»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

ஆளவந்தான் எப்படி வந்தான் என்பதைப் பற்றி, அவனைத் திரைக்கு அழைத்துவந்த கலை நாயகன் கமல் அளித்தபேட்டி:

நான் எழுதிய தாயம் என்ற நாவலை திரைக்கதையாக்க எனக்கு இத்தனை ஆண்டுகள் பிடித்திருக்கிறது.

இதற்கு என் சோம்பேறித்தனம் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் உடனடியாத் திரைக்கதையாக்கியிருந்தால் இந்தளவுக்கு வந்திருக்குமா என்று எனக்குத் தெரியாது.

இந்தத் திரைக்கதையை உருவாக்க பலரை நான் குழப்பியிருக்கிறேன்.

அதன் மூலம் நான் தெளிவு பெற்றிருக்கிறேன்.

ஒரு எழுத்தாளனாக நான் கற்பனையில் பார்த்த இந்த நாவல் புதிய பரிமாணத்தோடு புயல்போல் வந்திருக்கிறது.இந்தத் திரைக் கதையில் திடீரென முளைத்த நந்து கதாத்திரத்திற்கு இணை ஏதுமில்லை. திரைக்கதைக்கு பலமேநந்து பாத்திரம் தான்.

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதைபோல நந்து என்னுள் பூகம்பத்தை விளைந்திருக்கிறான். நந்துவைப் பற்றிநிறைய சொல்லவேண்டும்.

என் நடிப்பிற்கு தீனிபேடும் வகையில் நந்து பாத்திரம் அமைந்திருக்கிறது.

நந்து கேரக்டர் இன்னொரு கேரக்டரான விஜய்யை விட 5 கிலோ எடை அதிகம் உடையவன். இந்த எடைஅதிகரிப்பை நான் சாப்பிட்டு ஏற்படுத்தவில்லை. உடல்பயிற்சி மூலமாகத் தான் ஏற்படுத்தினேன் என்பதைநினைக்கும் போது சந்தோஷமாகத் தான் இருக்கிறது.

நந்துவின் நடை, உடை, பாவணை, அவனது எண்ண ஓட்டம் எல்லாம் நாகரீகம் பயின்ற ஒரு குகை வாழ்மனிதனைப் போன்று இருக்கும். நந்துவின் இடது கண்ணைவிட வலது கண் சற்று சிறியதாக இருக்கும்.நந்துவுக்கும், விஜய்க்கும் உள்ள ஒற்றுமை இருவர் கைகளிலும் ஒர் உடல் இரட்டைத் தலையுடன் பாம்பு பச்சைகுத்தப்பட்டிருக்கும்.

ஒரு எழுத்தாளனாக, நடிகனாக கற்பனையை செதுக்கிக் கொடுத்துள்ளேன், என்னுடன் உள்ள தொழில்நுட்பநிபுணர்களுடன்.

நாயகிகள் இருவரும் நல்ல நண்பர்கள். மனிஷாவுடன் இந்தியனில் நடித்த பிறகு, இப்போது மீண்டும்கூடியிருக்கிறேன்.

அவர் மிகப் பிரமாதமாகத் தனது நடிப்பாற்றலைக் காட்டியிருக்கிறார்.

ரவீனா டாண்டனுடன் நான் நடிக்கும் முதல் படம் இதுதான். நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய ஆர்வமும்திறமையும் அவரிடம் இருக்கிறது. 2 நாட்களிலேயே அவருடன் பல நாட்கள் நடித்துப் பழகிய மாதிரி ஒருபிரமையை என்னுள் ஏற்படுத்தியவர்.

இசை, சண்டைக்காட்சிகள், ஒப்பனை , உடை என்று அனைத்துத் துறையினரும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு செயல்பட்டார்கள்.

ஆளவந்தான் மிகவும் கடினமான படம். கடின உழைப்பாளிகளைக் கொண்ட குழு எங்களுக்குக் கிடைத்ததால்அதை எளிதாக எடுத்துவிட்டோம்.

எங்கள் பணி வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓடிப்போனவர்களும் உண்டு.

கடமை தவறாத வீரர்கள் மட்டும் களத்தில் நின்றார்கள். இவர்களுக்கெல்லாம் நன்றி என்ற ஒரே வார்த்தையில்சொல்லி முடித்துவிட நான் விரும்பவில்லை.

ஆளவந்தான் அடையும் பெரும் வெற்றியே அந்த உழைப்புக்கு பெரும் பரிசாக அமையும்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil