»   »  6 ஆண்டுகள் கழித்து மீண்டும் நேருக்கு நேர் வரும் தல, தளபதி

6 ஆண்டுகள் கழித்து மீண்டும் நேருக்கு நேர் வரும் தல, தளபதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தல 57 மற்றும் விஜய் 61 ஆகிய படங்களின் படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடக்க உள்ளது.

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் தல 57 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பின்னி மில்ஸில் நடக்க உள்ளது. அதே பின்னி மில்ஸில் தான் பிரமாண்ட செட் போட்டு விஜய் 61 படத்தை எடுக்கிறார்கள்.

Ajith, Vijay to come together again

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 61 படத்தில் ஜோதிகா, சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் உள்ளனர். படத்திற்கு இன்று பூஜை போட்டுள்ளனர்.

பின்னி மில்ஸில் அஜீத், விஜய் ஆகியோரின் படப்பிடிப்பு ஒரே நேரத்தில் நடப்பது இது முதல் முறை அன்று. முன்னதாக அஜீத்தின் மங்காத்தா மற்றும் விஜய்யின் வேலாயுதம் ஆகிய படங்களின் படப்பிடிப்பு ஒரே நேரத்தில் பின்னி மில்ஸ் வளாகத்தில் நடந்தது. அப்போது அஜீத்தும், விஜய்யும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் கூட வைரலானது.

இந்நிலையில் இருவரும் மீண்டும் ஒரே இடத்தில் நடிக்க உள்ளனர். இம்முறையும் இருவரும் சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
After six long years, Ajith and Vijay movies shootings are going to happen in the same place. The two leading heroes of Kollywood are going to attend shooting in Binny mills compound in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil