»   »  தல அஜித் பட சூட்டிங்கிற்கு மழை செய்த இடையூறு.. திரைப்பட யூனிட்டுக்கு கூடுதல் செலவு

தல அஜித் பட சூட்டிங்கிற்கு மழை செய்த இடையூறு.. திரைப்பட யூனிட்டுக்கு கூடுதல் செலவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு மழையால் பாதிக்கப்பட்டால் பல லட்சம் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாம்.

சிறுத்தை, வீரம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய சிவா, மீண்டும் அஜித்துடன் இணைந்துள்ளார்., பெயர் சூட்டப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட பல இடங்களில் நடந்து வருகிறது.

Ajith's new film will be shoot in Kolkata

ஏற்கெனவே கொல்கத்தா போனபோது திட்டமிட்டபடி மொத்தப்படப்பிடிப்பையும் முடிக்கமுடியாத அளவு கடும்மழை பெய்துள்ளது. வெளிப்புறப் படப்பிடிப்புக்காகவே அங்கு போனார்கள் என்பதால் மழை நேரத்தில் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை.

எனவே, சென்னையில் சூட்டிங் முடிந்தபிறகு திரும்பவும் கொல்கத்தா போய் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டியிருக்கிறது. அல்லது, தற்போது சென்னையில் நடைபெறும் சூட்டிங் காட்சிகளோடு படத்தின் பணிகள் முடிவடைந்திருக்கும்.

எதிர்பாராத இயற்கை தடை காரணமாக திரும்பவும் படக்குழு கொல்கத்தா செல்ல வேண்டியிருக்கிறது. இதனால் பல லட்சங்கள் அதிகமாக செலவீனம் ஏற்பட்டுள்ளது.

English summary
Ajith's new film will be shoot in Kolkata from where they return back to chennai due to heavy rain.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil