வேற லெவல் சம்பவம் கன்ஃபார்ம்...லீக்கான ஏகே 61 வங்கி செட் போட்டோ...டிரெண்டிங்கில் தெறிக்குதே
சென்னை : அஜித் தற்போது நடித்து வரும் ஆக்ஷன் த்ரில்லர் படமான ஏகே 61 வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட கதை என ஆரம்பம் முதலே சொல்லி வருகிறார்கள். இதனால் கோலிவுட் மட்டுமல்ல பான் இந்தியாவே எதிர்பார்க்கும் படமாக மாறி உள்ள ஏகே 61.
Recommended Video
போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். மெகா பட்ஜெட் படமாக உருவாகி வரும் ஏகே 61 படத்தின் ஷுட்டிங் வேலைகள் ஏற்கனவே 60 சதவீதம் முடிந்து விட்டது. இன்னும் 40 சதவீதம் பணிகள் மட்டும் தான் பாக்கி.
ஒரு மாதத்திற்கு மேலாக ஐரோப்பா டூர் சென்றிருந்த அஜித்தும் திரும்பி வந்து விட்டார். விரைவில் புதிய கெட்அப்பிற்கு மாற உள்ளார். அதற்கு பிறகு புனேயல் இறுதிக்கட்ட ஷுட்டிங் துவங்கப்படும் என சொல்லப்படுகிறது.

முக்கியமான சீனே இது தான்
ஏகே 61 படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் 9 ஏக்கரில் சென்னை மவுண்ட் ரோடு வங்கி போன்று செட் அமைக்கப்பட்டு, ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்தப்பட்டது. படத்தின் முக்கிய பகுதியே இந்த வங்கி செட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் தான் என சொல்லப்பட்டு வந்தது.

ஏகே 61 வங்கி செட் வீடியோ
இந்நிலையில் தற்போது ஏகே 61 படத்திற்காக ஐதராபாத்தில் போடப்பட்ட வங்கியின் பிரம்மாண்ட செட்டின் வீடியோ க்ளிப்பிங் மற்றும் போட்டோக்கள் லீக்காகி, செம டிரெண்டாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் இதை வைரலாக்கி வருகிறார்கள். Your Bank என்ற பெயரில் அனைவரையும் ஈர்க்கும் வகையில் இந்த வங்கி செட் உள்ளது.

அச்சு அசலாய் அப்படியே இருக்கு
ஆனால் சென்னை அண்ணாசாலை அல்லது மவுண்ட் ரோடில் உள்ள எஸ்பிஐ வங்கியை அச்சு அசலாய் அப்படியே செட் போட்டிருக்கிறார்கள். வங்கி மட்டுமில்லை, வங்கியை சுற்றி உள்ள பகுதிகளையும் அப்படியே செட் போட்டு, எது ஒரிஜினல், எது செட் என கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இந்த செட் பிரம்மிக்க வைத்துள்ளது.

படத்தை எப்போ எடுத்து முடிப்பீங்க
மகாநதி சங்கர் போலீஸ் கெட்அப்பில், அவருடன் செக்யூரிட்டி உடையில் சிலர் கையில் துப்பாக்கியுடன் நிற்கும் போட்டோக்களுறும் கசிந்துள்ளன. இதனால் படத்தை பார்க்க ரசிகர்கள் செம ஆர்வமாக உள்ளனர். ஏகே 61 படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாத மத்தியில் நிறைவடையும் என சொல்லப்படுகிறது.

ஆகஸ்ட் மாதம் அப்டேட் வருது
ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை ஆகஸ்ட் 13 ம் தேதி, மறைந்த தனது மனைவி ஸ்ரீதேவியின் பிறந்தநாளை முன்னிட்டு போனி கபூர் வெளியிட உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஏகே 61 படம் டிசம்பர் அல்லது 2023 ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு தள்ளி போவதாகவும் ஏற்கனவே தகவல் பரவி வருகிறது.

ஏகே 61 தீபாவளி ரிலீசா
ஆனால் தற்போது செப்டம்பருக்கு முன்பே ஷுட்டிங் முடிந்து விடும் என சொல்லப்படுவதால், ஆரம்பத்தில் சொல்லப்பட்டது போல் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த புதிய தகவலால் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர். ஏகே 61 செட் போட்டோ மற்றும் வீடியோக்களை அதிகம் பகிர்ந்து, #AK61, #Ajithkumar, #HVinoth போன்ற ஹேஷ்டேக்குகளை டிரெண்டாக்கி வருகின்றனர். அதைபோல் அஜித் நேற்று துப்பாக்கி சுடும் பயிற்சியில் பங்கேற்க வந்த போட்டோ மற்றும் வீடியோக்களையும் அதிகம் வகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











