்கியுள்ளார் சிவா. வழக்கம் போல டூப் வேண்டாம் நானே தான் நடிப்பேன் என்று அஜீத் நடித்துள்ளார். அப்போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.


அஜீத்

அஜீத்

காயத்தால் படப்பிடிப்பை ரத்து செய்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும் என்று கூறி அஜீத் வலியை பொறுத்துக் கொண்டு சண்டை காட்சியில் நடித்து முடித்துள்ளாராம்.


வேதாளம்

வேதாளம்

வேதாளம் படத்தில் நடிக்கும் போது அஜீத்துக்கு கழுத்தில் அடிபட்டது. சிகிச்சைக்கு பிறகு கழுத்தில் வலி அதிகமாக இருந்தபோதிலும் அதை பொருட்படுத்தாது நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஆரம்பம் படத்தில் நடிக்கும்போதும் அஜீத் காயம் அடைந்தார்.


ஜெயலலிதா

ஜெயலலிதா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஜீத் மீது பாசம் உண்டு. அதனால் அவரிடம் சண்டை காட்சியில் நீங்களே நடிக்க வேண்டாம், குடும்பம் இருக்கிறது, ரிஸ்க் எடுக்காமல் டூப் வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கினார். சரி சரி என்று தலையை ஆட்டிவிட்டு டூப் இல்லாமல் அவரே நடித்து அடிக்கடி காயம் அடைகிறார் அஜீத்.


English summary
According to reports, Ajith is injured while acting in a fight sequence for his upcoming movie Vivegam being directed by Siva.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil