»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இவர்களின் மனம் திறந்த பேட்டிகள்:

ரவீனா டாண்டன்

இவருக்கு இதுதான் தமிழில் 2 வது படம். முதல் படம் அர்ஜூனின் சாது. சாது இவருடைய வளர்ச்சிக்கு (தமிழில்) தோதாக அமையவில்லை. இப்போதுகலைஞானியின் கண்ணில் பட்டிருக்கிறார். கமலின் அநாயசத் திறமைகளைக் கண்டு வாய்பிளக்கும் இவர் கூறுகையில்,

ஏற்கனவே நான் கமல்ஜியின் விசிறி. ஆளவந்தானில் கமலுடன் சேர்ந்து நடித்ததை அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தப் படத்தில் கமலுடன் பணியாற்றியதன் மூலம் சினிமாவில் தொழில்நுட்ப யுக்திகளைக் கற்றுக்கொண்டேன். மேலும் கமலுடன் ஒரு படத்திலாவதுஅசிஸ்டன்ட் டைரக்டராக பணிபுரிய வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.

இந்தியாவிலேயே கமலைப்போல் ரிஸ்க் எடுத்து நடிக்கும் நடிகர் யாரும் இல்லை. நான் இதுவரை நடித்துள்ள 40 படங்களில் என்ன அனுபவம் கிடைத்ததோ, அதுமுழுவதும் இந்த ஒரு படத்திலேயே கிடைத்துவிட்டது.

ஆளவந்தான் இந்த ஆண்டில் மட்டுமல்ல, எந்த ஆண்டிலும் சிறந்த படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

மனீஷா கொய்ராலா:

இந்தியனில் கமலுடன் நடித்த அனுபவம் மனீஷாவுக்கு இருக்கிறது. அந்தப் படத்தில் ஜாஹிர் உசேன் தபேலாவாக மாறி கமல் வாசிக்க வாசிக்க நாதபரிமாணங்களை வெளிப்படுத்தியவர்.

அதே ருசியை வித்தியாசமான கோணத்தில் வெளிப்படுத்த விரும்பி கமல் இவரை அனுகியிருக்கிறார் போலும். ஆளவந்தானிலும் நடித்ததில் மிகுந்தமகிழ்ச்சியுடன் இருக்கிறார் மனீஷா. ஆளவற்தான் அனுபவம் பற்றி இவர் கூறியதாவது,

கமல்ஜி ஆளவந்தான் கதையை என்னிடம் கூறும்போதே நான் அந்தப் படத்தைப் பார்த்தது போல உணர்ந்தேன். கமல்ஜி உவ்வொரு ரசிகனையும்இன்டெலக்சுவல் லெவலுக்கு உயர்த்த விரும்புகிறார்.

வருடத்திற்கு ஒரு படத்திலாவது அவருடன் ஒர்க் பண்ணவேண்டும் என்று விரும்புகிறேன்.

இந்தியன் படத்தில் நடித்தபோதே அவரது அசாத்திய திறமைகளைக் கண்டு வியந்து, அவரது ரசிகையாகி விட்டேன் என்றார்.

டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா:

கமலுடன் ஏற்கனவே சத்யாவில் பணியாற்றி அனுபவம் இவருக்கு உண்டு.

கமலின் 101-வது படமான "ஏக் து ஜே கேலியே" வில் இவர் பாலசந்தருக்கு அசிஸ்டெண்டாக இருந்திருக்கிறார்.

தற்போது கமலின் 201-வது படமான அபேவுக்கும் (ஆளவந்தானின் இந்தி ரீமேக்) டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா தான்.

கமலின் திறமைகளை வானளாவப் புகழும் இவர் கூறுகையில், கமலின் சாதனைக் கிரீடத்தில் இன்னொரு மைல் கல் ஆளவந்தான். என்னிடம் அவர்கதையை சொன்னதுமே, இது ஒரு ஹைடெக் படம் என்பதை உணர்ந்தேன்.

சண்டைக் காட்சிகளில் இதுவரை பார்த்திராத அளவுக்கு அற்புதமாக இருக்கும். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிராண்ட் பேஜூடன், நம்ம ஊர் விக்ரம்தர்மாவும் இணைந்து இந்த காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.

கிராண்ட் பேஜ் , ஜாக்கிஜானின் மிஸ்டர் நைஸ் கை, எம்.ஐ.2 போன்ற படங்களுக்கு சண்டைக்காட்சிகளை அமைத்தவர்.

அதேபோல கிராபிக்ஸ் காட்சிகளும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

தாணு படத்திற்கு பணத்தை தண்ணீராக அள்ளி அள்ளி இறைத்தார் என்றுதான் சொல்லவேண்டும்.

கமலுடன் சேர்ந்து இதேபோல மீண்டும் ஒரு படத்தில் ஒர்க் பண்ண முடியாதா என்று ஏக்கமாக இருக்கிறது என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil